ரிடையர்மென்ட் கவலையை விடுங்க: இந்த திட்டங்களில் சேருங்க

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

சென்னை: நீங்கள் பணி ஓய்வு பெற முடிவு செய்யும் நிலையில் நிதிநிலை பாதுகாப்புடன் நீங்கள் உங்கள் ஓய்வூதியத் தொகையை முதலீடு செய்யும் வகையிலான பல்வேறு ரிடையர்மென்ட் மற்றும் பென்ஷன் திட்டங்கள் இந்தியாவில் அமலில் உள்ளன. நீங்கள் எதிர்பாராதவிதமாக இறக்க நேரும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு தொடர்ந்து பணம் கிடைக்க வழி வகை செய்யக்கூடிய திட்டங்களும் உள்ளன.

முதலீடு செய்யத்தக்க சிறந்த சில ரிடையர்மென்ட்/பென்ஷன் திட்டங்களைப் பார்ப்போம்.

எல்ஐசி ஜீவன் அக்ஷய் VI

எல்ஐசி ஜீவன் அக்ஷய் VI என்பது கணிசமானதொரு தொகையை செலுத்தி பெறக் கூடிய ஒரு உடனடி ஆண்டுத்தொகை (ஆன்யூட்டி) திட்டமாகும். இத்திட்டம், ஒரு குறிப்பிட்ட தொகைக்கான ஆன்யூட்டி பேமெண்ட்டுகளை பெறுதற்குரியவரான ஆன்யூட்டன்ட், தன் வாழ்நாள் முழுவதும் அதனைப் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்யூட்டிக்களை செலுத்துவதற்கான வகைகள் மற்றும் முறைகளுக்குண்டான பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன.

பிர்லா சன் லைஃப் கிளாஸிக் லைஃப் பிளான்

பிர்லா சன் லைஃப் கிளாஸிக் லைஃப் பிளானில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில், உங்கள் ரிடையர்மென்ட் இலக்கைப் பொறுத்து எப்போதிலிருந்து முதலீடு செய்யலாம் என்று முடிவு செய்து, அதன்படி சேமிப்புத் தேதியை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இன்ஷ்யூர் செய்யப்பட்டவரின் எதிர்பாராத இறப்பின் போது அளிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச இறப்பு சலுகைத் தொகையாக உறுதியளிக்கப்பட்ட அடிப்படைத் தொகையை, நீங்கள் பெறுவீர்கள். இந்த சுய-நிர்வாக ஆப்ஷன் 100 சதவீத கடனிலிருந்து 100 சதவீத ஈக்விட்டி வரை அளிக்கக்கூடிய 10 முதலீட்டு நிதிகளை உள்ளடக்கிய, வலுவாக நிலைநாட்டப்பட்டுள்ள ஒரு நிதி தொகுப்பில் முதலீடு செய்வதற்கான பூரண உரிமையை உங்களுக்கு வழங்குகிறது. மேலும், ஒரு முதலீட்டு நிதியிலிருந்து வேறு ஒன்றிற்குத் தாவக்கூடிய முழு சுதந்திரமும் உங்களுக்கு வழங்கப்படுகின்றது.

ஐசிஐசிஐ ப்ரூ இமிடியட் ஆன்யூட்டி திட்டம்

ஐசிஐசிஐ ப்ரூ இமிடியட் ஆன்யூட்டி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட காலகட்டம் வரை (5/10/15) ஒரு உத்தரவாதமான ஆன்யூட்டி வழங்கப்படும். அக்காலகட்டத்திற்குப் பின் அந்த ஆன்யூட்டன்ட் எத்தனை காலம் உயிரோடு இருக்கிறாரோ அதுவரையில் அவருக்கு ஆன்யூட்டி வழங்கப்படுவதும் தொடர்கிறது. அவ்வான்யூட்டன்ட்டின் இறப்புக்குப் பின் அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஆன்யூட்டன்ட் தொகைக்கு சமமானதொரு தொகை, அவரது வாழ்க்கைத் துணைக்கு பென்ஷனாக வழங்கப்படுகிறது. அன்னாரின் இறப்புக்குப் பின், வாங்கிய விலை நாமினிக்கு வழங்கப்படுகிறது.

பஜாஜ் அலையன்ஸ் பென்ஷன் கேரண்டி பிளான்

பஜாஜ் அலையன்ஸின் பென்ஷன் உத்தரவாதத் திட்டம், பணி ஓய்வுக்குப் பின்னான வாழ்க்கைக்குத் தேவையான சீரான வருமானத்துக்கு உறுதி அளிக்கக் கூடியதாகத் திகழ்கிறது. நீங்கள் உங்கள் தேவைக்கேற்றவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையிலான வெவ்வேறு உடனடி ஆன்யூட்டிக்களை இத்திட்டம் வழங்குகின்றது. அனைத்து ஆப்ஷன்களிலும், உங்கள் வாழ்நாள் முழுமைக்குமான ஆன்யூட்டி உங்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதம் இருப்பதனால், எந்த வயதிலும் உங்கள் வருமானம் நின்று விடுமோ என்று நீங்கள் அச்சப்படத் தேவையில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Top pension plans in India to consider for investment | ரிடையர்மென்ட் கவலையா?: இந்த திட்டங்கள் உங்களுக்குத் தான்

There are several retirement and pension plans in India, that help you achieve financial stability when you decide to retire. There are also retirement and pension plans that can provide an income to your spouse, on the sad demise of your death. Above are a few good retirement/pension plans to consider.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns