திருமண இன்சூரனஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கீறீர்களா?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமண இன்சூரன்ஸ் என்று ஒன்று இருக்கிறது தெரியுமா?
சென்னை: திருமணம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நடைபெறும் ஒரு முக்கிய பொன்னான நிகழ்வு. தங்களுடைய திருமணம் வெகு விமரிசையாக நடைபெற வேண்டும் என்று எல்லோரும் கனவு காணுகின்றனர். அந்த கனவு ஒரு சிலருக்கு மட்டுமே கைகூடுகிறது.

 

ஆனால் அதே திருமணம் ஏதாவது ஒரு காரணத்திற்காக தள்ளிப் போனாலோ அல்லது நிறுத்தப்பட்டாலோ அதில் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் கௌரவக் குறைச்சல் நம்மை தலை நிமிர்ந்து நடக்கவிடாது. அதனால் அந்த இழப்புகளைத் தடுக்க தற்போது திருமண இன்சூரன்ஸ் வந்திருக்கிறது. வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் இந்த திருமண இன்சூரன்ஸ் திட்டம் தற்போது இந்தியாவிற்கும் வந்திருக்கிறது.

இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்கு ஐசிஐசிஐ லம்பார்ட் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்த திருமண இன்சூரன்ஸ் திட்டத்தை வழங்குகின்றன. இந்த திருமண இன்சூரனஸ் திட்டம் ஒரு நிகழ்வு சார்ந்த திட்டம் ஆகும். அதாவது இந்த திருமண இன்சூரன்ஸ் திட்டம், திருமணத்திற்கு சில நாள்களுக்கு முன்பு தொடங்கி அந்த திருமணம் முழுமையாக முடிந்தவுடன் முடிந்துவிடுகிறது.

ஒருவேளை மணமகன் அல்லது மணமகள் ஆகியோரின் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக திருமணம் இடையில் நின்று போனால் அந்த திருமண நிகழ்வுக்கு நிறுவனங்கள் இன்சூரன்ஸ் வழங்காது.

இயற்கை இடர்பாடுகள், விபத்துகள், தீ விபத்து, நிலநடுக்கம், நகைத் திருடு போதல், பணம் திருடு போதல் போன்ற காரணங்களால் திருமணம் தடைபடும் போது அந்த இழப்பிற்கு நிறுவனங்கள் இன்சூரன்ஸ் வழங்குகின்றன.

உலக அளவில் இந்திய திருமணங்கள் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்தியர்கள் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த இந்திய நட்சத்திரங்கள் தங்கள் திருமணத்திற்காக கோடிக் கணக்கான பணத்தை வாரி இறைக்கின்றனர்.

இதைப் பார்த்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்தியாவிலும் திருமண இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றன. இதன் மூலம் கோடிக் கணக்கான பணத்தை இறைத்து திருமணத்தை ஏற்பாடு செய்த பிறகு அந்த திருமணம், இயற்கைச் சீற்றத்தின் காரணமாக அல்லது விபத்தின் காரணமாக அல்லது வேறு ஏதோ காரணத்திற்காகவோ நின்று போனால், அந்த இழப்பை இந்த இன்சூரன்ஸ் திட்டம் சரிசெய்துவிடும்.

பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் ரூ. 2 லட்சம், ரூ.4 லட்சம், ரூ.6 லட்சம் மற்றும் ரூ.8 லட்சம் ஆகிய 4 வகையான திருமண இன்சூரன்சுகளை வழங்குகிறது. இந்த இன்சூரன்சுகளுக்கான பிரீமியத் தொகை ரூ.4000 முதல் ரூ. 15,000 வரை இருக்கும்.

திருமணத் தேதிக்கு முன் 7 நாட்களில் இருந்து திருமணம் முடியும் வரை இயற்கை இடர்பாடுகள், மணமகனுக்கு அல்லது மணமகளுக்கு ஏற்படும் விபத்து, இரத்த உறவினர்களுக்கு ஏற்படும் விபத்து, நகை காணாமல் போதல் போன்றவற்றால் திருமணம் தள்ளிப் போனால் அல்லது நின்று போனால் இந்த திருமண இன்சூரன்ஸ் பாலிசி இந்த இழப்பை சரிசெய்யும்.

அதுபோல் திருமணம் நடைபெறும் போது சொத்துக்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் அல்லது திருமண விருந்து விஷமாகி அது விருந்தினர்களைப் பாதித்தால் அதற்கான இழைப்பையும் இந்த இன்சூரன்ஸ் பாலிசிகள் கவர் செய்யும் என்று பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தின் வெப்சைட் தெரிவிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wedding Insurance! Now insure your marriage against losses | திருமண இன்சூரன்ஸ் என்று ஒன்று இருக்கிறது தெரியுமா?

Weddings! The most endearing part of one's life. That's a dream which is fantasized by each and everyone. But, what if, that dream turns out to be a nightmare. What if, the wedding get postponed or canceled for any specific reason. Wedding Insurance – the concept which is quite famous abroad has entered in India as well. Looking at the business opportunity, two insurance houses in India – ICICI Lombard and Bajaj Allianz has come out with wedding insurance products to cater Indian families. Wedding Insurance is an event insurance product wherein the policy's term starts a few days before of the wedding and ends on its completion.
Story first published: Thursday, May 2, 2013, 17:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X