மியூச்சுவல் ஃபண்ட் எஃப்.எம்.பி. என்றால் என்ன? அவை எஃப்.டி.–யை விட சிறந்ததா?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

மியூச்சுவல் ஃபண்ட் எஃப்.எம்.பி. என்றால் என்ன? அவை எஃப்.டி.–யை விட சிறந்ததா?
சென்னை: பிக்சட் மெச்சூரிட்டி திட்டம் என்பது கடன் திட்டங்கள் மற்றும் நிதி சந்தை திட்டங்களில் முதலீடு செய்யக் கூடியவாறு பரஸ்பர நிதி வழங்கும் ஒரு குறுகிய கடன் திட்டமாகும். எஃப்.எம்.பி.-க்கள், பிக்சட்டில் உள்ளதைப் போன்றே மெச்சூரிட்டி உள்ள திட்டங்களில் முதலீடு செய்யப்படுகின்றன. எஃப்.எம்.பி.-க்கள் மூலம் கிடைக்கக்கூடிய ரிட்டர்ன்கள் குறிப்பால் உணரக்கூடியன அல்லது எதிர்பார்க்கக்கூடியனவேயன்றி வங்கி வைப்புத் தொகையைப் போல் உத்தரவாதமானவை அல்ல.

எஃப்.எம்.பி.-க்களின் உன்னதங்கள்:

எஃப்.எம்.பி.-க்களின் காலம் 1 மாதத்தில் இருந்து 3 வருடங்கள் வரை வேறுபடுகின்றன. இவை குறுகிய தன்மை கொண்டவையாதலால் நியூ ஃபண்ட் ஆஃபர் எனப்படும் என்.எஃப்.ஓ. ஒரு தரம் மூடப்பட்டுவிட்டால் அதற்குப் பின் இத்திட்டம் எவ்வகை முதலீடுகளையும் ஏற்றுக்கொள்வதில்லை. குறைந்த பட்ச முதலீடு சுமார் 5000 ரூபாயாக இருப்பதினால், சில்லறை வணிக பங்களிப்பை இது ஊக்குவிக்கின்றது. இத்திட்டம் இரு வகையான ஆப்ஷன்களை முன் வைக்கிறது; அவை வளர்ச்சி மற்றும் பங்காதாயம் ஆகும்.

அவை எங்கே முதலீடு செய்கின்றன?

எஃப்.எம்.பி.-க்கள் வழக்கமாக சர்ட்டிஃபிகேட் ஆஃப் டெபாசிட்ஸ் (சிடி-க்கள்), கமர்ஷியல் பேப்பர்ஸ் (சிபி-க்கள்), நிதி சந்தை சாதனங்கள், கார்ப்பரேட் கடன் பத்திரங்கள், அரசு கடன் பத்திரங்கள் ஆகியவற்றிலேயே முதலீடு செய்கின்றன. எனினும், ஒரு கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி மட்டுமாவது மதிப்பீடு செய்துள்ள உயர்ந்த தரத்தை உடைய திட்டங்களிலும் இவை முதலீடு செய்கின்றன.

வங்கி வைப்புத் தொகையோடு ஒப்பிடுகையில் எஃப்.எம்.பி.-க்கள் எவ்வாறு செயல்படுகின்றன?

எஃப்.எம்.பி.-க்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால், வைப்புத் தொகை வங்கிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. மற்றொரு முக்கியமான வித்தியாசம், ரிட்டர்ன்கள். நீங்கள் வங்கி வைப்புத் தொகையில் முதலீடு செய்திருப்பின் வட்டி விகிதம் முன்பே தீர்மானிக்கப்பட்டு, லாக் செய்யப்பட்டுவிடும். அதனால் அந்த வைப்புத் தொகையின் மெச்சூரிட்டியின் போது எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், எஃப்.எம்.பி.யில் எவ்வளவு வட்டி விகிதம் கிடைக்கக்கூடும் என்பதைப் பற்றி நன்கு அறிந்திருக்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளாலேயே, வட்டி விகிதங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. வைப்புத் தொகையோடு ஒப்பிடுகையில், எஃப்எம்பி-க்கள் சற்று அதிகமான அபாயத்தன்மை கொண்டவை.

எஃப்.எம்.பி.க்கள் வரிக்குறைப்பு ஆற்றல் கொண்டவை:

எஃப்.எம்.பி.க்கள் உயர்ந்த வரிக்குறைப்பு ஆற்றல் வாய்ந்தவை. அதனால் அவை முக்கியமாக அதிக பட்சவரி விதிப்பு அடைப்புக்குள் இருப்போருக்கு, மிகச் சிறந்த முதலீடுகளாகும். எஃப்.எம்.பி. மூலம் தனியொரு முதலீட்டாளருக்கு கிடைக்கும் பங்காதாயங்களுக்கு வரி கிடையாது. ஒரு வேளை, நீங்கள் ஒரு வருடத்துக்கு மேற்பட்ட நீண்ட எஃப்.எம்.பி-க்களில் லாபம் மொத்தத்தையும் மூலதன மதிப்பேற்றத்திற்கு (கேப்பிடல் அப்ரிஸியேஷன்) எடுத்தச் செல்ல முடிவு செய்தால் வரி விதிப்பு, இன்டெக்ஸேஷன் பெனிஃபிட் இருப்பின் 10 சதவீதமாகவும், இன்டெக்ஸேஷன் இருப்பின் 20 சதவீதமாகவும் இருக்கும்.

ஒரு வருடத்திற்கும் குறைவான காலவரையறையில் செய்யப்படும் முதலீடுகளில் கிடைக்கும் ரிட்டர்ன்களுக்கு, தனிநபராக இருப்பின் சுமார் 12.5 சதவீதம் வரியும், கார்ப்பரேட்டாக இருப்பின் 20 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. எனினும், ஒரு தனிநபர் தனக்கான லாபத்தை டிவிடென்ட்டுகளாக பெற முடிவு செய்யும் பட்சத்தில், வரி குறைப்பு பெற இயலும். இன்டெக்ஸேஷன் என்பது என்னவெனில் பணவீக்கத்துக்குப் பின், பொதுமக்களின் வாங்கும் திறனை பேணும் பொருட்டு வருமான பேமெண்ட்டுகளை ஒரு விலை இன்டெக்ஸின் மூலமாக சரிக்கட்டுவதேயாகும்.

முடிவுரை:

மாற்றங்கள் நிறைந்த முதலீட்டுச் சூழலில், ஏன் தனிநபர்கள் எஃப்.எம்.பி.-க்களில் முதலீடு செய்யக் கூடாது என்பதற்கு குறைவான காரணங்களே உள்ளன. ஏனெனில், இவை வரிக் குறைப்பில் வைப்புத் தொகையைவிட அதிக ஆற்றல் கொண்டவை. மேலும், குறைவான காலவரையறையில் முதலீடு செய்வதற்கான மிகச்சிறந்த தேர்வாகவும் விளங்குகின்றன. எனினும், இவை உத்தரவாதமான ரிட்டர்ன்களுடன் வருவதில்லை. முதலீட்டாளர்கள், இதில் இருக்கக்கூடிய அபாயங்களை எடை போட்டு முதலீட்டின் இலக்கை உத்தேசித்து பின் முடிவு செய்தல் நலம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are Mutual Fund FMP? Are they better than FD? | மியூச்சுவல் ஃபண்ட் எஃப்.எம்.பி. என்றால் என்ன? அவை எஃப்.டி.–யை விட சிறந்ததா?

Fixed maturity plan is a close-ended debt fund, offered by mutual funds, which invest in debt and money market instruments. FMPs are invested in the instruments of same maturity as fixed in maturity of plan. The return in FMP are only indicative or expected but not ‘guaranteed', unlike a bank FD.
Story first published: Tuesday, May 7, 2013, 13:39 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns