அதென்ன வரி இல்லா பத்திரங்கள்? நம்பி முதலீடு செய்யலாமா?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

அதென்ன வரி இல்லா பத்திரங்கள்? நம்பி முதலீடு செய்யலாமா?
சென்னை: நம்மில் பெரும்பாலானோர் வரி இல்லா பத்திரங்கள் பற்றி படித்திருப்போம் மற்றும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வரி இல்லா பத்திரங்கள் என்றால் என்ன? என்கிற கேள்விக்கான சரியான பதில் நமக்கு தெரியுமா?. உங்கள் பதில் இல்லை' எனில் இது உங்களுக்கான கட்டுரை ஆகும்.

வரி இல்லா பத்திரங்களின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு முதலீட்டாளர்களிடம் வரி பிடித்தம் செய்யப்படுவது இல்லை. இத்தகைய பத்திரங்களில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்கு வரி கிடையாது. மேலும் இந்த வருமானம் வரி செலுத்துவோரின் மொத்த வருமானத்தில் ஒரு அங்கமாக கருதப்படாது.

இத்தகைய பத்திரங்கள் அரசு மற்றும் தனியார் சேர்ந்து நடத்தும் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகிறது. எனவே, இது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இந்திய அரசாங்கம் கிரேக்கத்தின் வழி சென்று கடன் நெருக்கடி பிரச்சனையில் சிக்கினால் மட்டுமே இந்தகைய பத்திரங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இந்த பத்திரங்கள் தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில் விற்கப்படுகின்றன. எனவே, இது முதலீட்டிற்கு நீர்மைத்தன்மையை வழங்குகிறது.

எனினும், இத்தகைய பத்திரங்கள் பங்கு போல் பெரிய அளவில் வர்த்தகம் செய்யப்படுவதில்லை. வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வரும் இந்த நேரத்தில் அரசாங்கத்தின் வரி இல்லா பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு ஒரு நேர்மறையான பந்தயம் ஆகும்.

இந்த பத்திரங்கள் நீண்ட கால முதலீட்டை தேர்ந்தெடுத்து, இரண்டாம் நிலை சந்தை வழியாக வெளியேற நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த பத்திரங்களில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ததன் மூலம், கடந்த ஆண்டு அவர்கள் முதலீட்டு நிறுவனத்தை பொறுத்து 8.20 முதல் 8.35 சதவீதம் வரை வரி இல்லா வருமானத்தை பெற்றார்கள்.

இத்தகைய பத்திரங்களை வரி சேமிக்கும் பத்திரங்களுடன் ஒப்பிட்டு குழம்பக் கூடாது. வருமான வரி சட்டம் 80 சிசிஎப் பிரிவின் படி, வரி சேமிக்கும் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய், வரி செலுத்துவோரின் மொத்த வருமானத்தில் ஒரு அங்கமாக கருதப்படும். சமீபத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகம் தங்ளுடைய வணிக விரிவாக்கத்திற்காக ரூ 10,000 கோடி நிதியை வரி இல்லா பத்திரங்கள் மற்றும் பிற உபகரணங்கள் மூலம் திரட்டப்போவதாக அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What are tax free bonds? Is it a good bet? | அதென்ன வரி இல்லா பத்திரங்கள்? நம்பி முதலீடு செய்யலாமா?

Most of us have heard and read about tax free bonds but what exactly are tax free bonds? Tax free bonds are bonds whose interest returns are not taxable in the hand of the investors. The income from these bonds are tax free and hence do not form part of the total income in computing income tax. These bonds are issued by quasi government owned institutions and are hence secured, unless the Indian government goes the Greece way and there is a sovereign debt crisis. As these bonds are traded on the NSE and BSE, they offer liquidity.
Story first published: Monday, May 13, 2013, 17:25 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns