நாணயச் சந்தையில் வர்த்தகம் செய்வதன் பயன்கள்

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

நாணயச் சந்தையில் வர்த்தகம் செய்வதன் பயன்கள்
நாணய முன்பேர ஒப்பந்தங்கள் அல்லது நாணயச் சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடுவது பல பயன்களைத் தருகிறது. குறிப்பாக நாணய மதிப்பின் ஏற்ற இறக்கங்கள் நம்மை பாதிக்காத வகையில் முதலீடு செய்ய இங்கு வழிமுறைகள் உள்ளன. இதன் மூலம் அனாவசியமான நஷ்டங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

இது நமக்கு தரும் சில மறுக்க இயலாத பயன்களைக் காணலாம்.

ஒரு சிறந்த பாதுகாப்பு:

நீங்கள் ஒரு ஏற்றுமதியாளர் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் டாலர்களை மாற்ற வேண்டியிருக்கிறது. ஆனால் ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பு கூடுமா அல்லது குறையுமா என்பது தெரியவில்லை. இது போன்ற சமயங்களில் பணமதிப்பு மாற்றம் என்ற அபாயத்திலிருந்து காத்துக் கொள்ள முன்பேரச் சந்தையில் முதலீடு செய்யலாம். அது போலவே இறக்குமதியாளர்கள், வெளிநாட்டுப் பணத்தில் கடன் வாங்கி குறிப்பிட்ட காலத்தில் திருப்பி செலுத்த வேண்டிய நிலையில் இருப்பவர்கள் முதலியவர்கள் நாணய மதிப்பு எந்தத் திசையில் செல்லும் என்பதை கணிக்க இயலாத போது அதற்கேற்ப நாணய முன்பேர சந்தையில் முதலீடு செய்யலாம்.

உதாரணத்திற்கு நீங்கள் லோன் எடுக்கும் போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ரூ.50 என்று இருந்து திருப்பி செலுத்த வேண்டி வரும்போது ரூ. 54 என்று உயர்ந்திருந்தால் உங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே நீங்கள் நாணய முன்பேர சந்தையில் நீண்ட கால முதலீடு செய்யலாம். அதுபோலவே வெளிநாட்டில் முதலீடு செய்கிற இந்தியர்களும் தங்கள் முதலீடுகளை பாதுகாத்துக் கொள்ளலாம்.

முன்பேரச் சந்தையில் முதலீடு செய்வது நம்மை லாப நஷ்டங்களுக்கு மத்திமமான நிலையில் பாதுகாப்பாக இருக்க ஒரு வாய்ப்பு தருகிறது. நாணய மதிப்பின் ஏற்ற இறக்கங்களில் இருந்து பாதுகாக்கும், பன்முகப் பயன்தரும் முதலீடாக விளங்குகிறது. மேலும் வழக்கமான பங்குச்சந்தை முதலீட்டிலிருந்து மாறுபட்டு பலவகைப்பாட்டு முதலீடாக இருக்கிறது.

இந்த விஷயத்தில் நல்ல அடிப்படை அறிவும் ஓரளவு தொழில்நுட்ப அறிவும் இருந்தால் நாணய முன்பேரச் சந்தையில் முதலீடு செய்வது நல்ல வாய்ப்பாகும். இதற்கு நீங்கள் ஆரம்பகட்டத்தில் வல்லுனர்களின் அறிவுரையை நாட வேண்டும்.

Currency futures or trading in the currency market offers several benefits, especially the mechanism to hedge against currency risk,

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the benefits of trading in the currency market? | நாணயச் சந்தையில் வர்த்தகம் செய்வதன் பயன்கள்

Currency futures or trading in the currency market offers several benefits, especially the mechanism to hedge against currency risk, thus preventing any undue losses.
Story first published: Wednesday, May 29, 2013, 11:01 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns