வெளிநாடு வாழ் இந்தியர்களும் வரி விலக்கு பெற கூடிய சேமிப்புத் திட்டங்கள்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெளிநாடு வாழ் இந்தியர்களும் வரி விலக்கு பெற கூடிய சேமிப்புத் திட்டங்கள்..
இந்திய குடியுரிமை பெற்ற இந்தியர் அனுபவிக்கும் சலுகைகளில் பலவற்றை வெளிநாடு வாழ் இந்தியர்களும் அனுபவிக்கலாம், தபால் நிலைய வரி சேமிப்பு திட்டம் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த முதலீட்டுப் பத்திரம் போன்றவற்றை தவிர மற்ற அனைத்து சலுகைகளும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுபவிக்கின்றனர். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கென வரி விலக்குத் திட்டங்கள் சிலவற்றை இங்கு காணலாம்.

 

ஆயுள் காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்கள்:

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கென வரி விலக்கு அளிக்கும் திட்டங்கள் உள்ளன. ஆயுள் காப்பீட்டு திட்டம் எடுத்தால் அதிகபட்சமாக ஒரு லட்சத்திற்கு வரிவிலக்கு பெற முடியும். இது வருமான வரி சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ் வருகின்றது.

ELSS (பரஸ்பர நிதி & பங்கு வரி சேமிப்பு திட்டங்கள்):

இதே போன்ற சலுகைகளை வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 சி இன் கீழ் ELSS வழங்குகிறது. ELSS என்பது பரஸ்பர நிதி திட்டங்களுடன் பங்குகள் இணைக்கப்பட்ட ஒரு நிதித் திட்டம். ஆன்லைன் மூலமாக ELSS திட்டங்களை வாங்க முடியும். ஆனால் இத்திட்டத்தில் பங்குச் சந்தைகளில் பணத்தை முதலீடு செய்வதால் ஆபத்து ஏற்படலாம். இருப்பினும் இவை வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு சிறந்த வரி விலக்குத் திட்டமாகும்.

வீடு வாங்க கடனுதவி:

வீடு வாங்குவதிற்கு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வரி விலக்கு அளிக்கும் திட்டஙகளில் ஒரு வரப்பிரசாதம். வீடு வாங்க செலுத்தப்படும் மூலத் தொகையில் வரி விலக்கு பெறலாம். 2013-14 ஆம் ஆண்டில் வீட்டுக் கடன் வாங்கிய தொகையை வைத்து ரூ 1 லட்சம் வரிச் சலுகை பெற முடியும் என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அறிவித்திருக்கின்றார். வீட்டு கடனுக்காக செலுத்தப்பட்ட அசல் தொகையை வைத்து ஒரு லட்சம் வரை வரி விலக்கு பெறலாம் என்ற சலுகை ஏற்கனவே நிலுவையில் உள்ளது.

சுகாதார காப்பீடு பிரீமியம்:

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஒரு சுகாதார காப்பீட்டு திட்டத்தை தங்கள் குடும்பத்தின் மீதோ அவர்களை சார்ந்து உள்ள பெற்றோர்கள் மீதோ எடுத்து பிரீமியம் அளிக்கப்பட்ட தொகையை வைத்து வருமான விலக்குக்கான கோரிக்கையை அளிக்கலாம். இத்திட்டத்தில் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80D கீழ் ரூ 15,000 வரை வரிவிலக்கு சலுகை அளிக்கப்படும்.

கல்விக் கடன்:

குடியுரிமை பெற்ற இந்தியர்களை போன்று குடியுரிமை அல்லாத இந்தியர்களும் கல்விக் கடன் எடுத்து அதன்மூலம் வரி விலக்குக் பெறலாம்.

குடியுரிமைப் பெற்ற இந்தியர்கள் அனுபவிக்கும் வரி விலக்குச் சலுகைகளைப் போன்று குடியுரிமைப் பெறாத இந்தியர்களும் அனுபவிக்க முடியும். எடுத்துக்காட்டாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் நன்கொடைகளும் வரிவிலக்கு கோர பயன்படும்.வெளிநாடுவாழ் இந்தியர்களால் பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு மற்றும் வரி உள்கட்டமைப்பு பத்திரங்கள் சேமிப்பு முதலீடு போன்ற சலுகைகளை அனுபவிக்க முடியாது என்பது கூடுதல் தகவல்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the tax savings schemes available NRIs? | வெளிநாடு வாழ் இந்தியர்களும் வரி விலக்கு பெற கூடிய சேமிப்புத் திட்டங்கள்..

Non Resident Indians (NRIs) can avail of most of the tax savings schemes presently available for resident Indians, except a host of post office tax savings schemes and instruments like infra bonds.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X