ரேட்டிங் ஏஜென்சீக்களான எஸ் அன்ட் பி, மூடிஸ், ஃபிட்ச் என்ன செய்யும்?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

ரேட்டிங் ஏஜென்சீக்களான எஸ் அன்ட் பி, மூடிஸ் என்ன செய்யும்?
சென்னை: ஸ்டாண்டர்ட் அன்ட் புவர்ஸ் (எஸ் அன்ட் பி), மூடி'ஸ் மற்றும் ஃபிட்ச் போன்ற அளவீடு செய்யும் நிறுவனங்கள் நாடுகளைப் பற்றியும், அதன் நிறுவனங்களைப் பற்றியும் ஒரு விரிவான ஆய்வை நடத்தி அதற்கு ஒரு அளவீடையும் நிர்ணயிக்கும்.

இந்த அளவீடு ஒரு முதலீட்டாளருக்கு ஒரு நாட்டிலோ அல்லது அங்குள்ள நிறுவனத்திலோ முதலீடு செய்யும்போது உண்டாகும் இடர்பாடுகளைப் பற்றி தெளிவுப்படுத்தும். நல்ல அளவீடு இருந்தால் அந்த நாடோ அல்லது அந்த நிறுவனமோ நமக்கு நம் முதலீட்டை லாபத்தோடு திருப்பிக் கொடுக்காமல் போகும் இடர்பாடு மிகவும் குறைவு. இதுவே குறைந்த அளவீடாக இருந்தால், நமக்கு நம் முதலீட்டை லாபத்தோடு திருப்பிக் கொடுக்காமல் போகும் இடர்பாடு மிகவும் அதிகம்.

அளவீடு குறைவாக இருந்தால் என்ன ஆகும்?

முன்னணி நிறுவனங்கள் ஒரு நாட்டின் அல்லது ஒரு நிறுவனத்தின் அளவீட்டைக் குறைப்பதன் மூலம் நமக்கு நம் முதலீட்டை லாபத்தோடு திருப்பிக் கொடுக்காமல் போகும் இடர்பாடு மிகவும் அதிகம் என்பதை நாம் உணரலாம். உதாரணத்திற்கு, இந்திய நிறுவனங்கள் பல வகையான கருவிகள் மூலம் வெளிநாட்டிலிருந்து பணத்தை கடன் பெறுகின்றன. இது நிதியின் செலவைக் கூட்டுவதால் (வட்டியின் மூலம்) இடர்பாட்டின் அளவும் அதிகம். நிதிச் செலவு கூடுவதால், அதை திருப்பிச் செலுத்தவும் தடைகள் ஏற்படும். அளவீடு குறைவதால் அந்த நாடு அல்லது அந்த நிறுவத்தின் மூலதனம் கரையத் தொடங்கும். இது செலாவணியாகும் பணத்தை மிகவும் பாதிக்கும்.

எஸ் அன்ட் பி இந்தியாவுக்கு அளித்த அளவீடு

முதலீடு தரம் அளவீட்டிற்கு 2007-ல் அடியெடுத்து வைத்த இந்தியா எஸ் அன்ட் பி பிபிபி அளவீட்டைப் பெற்று ஸ்திரமான நிலையில் இருந்தது. ஆனால் இந்த நிலைமை ஏப்ரல் மாதத்தில் மாறத் தொடங்கியது. எஸ் அன்ட் பி-யால் இந்தியா எதிர்மறை அளவீட்டைப் பெற்றது.

இந்த நிறுவனம் இப்போது இந்தியா ஜங்க் நிலைக்கு கீழ் இறங்கியுள்ளது என்று அறிவித்துள்ளது. ஜங்க் நிலையென்றால் அந்த நாட்டிற்கான நிதிகளின் செலவுகள் அதிகரிக்கும் என்று பொருளாகும்; அல்லது அந்த நாடு வெளிநாட்டிலிருந்து பணம் கடன் பெறும் போது அது செலவை கூட்டுவதாக அமையும். இதனால் இந்தியாவில் முதலீடு செய்வது சற்றே ரிஸ்க் வாய்ந்ததாகிவிடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What do rating agencies like S&P, Moody's and Fitch do? | ரேட்டிங் ஏஜென்சீக்களான எஸ் அன்ட் பி, மூடிஸ் என்ன செய்யும்?

Rating agencies like Standard & Poor's (S&P), Moody's and Fitch do a detailed study of countries and companies and assign rating to them. A rating reflects the risk involved for an investor while investing in a country or company. A good rating means that the risks of default with the company and country are minimal. While a lower rating means that the risks of default (paying back principal and interest) is higher.
Story first published: Tuesday, May 14, 2013, 7:10 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns