உங்கள் வீட்டை இன்சூர் செய்துவிட்டீர்களா? முதலில் அதைச் செய்யுங்கள்!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வீட்டு இன்சூரன்ஸ் பாலிசி எவற்றையெல்லாம் கவர் செய்கிறது என்பதைத் தெரிந்திருப்பது பயனுள்ளதாக இருக்கும். உங்களுடைய மொத்த வீ்ட்டையும் கவர் செய்யும் இன்சூரன்ஸ் பாலிசி, அந்த வீடு இயற்கை இடர்களால் குறிப்பாக தீ, நிலநடுக்கம், இடி மற்றும் விமான விபத்து போன்றவற்றால் பாதிக்கப்படும் போது அதை நீங்கள் திரும்பி கட்டுவதற்கும் மற்றும் அந்த வீட்டைப் பழுது பார்ப்பதற்கும் ஆகும் செலவுகளைக் கவர் செய்கிறது.

வீட்டு இன்சூரன்ஸ் உங்கள் வீட்டை மட்டுமே கவர் செய்கிறது. உங்களுடைய வீட்டில் உள்ள மற்ற மதிப்புள்ள பொருட்களுக்கு பாலிசி தேவையென்றால் அதற்காக தனியாக வேறொரு பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டு இன்சூரன்ஸ் பின்வரும் செலவுகளைக் கவர் செய்கிறது.

வீட்டை மீண்டும் கட்டுவதற்கான செலவுகள்
 

வீட்டை மீண்டும் கட்டுவதற்கான செலவுகள்

உங்கள் வீட்டை மீண்டும் கட்டுவதற்கான மொத்த செலவுகளையும் வீட்டு இன்சூரன்ஸ் கவர் செய்கிறது. நீங்கள் குறைவான கவர் கொண்ட பாலிசியைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அதே நேரத்தில் உங்கள் வீட்டை மீண்டும் கட்டுவதற்குத் தேவையான அனைத்து செலவுகளையும் கவர் செய்யும் பாலிசியைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

கட்டுமானக் கூலி

கட்டுமானக் கூலி

வீட்டைத் திரும்பிக் கட்டுவதற்கு ஆகும் பொருட்கள் மட்டும் அல்லாமல் அந்த வீட்டைக் கட்டுபவர்களுக்கு கூலி தர வேண்டும். குறிப்பாக கட்டிடப் பொறியாளர்கள் மற்றும் நிலம் அளப்பவர்கள் போன்றோருக்கு வழங்கப்படும் கூலியையும் வீட்டு இன்சூரன்ஸ் பாலிசி கவர் செய்கிறது.

சேதமடைந்த பொருட்களை அகற்ற

சேதமடைந்த பொருட்களை அகற்ற

இயற்கை இடர்பாடுகளால் உங்கள் வீடு பாதிக்கப்பட்டு, அந்த இடர்பாடுகளில் சேதமடைந்து,அவற்றில் எஞ்சியிருக்கும் பொருட்களை அகற்ற ஆகும் செலவுகளை வீட்டு இன்சூரன்ஸ் பாலிசி கவர் செய்கிறது. அவ்வாறு ஆகும் செலவுகளுக்கு பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 1 சதவீதம் மட்டுமே பாலிசி கவரை வழங்குகின்றன.

ஏன் வீட்டு இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்க வேண்டும்?
 

ஏன் வீட்டு இன்சூரன்ஸ் பாலிசியை எடுக்க வேண்டும்?

மனித வாழ்க்கை எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டது. குறிப்பாக இயற்கை இடர்பாடுகளை இன்னும் மனிதர்களால் தடுக்க முடியவில்லை. அதனால் எவருமே இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு இயற்கை இடர்களால் உங்களுடயை வாழ்வாதாரமான உங்கள் இல்லம் சேதம் அடையும் போது, அந்த இல்லத்தை மீண்டும் கட்ட வீட்டு இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு உதவியாக வந்து நிற்கிறது. எனவே வீட்டு இன்சூரன்ஸ் பாலிசியை இதுவரை வைத்திருக்காதவர்கள் விரைவில் அதை வாங்கிக் கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What does home insurance cover? | உங்கள் வீட்டை இன்சூர் செய்துவிட்டீர்களா? முதலில் அதைச் செய்யுங்கள்!

Home insurance covers a whole lot of things, including re-building your house to removal of debris, should there be a fire, earthquake, lightning explosion, aircraft damage etc.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X