எம்.சி.எக்ஸ்.-எஸ்.எக்ஸ். என்றால் என்ன?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

எம்.சி.எக்ஸ்.-எஸ்.எக்ஸ். என்றால் என்ன?
சென்னை: சமீபத்தில் மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை ஆகியவற்றோடு மூன்றாவதாக ஒரு பங்கு சந்தையைத் தொடங்கியுள்ளது. இப்பங்கு சந்தையின் பெயரே எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ் என்பதாகும். இது ஈக்விட்டி மற்றும் டெரிவேட்டிவ்ஸ் செக்மென்ட் ஆகியவற்றுக்கான, வர்த்தக இயங்குதளத்தை அளிக்கின்றது.

எஸ்எக்ஸ்40 என்றால் என்ன?

எஸ்எக்ஸ்40 என்பது எம்சிஎக்ஸ்-எஸ்எக்ஸ்-க்கான ஃப்ளாக்ஷிப் இன்டெக்ஸ் ஆகும். இது பொருளாதாரத்தின் பல வகைப் பிரிவுகளைக் குறிக்கும் 40 பெரிய கேப்-லிக்விட் பங்குகளுக்கான, ஃப்ரீஃப்ளோட் அடிப்படையில் செயல்படும் இன்டெக்ஸ் ஆகும். எஸ்எக்ஸ்40, வெவ்வேறு தொழிலகங்கள் மற்றும் துறைகளின் மேம்பட்ட ரெப்ரசன்டேஷன்கள் மூலம் உலகளவில் முன்னணியில் உள்ள எஃப்டிஎஸ்இ-யின் இன்டஸ்ட்ரி க்ளாஸிஃபிகேஷன் சிஸ்டத்தின் அடிப்படையில் பொருளாதார செயல்பாட்டை அளவிடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இன்டெக்ஸ், முதலீடுகள் மற்றும் இன்டெக்ஸ் ஃப்யூச்சர்ஸ் அன்ட் ஆப்ஷன், இன்டெக்ஸ் போர்ட்ஃபோலியோ, எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்ஸ், இன்டெக்ஸ் ஃபண்ட்ஸ் போன்ற கட்டமைக்கப்பட்ட பொருள்களுக்கு காஸ்ட்-எஃபக்ட்டிவ் சப்போர்ட்டை வழங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

எஸ்எக்ஸ்40 எந்தெந்த நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது?

எஸ்எக்ஸ்40, குறைந்த பட்சம் 10 சதவீதம் ஃப்ரீ ஃப்ளோட் உள்ள முதல் 100 இடங்களுக்குள் இருக்கக்கூடிய லிக்விட் நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது. முதல் பத்து இடங்களில் உள்ள பங்குகள் எஸ்எக்ஸ்40-இல் சுமார் 62.4 சதவீத மதிப்பு கொண்டுள்ளன. இது நிஃப்டியில் 57.4 சதவீதமாகவும், சென்செக்ஸில் 67.8 சதவீதமாகவும் உள்ளது. எஸ்எக்ஸ்40-இல் உள்ள பங்குகள், 20 சதவீதம் +/- 2 சதவீதம் பேன்டில் இன்டஸ்ட்ரி கேப் கொண்டுள்ளன. இந்த இன்டெக்ஸ் நல்ல ஃப்ரீ ஃப்ளோட், மார்க்கெட் கேப் மற்றும் லிக்விடிட்டி உள்ள நிறுவனங்களுக்கு விரைவான அனுமதி அளிக்கின்றது.

உடைமைகளுக்கு எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகிறது?

எஸ்எக்ஸ்40-ல், இருப்பதிலேயே பெரிதான உடைமைக்கு சுமார் 9.4 சதவீதம் மதிப்பீடு வழங்கப்படுகிறது. முதல் 10 இடங்களில் இருக்கும் உடைமைகள், எஸ்எக்ஸ்40-ல் 62.4 சதவீதமாகவும், நிஃப்டியில் 57.4 சதவீதமாகவும், சென்செக்ஸில் 67.8 சதவீதமாகவும் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

தேர்வுக்கான அளவுகோல்கள் என்ன?

உள்ளார்ந்த பங்குகள், பாசிடிவ் நெட்-வொர்த்தைக் கொண்டவையாக இருக்க வேண்டும்.

• பங்குக்கான ஃப்ரீ ஃப்ளோட், குறைந்த பட்சம் 10 சதவீதமாகவும், அது, முதல் 100 இடங்களுக்குள் இருக்கக்கூடிய லிக்விட் நிறுவனங்களைச் சேர்ந்ததாகவும் இருக்க வேண்டும்.
• இன்டஸ்ட்ரி கேப்பிங், 20 சதவீதம் (±) 2 சதவீதம் பேன்டில் இருக்க வேண்டும்.
• இது சிறந்த ஃப்ரீ ஃப்ளோட், மார்க்கெட் கேப் மற்றும் லிக்விடிட்டி உள்ள நிறுவனங்களுக்கு விரைவான அனுமதி அளிக்கின்றது.
• இந்தத் தேர்வு அளவுகோல்களுக்கு மேல் செயல்படும் திறன் வாய்ந்த முதல் 40 நிறுவனங்கள், எஸ்எக்ஸ்40-ல் இடம் பிடிக்கின்றன.

இந்த இன்டெக்ஸின் முக்கிய அம்சங்கள்:

• மிகச் சிறந்த ரிட்டர்ன் மற்றும் ரிஸ்க் அட்ஜஸ்ட்டட் ரிட்டர்ன்
• இந்தியாவின் தனிச்சிறப்பு வாய்ந்த இன்டெக்ஸாய், உலகளவில் கடைபிடிக்கப்படும் சிறந்த முறைகளை பென்ச் மார்க்காகக் கொண்டு செயல்படக் கூடியது
• பொருளாதாரத்தின் ஆர்கனைஸ்ட் செக்டாரை எஃப்டிஎஸ்இ-யின் ஐசிபி-யை உபயோகித்து, மேம்படுத்தப்பட்ட இன்டஸ்ட்ரி ரெப்ரசன்டேஷனைக் கொண்டு,சிறப்பாக பிரதிபலிக்கிறது
• விதிமுறைக்குட்பட்டது, வெளிப்படையானது மற்றும் பிரதி எடுக்கக் கூடிய தன்மை வாய்ந்தது
• இன்டஸ்ட்ரி கேப்பிங், துறை பாரபட்சத்தை குறைத்து, இன்டெக்ஸ் ஸ்திரத்தன்மையை உயர்த்துகிறது
• குறைவான சர்னிங் விகிதம்
• நிதி (எம்.எஃப்-கள், இ.டி.எஃப்.-கள்) கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கு, குறைவான விலை
• பாஸ்ஸிவ் போர்ட்ஃபோலியோ நிர்வாகத்தில் (எம்.எஃப்-கள், இ.டி.எஃப்-கள்) குறைவான கண்காணிப்பு பிழைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is MCX-SX? | எம்.சி.எக்ஸ்.-எஸ்.எக்ஸ். என்றால் என்ன?

India recently launched its third bourse after Bombay Stock Exchange and National Stock Exchange, known as the MCX- SX. The exchange provides trading platform for equity and derivatives segment.
Story first published: Sunday, May 5, 2013, 15:20 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns