மோட்டார் இன்சூரன்ஸை எப்போது, எப்படி க்ளெய்ம் பண்ணுவது?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாகன காப்பீட்டு இழப்பீட்டை எப்போது, எப்படி பெறுவது?
சென்னை: வாகன காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எந்தெந்த காரணங்களுக்காக இழப்பீடு பெறலாம் என்பதை மக்கள் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

அவ்வாறு இழப்பீடு பெறுவதற்கான காரணங்களைப் பார்ப்போம்:

1) மூன்றாவது தரப்பினருக்கு ஏற்படும் உடல் சேதம் அல்லது பொருள் சேதம். அல்லது,

2) காப்பீடு செய்திருப்பவருக்கு ஏற்படும் தனிநபர் சேதம், காப்பீடு செய்யப்பட்டுள்ள வாகனத்திற்கு ஏற்படும் சேதம். இந்த சுய சேத இழப்பீட்டைப் பெற அனைத்து இழப்புகளையும் ஈடு செய்யும் விரிவான காப்பீடு வைத்திருப்பது அவசியம்.

மூன்றாம் தரப்புக்கான இழப்பீடு

உங்கள் வாகனம் சம்பந்தப்பட்ட விபத்துகளில் மூன்றாம் தரப்புக்கான இழப்பீட்டை பெற விரும்பினால் உடனே காவல் துறைக்கும், காப்பீட்டு நிறுவனத்திற்கும் தெரியப்படுத்துதல் அவசியம். அல்லது வேறு ஒருவரின் வாகனம் சம்பந்தப்பட்ட விபத்துகளில் பாதிக்கப்பட்டவர் நீங்களாக இருந்தால் காப்பீடு சம்பந்தப்பட்ட விவரங்களை வாகன உரிமையாளரிடம் இருந்து பெற்று காப்பீடு நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

வாகன காப்பீடு செய்திருக்கும் நபர்கள் இழப்பீட்டை எப்போது பெறுவது எப்படி பெறுவது என்பது குறித்து அறிந்து வைத்திருத்தல் அவசியம்.

சுய சேதத்திற்கான இழப்பீடு

வாகன விபத்து குறித்த இழப்பீடு கோரும் போது அது குறித்த விவரங்களை காவல் துறையிடமும், காப்பீட்டு நிறுவனத்தினிடமும் தெரிவித்தல் அவசியம். அவ்வாறு தெரிவித்தால் மட்டுமே விபத்து நடந்த இடத்திற்கு ஒரு சோதனையாளரை அனுப்பி சேதத்தின் அளவு குறித்து அவர்களால் ஆய்வு செய்ய முடியும்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து காவல் துறை மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் வாகனத்தை நகற்ற முயற்சிக்கக் கூடாது. வாகனத்தை எடுத்துச் செல்ல உத்தரவு கிடைத்த பின் அவ்வாறு செய்தல் நன்று.

உங்கள் காப்பீடு பணமில்லா சேவை அளிப்பதாக இருந்தால் வாகனத்தை சரி செய்யும் பணிமனைக்கு காப்பீட்டு நிறுவனமே நேரடியாக சரி செய்ய ஆகும் கட்டணத்தை அளித்துவிடும். இந்த சேவை இருந்தாலும் இல்லாவிடினும் காப்பீடு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிப்பது அவசியம்.

திருட்டுக்கான காப்பீடு

உங்கள் வாகனம் திருட்டு போனால் உடனே காவல் துறைக்கும், காப்பீடு நிறுவனத்திற்கும் தெரிவிக்க வேண்டும். அத்துடன் போக்குவரத்து துறைக்கு தெரிவிப்பதும் அவசியம். காப்பீடு ஆவணத்தை பெற்ற உடனேயே இழப்பீடு பெறுவதற்கான முறைகளையும், ஆவணக்கோப்புகளையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இழப்பீடு கோரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சேர்த்து, கையொப்பமிட்டு காப்பீடு நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும்.
குறிப்பிட்ட சில வகையான இழப்பீடுகளுக்கு சில சிறப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு திருட்டு போனதற்கான இழப்பீடு கோருவதற்கு வாகனத்தின் மாற்று சாவிகளை காப்பீடு நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

When and how to claim for motor insurance? | வாகன காப்பீட்டு இழப்பீட்டை எப்போது, எப்படி பெறுவது?

Individuals who have availed motor insurance should know when and how to claim insurance. A claim under a motor insurance policy could be: 1) For personal injury or property damage related to someone else. This person is called a third party in this context or 2) For damage to your own, insured, vehicle. This is called an own damage claim and you are eligible for this if you are holding what is known as a package or a comprehensive policy.
Story first published: Monday, May 6, 2013, 13:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X