அந்த அறிவிப்பை கண்டு பீதியடையாதீர்கள், மேலும் அந்த அறிவிப்பை புறக்கணிக்க ஒருபொழுதும் முயற்சி செய்யதீர்கள். இந்த அறியாமை உங்களுக்கு தீமையை உருவாக்கும். இதற்காக உங்களுக்கு ரூ10,000 வரை அபராதமும், அதைத் தவிர அபராத வரி மற்றும் வட்டி போன்றவை விதிக்கப்படலாம். எனவே, அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படி, அனைத்து ஆவணங்களுடன் ஏஓவை சந்திக்க வேண்டும். அவ்வாறு சந்திக்கச் செல்லும் முன் பின்வரும் விபரங்களை படித்து விட்டுச் செல்லுங்கள்.
1. அந்த அறிவிப்பினுடைய நோக்கத்தை முழுமையாக புரிந்து கொள்ளவும்
2. அந்த அறிவிப்பில் உள்ள உங்களுடைய பெயர், முகவரி, மற்றும் நிரந்தர கணக்கு எண் போன்ற விபரங்களை சரிபார்த்து கொள்ளவும். ஏனெனில் விபரங்கள் தவறாக அச்சிடப் பட்டிருக்கலாம். ஆனால் வருமான வரித் துறைக்கு உங்களுடைய பான் எண்ணே போதுமானது. அதை வைத்தே அவர்கள் உங்களை அடையாளம் கண்டு கொள்வார்கள்.
3. அந்த அறிவிப்பில் அதிகாரியைப் பற்றிய விவரங்களான பெயர், பதவி, கையெழுத்து மற்றும் அலுவலக முகவரி மற்றும் வருமான வரி வார்டு/வட்டம் எண் போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும். அது நீங்கள் ஏமாற்றப்படுவதில் இருந்து பாதுகாக்கும்
4. இப்போது, மின்னணு அறிவிப்புகளின் சகாப்தம் தொடங்கியுள்ளது. அதில் உள்ள 'ஆவண அடையாள எண்ணை" வருமான வரி அதிகாரிகளை தொடர்பு கொண்டு சரிபார்க்கவும்.
5. அந்த அறிவிப்பு செல்லுபடியாகும் கால அளவு, அத்துடன் ஏஓவிற்கு பதிலளிக்க வேண்டிய கால அவகாசம் போன்றவறையும் சரி பார்க்கவும். பொதுவாக, ஒரு நிதி ஆண்டின் இறுதியில் இருந்து 6 மாதங்களுக்குள் வரி செலுத்துபவருக்கு அனுப்பப்படும். ஆனால் 148 பிரிவின் படி மிக பழைய வழக்குகள் உண்மையான காரணங்களுக்காக ஏஓ மூலம் திறக்கப்பட்டு அது தொடர்பான அறிவிப்புகள் வரி செலுத்துபவருக்கு அனுப்பப்படும் சாத்தியக் கூறுகள் உள்ளன
6. அந்த அறிவிப்பின் சில பிரதிகளை பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய வழக்கிற்கு மிகவும் உதவும்.
7. அறிவிப்பு வந்த தபாலின் உறையை பத்திரமாக பாதுகாத்திடுங்கள். அந்த உறையில் விரைவு அஞ்சல் எண் மற்றும் தேதி ஆகியன அச்சிடப் பட்டிருக்கும். இது உங்களுக்கு தமதமாக அறிவிப்பு வந்து நீங்கள் தாமதமாக பதிலளிக்கும் பட்சத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும்
8. தேவையான ஆவணங்களை சேகரித்து, அதை வரிசைப் படுத்தி ஒரு கடிதத்தை தயாரித்துக் கொள்ளுங்கள். ஆவணங்களை அந்த கடிதத்துடன் இணைத்து அதை நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அது இந்த வழக்கு சம்பந்தமான எதிர்கால தேவைகளுக்காக உங்களுக்கு உதவும்.
9. உங்களுக்கான அறிவிப்பு 143 (2) பிரிவின் கீழ் அனுப்பப் பட்டிருந்தால், முக்கிய செலவுகள், வருமானம் மற்றும் கடன் விவரங்கள், வங்கி அறிக்கைகள், போன்ற வழக்கு தொடர்பான அடிப்படை ஆவணங்களை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தயாரித்த கோப்பை ஒப்படைக்கும் பொழுது அதனுடன் இணைக்கப்பட்ட கடிதத்தின் நகலின் மீது கோப்பை ஒப்படைத்தற்கான அத்தாட்சியை பெற்று அதை பாதுகாப்பாக வைத்திருங்கள். இது நீங்கள் ஒப்படைத்த ஒவ்வொரு ஆவணம் மற்றும் அதைப் பற்றிய விவரங்களுக்கான சாட்சியாகும்.
10. வழக்கு மிகவும் சிக்கலாக உள்ளது என்றால், தொழில்முறை ஆலோசகர்களான CA, CS, வழக்கறிஞர் போன்றவர்களின் உதவியை நாடலாம். அவர்கள் உங்களுக்கு அறிவிப்பின் நோக்கத்தை விளக்குவதுடன் வழக்கிற்கு தேவையான ஆவணங்களை சேகரிக்க உதவிபுரிவார். மேலும் அவரிகள் ஏஓ வின் முன்னால் விசரணைக்கு நேரில் ஆஜராகும் பொழுது நீங்கள் அளிக்க வேண்டிய பதில்களைப் பற்றி உங்களுக்கு விளக்குவார்கள்.