வீட்டுக் கடன் மற்றும் எச்.ஆர்.ஏவில் கிடைக்கும் வரி சலுகை!!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டுக் கடன் மற்றும் எச்.ஆர்.ஏவில் கிடைக்கும் வரி சலுகை!!!!
வீடு வாங்குவது அல்லது கட்டுவது என்பது பலரின் கனவு. வீட்டுக்கடனை சரியான முறையில் செயல்படுத்தினால் வட்டியை வெகுவாக குறைக்கலாம். வீட்டுக்கடனுக்கான வட்டில் சில வரி சலுகை கிடைப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உங்கள் சம்பளத்தின் ஒரு அங்கமான வீட்டு வாடகைப்பிடி(ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ்) எனப்படும் எச்.ஆர்.ஏ-வையும் வீட்டுக்கடனோடு சேர்த்தால் மேலும் வரி நன்மைகள் கிடைக்கும் என்பது சிலருக்கு மட்டும் தான் தெரியும்.

எச்.ஆர்.ஏ-வும் (HRA) வீட்டுக்கடனும் வருமான வரி சட்டத்தின் கீழ் இரு வேறு பிரிவுகளில் தனித்தனியாக செயல்படும். எச்.ஆர்.ஏ. பிரிவு 10 (13A)விதி 2Aவிற்கு கீழ் வருகிறது. வீட்டுக்கடன், பிரிவு 80 C (அசலை திருப்பிச் செலுத்துதல்) மற்றும் பிரிவு 24-க்கு (வீட்டுக்கடனுக்கான வட்டி செலுத்துதல்) கீழும் பயன்களை பெறுகிறது.

 

எச்.ஆர்.ஏ-வின் பயனை பெறுவதற்கு தேவையானவை:

 

* பணியாளர்கள் எச்.ஆர்.ஏ-வை தங்கள் சம்பளத்தின் ஒரு அங்கமாக பெறுவார்கள்.
* எச்.ஆர்.ஏ-வை பெறும் பணியாளர்கள் அதற்குண்டான சொத்துக்கு சொந்தம் கொண்டாட முடியாது.
* தான் குடியிருக்கும் வீட்டுக்கு பணியாளர் வாடகை செலுத்தி வருவர். அதற்கு ஒரு வாடகை
ஒப்பந்தமும் இருக்க வேண்டும்.

கீழ் சொல்லப்பட்டிருக்கும் சூழ்நிலைகளில் HRA மற்றும் வீட்டுக்கடனால் அதிகப்பட்ச பயன்பாட்டை பார்க்கலாம்.

சூழ்நிலை 1

சொந்த வீடு - கடன் வாங்கிய வீட்டிலேயே வசித்து வந்தால், அதற்கு HRA பெற முடியாது. ஆனால் இந்த பயனை பிரிவு 80C-யின் கீழ் கடனின் அசலை கட்டுவதாலும் பிரிவு 24-ன் கீழ் கடனின் வட்டியை கட்டுவதாலும் பெறலாம்.

சூழ்நிலை 2

வெளியூரில் சொந்த வீடு - தன் சொந்த ஊரில் வங்கி கடன் உதவியுடன் வீடு வாங்கி இருப்போம், ஆனால் வேறு ஊரில் வாடகை வீட்டில் குடியிருப்பது என்பது இந்தியாவில் பொதுவான ஒன்று. இதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்த சூழ்நிலையில் இந்த நபருக்கு எச்.ஆர்.ஏ மற்றும் வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டிக்கும் வரி சலுகை கிடைக்கும்.

சூழ்நிலை 3:

வசிக்கும் ஊரிலேயே உங்கள் சொந்த வீடு - நீங்கள் வசிக்கும் ஊரிலேயே வீடு வாங்க கடன் வாங்கியிருந்தும் வாடகை வீட்டில் குடியிருந்தால், அப்போதும் எச்.ஆர்.ஏ மற்றும் வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டிக்கும் வரி நலனடைவு கிடைக்கும்.

a) கட்டிக்கொண்டிருக்கும் வீடு:

கடன் வாங்கி கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் கட்டுமானம், இன்னும் முடிவடையவில்லை என்றால் வாடகை வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படியானால் எச்.ஆர்.ஏ மற்றும் வீட்டின் கட்டுமானம் முடியும் வரையிலான கடனுக்கான அசலுக்கும் வரி பயனை பெறலாம்.

b) வீட்டின் கட்டுமானம் முடிவடைந்திருந்தாலும் உண்மையான காரணங்களால் குடியேற முடியாமல் போவது:

நீங்கள் கடனுக்கு வாங்கிய வீட்டின் கட்டுமானம் முடிவடைந்திருந்தாலும், அலுவலகத்துக்கு செல்லும் தூரம் அதிகம் போன்ற உண்மையான காரணங்களால் நீங்கள் அங்கே குடியேறாமல் போகலாம். அப்படியானால் குடியிருக்கும் வாடகை வீட்டிற்கு எச்.ஆர்.ஏ பெறுவதோடு வீட்டுக்கடன் பயன்களையும் அனுபவிக்கலாம்.

c) சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு நீங்கள் வாடகை வீட்டில் குடியிருப்பது:

நீங்கள் கட்டிய சொந்த வீட்டில் யாரையாவது வாடகைக்கு அமர்த்திவிட்டு நீங்கள் வாடகை வீட்டிலேயே குடியிருந்தால், எச்.ஆர்.ஏ பெறுவதோடு வீட்டுக்கடன் பயன்களையும் அனுபவிக்கலாம்.

ஆனால் உங்கள் சொந்த வீட்டிற்கு நீங்கள் வாடகை பெறுவதால் அதுவும் ஒரு வகை வருமானமே. எனவே அதற்கு நீங்கள் வரி கட்ட வேண்டியிருக்கும்.

அதனால் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் எச்.ஆர்.ஏ பெறுவதோடு வீட்டுக்கடன் பயன்களையும் அனுபவிக்கலாம். மேலும் உங்கள் அலுவலகத்தின் முதலாளிகள் இவைகளுக்கு கட்டுப்பாடு வைத்திருக்கலாம். அதனால் எச்.ஆர்.ஏ மற்றும் வீட்டுக்கடன் பயன்களை அனுபவிக்க உங்கள் முதலாளியிடம் கலந்தாலோசிப்பது அவசியம். இவை அனைத்தும் எச்.ஆர்.ஏ மற்றும் வீட்டுக்கடன் பற்றிய உங்களின் சில சந்தேகங்கள் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to claim tax benefits from home loan and HRA?

Buying a home is a dream come true for many , but a bit of homework 
 could reduce your tax liability enormously. Many of us are aware that 
 interest on home loan enjoys tax benefits, but only few might know that 
 House Rent Allowance, a component in your salary, could also be a big 
 tax saver if it is combined with the home loan benefit.
Story first published: Monday, June 24, 2013, 15:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X