டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் செய்யும் முன் இதைப் படிங்க

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இ-மெயில் படித்தல், மெஸேஜ் அனுப்புதல், கேம் விளையாடுதல் என்ற அனைத்தையும் தாண்டி நம்முடைய வாழ்வின் பொருளாதாரத்தோடு மிகவும் இணைந்ததாக இருப்பதுதான் இந்த 21-ம் நூற்றாண்டின் மின்னணு யுக நிதி பரிவர்த்தனைகள். இதனால் தான் உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் உள்ளவருக்கு சில விநாடிகளில் பணம் அனுப்பவும், பெறவும் முடிகிறது.

  மேலும், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என பல்வேறு பரிவர்த்தனை அட்டைகளும் நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றாக உள்ளன. இது மட்டுமல்லாமல், பணத்தை கையில் எடுத்துக் கொண்டு செல்வது, பூனையை மடியில் கட்டிக்கொண்டு போவது போல் அபாயகரமானதாகவும் இருப்பதால், இன்றைய எலக்ட்ரானிக் பரிவர்த்தனைகளை நாம் பயன்படுத்துவது அத்தியவாசியமான விஷயமாக உள்ளது.

   

  எனவே இன்றைய வாழ்க்கை எலக்ட்ரானிக் ஒயர்களால் மிகவும் அதிகளவில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் நமது தடயங்களை அல்லது இரகசிய பரிவர்த்தனைகளை பிறர் அறியாமல் செய்வதும் ஏறக்குறைய மிகவும் அபூர்வமான விஷயமாகவே உள்ளது. காலையில் நமது செல்போன் வாட்சின் அலாரத்துடன் தொடங்கும் நாளில், பேஸ்புக் பார்ப்பது, வழக்கமான அலுவலக வேலைகளை செய்வது என நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு சில மவுஸ் கிளிக்குகளில் நம்முடைய வங்கி தொடர்பான பரிவர்த்தனைகளும் நடக்கும். இணைய வழிகளில் அதிகமான அளவில் நடத்தப்படும் இந்த பரிவர்த்தனைகளின் போது நம்முடைய அடையாளம் திருடு போகும் ஆபத்துக்கள் மிகவும் அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

  முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்களுடைய அடையாளத்தைப் பயன்படுத்தி உருவாக்கும் புதிய அடையாளத்தின் மூலம், திருடர்கள்-வங்கி கடன்கள், பிற பொருட்கள் ஆகியவற்றை பெயரில் அடையாளத்தில் வாங்கி விடுவார்கள். அதன் பின்னர் அந்த கடன்களை வசூலிக்க அதிகாரிகள் வரும்போது தான் உங்களுக்கே இந்த தகவல்கள் தெரியும். எனவே, நாம் எந்த அளவிற்கு புத்திசாலித்தனமாகவும், எச்சரிக்கையாகவும் நடந்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு அது நமக்கு

  பாதுகாப்பானதாக இருக்கும்.

  இந்த "அடையாளத் திருட்டுகள்" இணையத்தின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் இந்தியாவில் அதே வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்த வகை ஆபத்துகளிலிருந்து தப்பிப்பதற்கும், உங்களுடைய அடையாளம் மற்றும் டிஜிட்டல் நிதி பரிவர்த்னைகளை பாதுகாப்பதற்கும் சில வழிமுறைகளை தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.

  அடையாளப் பாதுகாப்பு

  அடையாளங்களை திருடுவதற்காகவே சுற்றித் திரியும் திருடர்களிடமிருந்து தப்பிக்க அவர்களுடைய வழிமுறைகளையே பயன்படுத்துங்கள். இந்த தடுப்பு வழிகள் உங்களுடைய டிஜிட்டல் வாழ்க்கையை பாதுகாப்பானதாகவும் மற்றும் வலுவானதாகவும் வைத்திருக்க உதவும்.

  பாதுகாப்பு மென்பொருள்

  உங்களுடைய கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருப்பதற்கு உடனடி தேவை ஒரு பாதுகாப்பு மென்பொருள். எனவே இதனை வாங்கி உங்களுடைய கம்ப்யூட்டரில் உடனடியாக ஏற்றி விடுங்கள். பின்னர், உங்களுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பிரௌசர்களின் பாதுகாப்பு மென்பொருள் 'அப்டேட்டாக' உள்ளதை அவ்வப்போது சரி பார்க்கவும். நீங்கள் இந்த பாதுகாப்பு மென்பொருள்கள் தானாகவே அப்டேட்டாகும் வகையில் இந்த மென்பொருள்களை செட்-அப் செய்யவும் முடியும்.

  எக்ஸ்டர்னல் ஹார்டு-ட்ரைவ்

  கணினியில் உள்ள தகவல்களை ஒரு எக்ஸ்டர்னல் ஹார்டு டிஸ்க்கில் பேக்-அப் செய்து கொள்ளுங்கள். மேலும், உங்களுடைய முக்கியமான நிதி தொடர்பான ஃபைல்களை பிரிண்ட் எடுத்தும் வைத்துக் கொள்ளலாம், ஏனெனில் உங்களுடைய டிஜிட்டல் ஃபைல்கள் திருடு போனாலும், கையிலுள்ள காகிதம் உங்களுக்காக பேசும்.

  க்ளவுட் ஸ்டோரேஜ்(cloud storage)

  உங்களுடைய மேஜையிலுள்ள கணினி, மடிக்கணினிஅல்லது ஸ்மார்ட் போன்களைப் போலவே, உங்களுடைய எக்ஸ்டர்னல் ஹார்டு டிரைவ்களும் தீ, திருட்டு மற்றும் பல ஆபத்துக்களை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதால் 'க்ளவுட் ஸ்டோரேஜ்' எனப்படும் ஆன்லைன் தகவல் சேமிப்பு சர்வர்களில் உங்களுடைய தகவல்களை சேமித்து வைக்கலாம். 'க்ளவுட் ஸ்டோரேஜ்'-ல் சேமிக்கும் போது உங்களுடைய வீட்டில் எந்த வித ஆபத்துகள் ஏற்பட்டாலும் இந்த தகவல்கள் அழியாமல் பாதுகாக்கப்படும்.

  பாஸ்வேர்ட்(Password)

  ஸ்மார்ட் போன்களை லாக் செய்யாமல் வைப்பதோ அல்லது ஒரு கணக்கிற்கும் மேலாக ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவதையோ கண்டிப்பாக தவிர்க்கவும். பாஸ்வேர்டுகளை உருவாக்கும் போது கற்பனைத்திறனை முழுமையாக பயன்படுத்தி அதனை மற்றவர்கள் யாரும் யூகிக்க முடியாதவாறு வைத்திருங்கள். மேலும் அவற்றை தப்பித்தவறியும் கூட உங்களுடைய லேப்டாப்கள் அல்லது ஸ்மார்ட் போன்களில் குறித்து வைக்க வேண்டாம்.

  தகவல் மறை குறியீடு

  எப்பொழுதுமே இணைய வழி பரிவர்த்தனைகளில் பாதுகாப்பான மறைகுறியீடுகளுடன் (Encrypt) பயன்படுத்துங்கள். உங்களுடைய ப்ரௌஸரில் உள்ள ஸ்டேட்டஸ் பாரை அவ்வப்போது கவனியுங்கள். அதில் உள்ள 'பூட்டு' குறியீட்டிற்கு பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அர்த்தமாகும். நிதி தொடர்பான பரிவர்த்தனைகளை பொதுவான வயர்லெஸ் வலைத்தளங்களில் (Public Wi-Fi Networks) பயன்படுத்தக் கூடாது என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம். எனவே அவற்றை பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும். அவ்வகையில் பண பரிவர்த்தனைகள் செய்யும் போது என்ன அனுப்புகிறீர்கள் மற்றும் பெறுகிறீர்கள் என வெளி நபர்களுக்கும் தெரிந்து விடும்.

  அலர்ட்

  ஒவ்வொருமுறை உங்களுடைய பற்று அட்டை அல்லது கடன் அட்டைகளை பயன்படுத்தும் போதும், மொபைல் மற்றும் இ-மெயிலுக்கு தகவல்கள் தரும் வங்கி சேவைகளை தவறாமல் பயன்படுத்துங்கள். இதன் மூலம் உங்களுக்குத் தெரியாமல் உங்களுடைய கணக்கில் நடக்கும் தவறான பரிவர்த்தனைகள் உங்களுடைய கவனத்திற்கு உடனடியாக வந்து விடும்.

  கவனமாக அழியுங்கள்

  தனிப்பட்ட தகவல்களை கொண்ட படிவங்களை அழிக்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். அது உங்களுடைய பிறந்த நாளை கொண்ட 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் நகலாக இருந்தாலும் சரி, அது தேவையற்ற போது முழுமையாக அழிக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  How to protect your identity and digital financial life?

  Today, life is digitally wired and hyper-connected in a way that digital foot printing is almost inescapable. Our day starts when phone alarm beeps us in the morning, Facebook chats and routine office work happen almost simultaneously and banking transactions are just clicks away. In this daily hustle bustle, we overlook the potential danger of being a victim of identity theft, which is on a rise in India in the wake of increasing adaptation to the internet. Here are measures to protect your identity and digital financial life.
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more