கத்தார் கோடீஸ்வரர்களின் ராஜ்ஜியம்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கத்தார் கோடீஸ்வரர்களின் ராஜ்ஜியம்!!!
சென்னை: எண்ணைய் வளம் மிக்க கத்தார் நாட்டில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அந்த ஆய்வு அறிக்கையின் படி அந்த நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 14.3 சதவீத மக்களின் சொத்து மதிப்பு சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம்.

 

(What are the penalties for delay in filing tax returns?)

இந்த எண்ணிக்கை உலக சராசரி அளவை விட அதிகமாகும். கத்தாரில் தனியாருக்கு சொந்தமான 1000 வீடுகளில் சுமார் 143 வீடுகள் குறைந்த பட்சம் 1 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் அதற்கு அதிகமான சொத்துகளுடன் திகழ்கின்றன.

இந்த வரிசையில் குவைத் 11.5 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், பஹ்ரைன் (4.9 சதவீதம்) மற்றும் ஐக்கிய அரபு குடியரசு (4.0 சதவீதம்) ஏழாவது மற்றும் ஒன்பதாவது இடத்தில் உள்ளன என பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (பி.சி.ஜி) இன் 13 வது ஆண்டு உலக செல்வ மேலாண்மை அறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா (MEA) வின் செல்வம் 2012ல் 9.1 சதவீதத்துடன் இரட்டை இலக்க வளர்ச்சியை கண்டுள்ளது என அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.

அந்த ஆய்வு அறிக்கையில் 2017ஆம் ஆண்டில் MEAவில் உள்ள தனிநபர்களின் செல்வ மதிப்பு சுமார் 6.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிவிடும் என்றும், அந்த நாடுகளின் ஆண்டு வளர்ச்சி விகிதம் சுமார் 6.2 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு, எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளின் வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட புதிய சொத்து உருவாக்கத்தால் சாத்தியப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த பகுதியில் உள்ள தனியாரின் சொத்து வளர்ச்சி என்பது பெரும்பாலும் சீறிப் பாயும் ஜிசிசி(GCC) பங்கு சந்தை மற்றும் ஒட்டுமொத்த உலக பங்கு சந்தைகளில் முன்னேற்றத்தால் இயக்கப்படுகிறது. இதைத்தவிர உள்ளூர் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏற்பட்ட ஏற்றம் அதிக முதலீடுகளை உட்கொண்டு வந்து கூடுதல் பணப்புழக்கத்திற்கு வழிவகை செய்தது.

ஜிசிசி பகுதியில் உள்ள தனிப்பட்ட சந்தைகள் வெவ்வேறு முடிவுகளை கொடுத்த போதிலும், இந்த பகுதிகளில் உள்ள தனிநபர்களின் பங்கு சார்ந்த சொத்து மதிப்பு 2012 இல் வலுவான வளர்ச்சி கண்டுள்ளது ", என மார்கஸ் மாஸ்ஸி, பார்ட்னர் மற்றும் பி.சி.ஜி மத்திய கிழக்கு நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடுகள், உயர்-நிகர-மதிப்பு(UHNW) குடும்பங்கள் வரிசையில் உயர்ந்த இடத்தில் உள்ளது. அதாவது தனியாரின் சொத்து மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம் உள்ள குடும்பங்கள் மத்திய் கிழக்கில் அதிகம்.

கத்தார் இந்த வகையில்(UHNW) 4ம் இடம் பெற்றுள்ளது. இங்கு 1,00,000 குடும்பங்களில் சுமார் 8 குடும்பங்கள் இந்த வரையறையின் கீழ் வருகின்றன. குவைத் மற்றும் ஐக்கிய அரபு குடியரசு 7 வது மற்றும் 15 வது இடத்தில் உள்ளன. இங்கு 7 மற்றும் 3 குடும்பங்கள் (100,000 குடும்பங்களுக்கு) இந்த வரையறையின் கீழ் வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Qatar has highest density of millionaires: Study

Qatar has the highest density of millionaires in the world, with 14.3 percent of the oil-rich Gulf nation's population holding private wealth of at least USD 1 million, according to a report.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X