வருமானவரி அறிக்கையை உரிய நேரத்தில் சமர்பிக்காவிட்டால் வரும் தண்டங்கள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமானவரி அறிக்கையை உரிய நேரத்தில் சமர்பிக்காவிட்டால் வரும் தண்டங்கள்!!
சில காரணங்களால் உரிய நேரத்தில் வருமானவரி அறிக்கையை சமர்பிக்க முடியாமல் போகலாம். இதையே இப்படியும் சொல்லலாம்; உரிய காலத்திற்குள் வருமானவரி விவர அறிக்கையை சமர்ப்பித்தால் போதிய பயனை பெறலாம்!!.

(4 risk free investment options for NRIs)

வரி விதிப்புக்குரியவர் உரிய நேரத்தில் வருமானவரி விவர அறிக்கையை சமர்ப்பித்தால் (பொதுவாக ஜூலை 31), அதில் ஏதாவது தவறு இருந்தாலோ அல்லது எதேனும் குறிப்பிட விட்டுப்போனாலோ மீண்டும் ஒரு முறை சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பான் என் அல்லது வங்கி விவரங்களில் தவறு இருந்தாலும் கூட அதை சரி செய்யலாம்.

இந்த மறு சமர்ப்பிப்புக்கு கால அவகாசம் என்பது சமர்ப்பித்த வருடத்தில் இருந்து ஒரு வருடமாகும். மறு சமர்ப்பிப்புக்கு எந்த ஒரு தண்டத் தொகையும் கிடையாது.

ஒருவர் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் வருமானவரி அறிக்கையை சமர்ப்பிக்காமல் போனால் அவருக்கு மறு சமர்ப்பிப்புக்கு தகுதி இருக்கிறதா என்ற கேள்வி இப்போது எழலாம். ஆம், கால நேரத்திற்குள் வருமானவரி அறிக்கையை சமர்ப்பிக்காமல் போனால், மறு சமர்ப்பிப்பு செய்யும் பயன் கிடைக்காமல் போகும். இதற்கு காரணம் அது காலங் கடந்த சமர்ப்பிப்பாவதால்.

உரிய நேரத்தில் சமர்ப்பிப்பதால் கிடைக்கும் மற்றோரு பயன், தொழிலில் அடையும் நஷ்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகள் கிடைக்கும். இதுவே உரிய நேரத்தில் வருமான வரி விவர அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றால் இந்த பயனை அனுபவிக்க முடியாது. அதனால் நஷ்டங்களை அடுத்த வருட லாபத்தோடு கழிக்க முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போகும்.

இதனால் கிடைக்க போகும் மற்றொரு பயன் - ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து வரித்திருப்பத்திற்கான வட்டித் தொகை அளிக்கப்படும்.

உரிய நேரத்தில் வருமான வரி விவர அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றால், சமர்ப்பிப்பும் மாதத்தில் இருந்து வரித்திருப்பம் மாதம் வரை தான் வட்டித் தொகை அளிக்கப்படும். ஏப்ரல் மாதத்தில் இருந்தே வட்டி தொகை கணக்கிடப்படாது.

கால தாமதமாக தாக்கல் செய்பவர்களிடம் வட்டியும் தண்டத் தொகையும் வசூலிக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the penalties for delay in filing tax returns?

There are several consequences of not filing tax returns on time. In fact, if you put it the other way round, there are various benefits of filing tax returns on time.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X