
டிவிடென்ட் டிஸ்ட்ரிபியூஷன் வரி என்றால் என்ன?
வருமான வரிச்சட்டம், 1961, பிரிவு எண் 10(34) -இன் பிர கடனத்தின் படி, உள்ளூர் நிறுவனம், ஒரு வரி விதிப்பு ஆண்டில் அதற்குக் கிடைத்த மொத்த வருமானத்துக்கு செலுத்தும் வருமான வரியோடு, அந்நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட, விநியோகிக்கப்பட்ட அல்லது செலுத்தப்பட்ட தொகைக்கான கூடுதல் வரியாக விதிக்கப்படும் தொகையே டிவிடென்ட் டிஸ்ட்ரிபியூஷன் வரி ஆகும். டிடிடி, கடன் மியூச்சுவல் ஃபண்ட்களுக்கும் பொருந்தும். இந்த ஃபண்ட்களில், சில்லறை முதலீட்டாளர்களுக்கு விநியோகிக்கப்படும் டிவிடென்ட்டுக்கான வரியை இந்த கடன் ஃபண்ட்களே செலுத்துகின்றன; அவ்வரியே டிவிடென்ட் டிஸ்ட்ரிபியூஷன் வரி ஆகும்.
யார் யாரெல்லம் இவ்வரியை செலுத்த வேண்டியிருக்கும்?
நிறுவனங்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட்கள் டிவிடென்ட் டிஸ்ட்ரிபியூஷன் வரியை செலுத்தி விடுவதனால், முதலீட்டாளர்களின் கைகளில் கிடைக்கும் டிவிடென்ட் வருமானத்துக்கு வரி விதிப்பு இருக்காது. நிஜமான பேமெண்ட்டுக்கு முன், நிறுவனங்கள் மற்றும் கடன் நிதிகள், அறிவிக்கப்பட்ட டிவிடென்ட்டிலிருந்து டிடிடியை பிடித்தம் செய்த பின்னர், எஞ்சியிருக்கும் தொகையையே முதலீட்டாளர்களுக்கு டிவிடென்ட் வருமானமாக வழங்குகின்றன.
அதனால், பொது முதலீட்டாளர் பெறும் டிவிடென்ட் வருமானம், வரிவிதிப்புக்கு அப்பாற்பட்டது, ஆனால் உண்மையில் டிவிடென்ட் வருமானம் வரிவிதிப்புக்கு அப்பாற்பட்டதல்ல.
முதலீட்டாளர்கள் ஏன் கவலை கொள்ள வேண்டும்?
இது சர்ச்சைக்குரிய வரி தான்; என்றாலும், டிவிடென்ட் டிஸ்ட்ரிபியூஷன் வரியை அதிகரிக்கும்படி, நிதியமைச்சகத்தால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் உத்தரவு, புதிதாய் கவலை கொள்ள வைக்கிறது. சுமார் 12.5% ஆக இருந்த சில்லறை முதலீட்டாளர்களுக்கான கடன் நிதி முதலீடுகளின் வரி வகிதம், தற்போது சுமார் 25% ஆக உயர்ந்துள்ளது. இந்த வரிஅதிகரிப்பு, அனைத்து கடன் ஃபண்ட்கள், கோல்ட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்கள் மற்றும் குளோபல் ஃபண்ட்களை பாதிக்கக்கூடியதாக இருக்கும்; ஏனெனில், வரி விதிப்புக்குப் பின் இவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய ரிட்டர்ன்கள் மிகவும் குறைவாக இருக்கும். லிக்விட் ஃபண்ட்களுக்கு ஏற்கெனவே சுமார் 25% அளவுக்கு வரி விதிக்கப்படுகிறது; அதனால் அவற்றில் எந்த மாற்றமும் இருக்காது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications