டிவிடெண்ட் என்றால் என்ன? அதை கணக்கிடுவது எப்படி?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிவிடெண்ட் என்றால் என்ன? அதை கணக்கிடுவது எப்படி?
சென்னை: ஒவ்வொரு ஆண்டும், நிறுவனங்கள் லாபம் ஈட்டும் போது, அந்த லாபத்தை பங்குதாரர்களுக்கு பகிர்ந்து அளிப்பது வழக்கம். இதனைத் தான் டிவிடெண்ட் அல்லது லாபப் பங்கு என்பர்.

டிவிடெண்ட் தொகை என்பது என்ன ?

 

பொதுவாக, அதிகமாக டிவிடெண்ட் தரும் நிறுவனப் பங்குகளை வாங்குவது சிறப்பு. சரி, ஒரு உதாரணம் மூலமாக லாபத் தொகையை எப்படி கணக்கிடுவது என்பதைப் பார்ப்போம்.

 

ஏ என்னும் நிறுவனப் பங்கு, 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதில் ஒரு 10 பங்கினை வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

பங்கு வாங்க செய்யும் முதலீட்டுத் தொகை = ரூ 100 X 10 = ரூ.1000

அந்த நிறுவனம், ஒரு பங்கிற்கு, ஒரு ரூபாய் லாபத் தொகையை நிர்ணயிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

ஆக, 10 பங்கிற்கு, 10 ரூபாய் லாபத் தொகையாக கிடைக்கிறது.

1000 ரூபாய் முதலீடு செய்ததற்கு 10 ரூபாய் லாபம். அதாவது 1 சதவிகிதம் லாபம் கிடைத்துள்ளது.

பொதுவாக, ஒரு தொகையை முதலீடு செய்யப் போகிறோம் என்றால், அந்த முதலீடு வங்கி வட்டியில் கிடைக்கும் லாபத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள் நினைப்பர். வங்கி வட்டியை விட குறைவாகவோ அல்லது அதே அளவிற்கு இருந்தால், வங்கியில் போடுவது பாதுகாப்பான முதலீடாக தோன்றுவது இயல்பு.

பங்கு வாங்கி ஆறே மாதத்தில் லாபப்பங்குத் தொகை கிடைத்தால், அது இரட்டை லாபமாக கருதப்படுகிறது.

பங்குச் சந்தையில், பல நிறுவனங்கள் அதிக லாபப் பங்குத்தொகை வழங்குகின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பொதுத் துறை வங்கிகளைச் சொல்லலாம். இந்தப் பங்குகள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன, அதிக லாபப் பங்குத் தொகையும் வழங்குகின்றன.

ஆந்திரா வங்கி, ஐடிபியை வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி போன்ற வங்கிகள் அதிக லாபத் தொகை வழங்கும் வங்கிகளில் சில.

பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம், நேரத்திற்கேற்ப பங்குகளின் விலை ஏறுவதோடு மட்டுமல்லாமல், அந்தப் பங்கிற்கான லாபத் தொகையும் கிடைக்கிறது.

நிறுவனத்தின் லாபம் மற்றும் இயக்குனர்களின் பரிந்துரையைப் பொறுத்து, எவ்வளவு லாப பங்குத் தொகை வழங்குவது என்பது தீர்மானிக்கப்படுகிறது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் லாபத் தொகை வழங்குவதில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is dividend? How is dividend yield calculated?

Each year, a profitable company declares an amount of money to be paid to the shareholders from the profits of the company.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X