ஆயுள் காப்பீடு மற்றும் அடமானம் ஆயுக் காப்பீடு என்றால் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஆயுள் காப்பீடுகள் பல வகைகளில் இருக்கின்றன. அதற்கு விளம்பரமும் அதற்கேற்றார் போல் அதிகமாக செய்யப்படுகின்றன. ஆனால் அடமான ஆயுள் காப்பீடு இன்னும் இருட்டிலேயே உள்ளன. இருப்பினும் இது ஆயுள் காப்பீடை போலவே சம அளவு முக்கியத்துவம் கொண்டவையாகும். இதனால் நமக்கு பல பயனும் உள்ளன. அதன் அமைப்பிலும் பயன்களிலும் ஆயுள் காப்பீடை போலவே இருப்பதால் மக்கள் ஆயுள் காப்பீடையே விரும்புகின்றனர். அடமான காப்பீடை பற்றி போதிய விளம்பரம் இல்லாததால் மக்களுக்கு இதன் நன்மைகள் தெரிவதில்லை. இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிவதற்கு முன் இதை பற்றி விவரமாக பார்க்கலாம்.

ஆயுள் காப்பீடு என்றால் என்ன?

ஆயுள் காப்பீடு என்றால் என்ன?

காப்பீட்டாளரின் குடும்பத்தை காக்க குறிப்பிட்ட பணத்திற்கு காப்பீடு எடுத்துக் கொள்வது. இந்த பணம் காப்பீட்டாளர் இறந்த பிறகு அவருடைய குடும்பத்தாருக்கு சென்றடையும்.

அடமானம் ஆயுள் காப்பீடு என்றால் என்ன?

அடமானம் ஆயுள் காப்பீடு என்றால் என்ன?

கடன் வாங்கியவர் கடனை திருப்பிச் செலுத்தாமல் இறந்தால் அவர் வாங்கிய கடன் பணத்துக்கான காப்பீடாகும்.

செயல்பாடு

செயல்பாடு

ஆயுள் காப்பீட்டில், காப்பீட்டாளர் கட்டணங்கள் மற்றும் செலவுகளை கழித்து ஒவ்வொரு மாதமும் தவணை கட்டணம் செலுத்த வேண்டும். உங்கள் பாலிசி முடியும் முன்பாகவே நீங்கள் இறக்க நேரிட்டால், உங்களால் முன்மொழியப்பட்டவருக்கு காப்பீடு பணம் போய் சேரும். காப்பீடு காலம் முடிந்த பின்னும் நீங்கள் உயிரோடு இருந்தால், மொத்தமாக சேர்ந்த பணம் உங்களுக்கே கிடைக்கும். காலவரம்பு திட்டத்தின் கீழ் காப்பீடு எடுத்திருந்தால் காப்பீடு முடிந்த பின் உங்களுக்கு எதுவும் திரும்பி கிடைக்காது. நீங்கள் தவணை கட்டணம் செலுத்துவதையும் நிறுத்திக் கொள்ளலாம்.

செயல்பாடு

செயல்பாடு

அடமான ஆயுள் காப்பீடு என்றால், ஒரு குறிப்பிட்ட தவணை தொகையை முதலிலேயே செலுத்திவிடுவீர்கள். ஆனால் கடன் அளவு குறைவதால் பாலிசியின் மதிப்பும் குறையவே செய்யும். அதனால்கடன் பணம் முழுவதையும் அடைத்து முடிக்கும் வரை இந்த காப்பீடும் உயிருடன் இருக்கும். கடன்பணத்தை திருப்பி செலுத்தும் முன்பாகவே நீங்கள் உயிரிழந்தால், காப்பீடு நிறுவனம் உங்கள்வங்கிக்கு மிச்சமிருக்கும் கடனை அடைக்கும். இதனால் உங்கள் குடும்பத்தை கடன்சுமையிலிருந்து காப்பாற்றலாம்.

முக்கிய வேறுபாடுகள்

முக்கிய வேறுபாடுகள்

ஆயுள் காப்பீடு வாங்கும் போது, காப்பீட்டு தொகை, காப்பீடு காலம் வரை மாற போவதில்லை.காப்பீடு காலத்திற்கு முன் இறக்கும் வரை, உங்களுக்கு ஒரே தொகை தான் திரும்பி கிடைக்கும்.

முக்கிய வேறுபாடுகள்

முக்கிய வேறுபாடுகள்

அடமான ஆயுள் காப்பீட்டில், கடனை திருப்பி அடைப்பதற்கு ஏற்ப காப்பீடு தொகையும் குறையும். உதாரணத்திற்கு கடன் வாங்கி ஐந்து ஆண்டுகளில் கடன் தொகையில் பாதி கட்டிய நிலையில் நீங்கள்இறக்க நேரிட்டால், காப்பீடு நிறுவனம் மிச்சமிருக்கும் கடன் தொகையை கடன் வழங்கியவருக்குதிருப்பி செலுத்தி விடும்.

நன்மைகள்

நன்மைகள்

ஆயுள் காப்பீடு பாலிசியில், நாமினியாக ஒருவரை முன்மொழிய வேண்டும். மறைவுக்கு பின் இந்த நபருக்கு தான் காப்பீடு பணம் போய் சேரும். இந்த பணத்தை அவர் கடனை அடைக்க, குடும்பத்தை காப்பாற்ற என எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

நன்மைகள்

நன்மைகள்

அடமான ஆயுள் காப்பீட்டில், வங்கி அல்லது கடன் கொடுத்தவர் தானாகவே முன்மொழியப்பட்டவராவார். குடும்பத்திற்கு காப்பீடு நிறுவனத்திடமிருந்து எந்த ஒரு நிதியுதவியும் கிடைக்காது. இதனால் கிடைக்கும் ஒரே நன்மை கடனுக்காக சொத்தை ஒன்றும் இழக்க போவதில்லை.

காப்பீடு பாலிசிகளை வாங்கும் முன் அதிகமான கவனம் தேவை. உங்களிடம் அதிக அளவில் பணம் இருந்தால், இந்த இரண்டு வகை காப்பீட்டிலும் பாலிசி எடுத்து உங்கள் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருங்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is the difference between life insurance and mortgage life insurance?

What is the difference between life insurance and mortgage life insurance?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X