வங்கி ஏலம் விடும் சொத்துகளில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
<ul id="pagination-digg"><li class="next"><a href="/classroom/2013/06/why-to-invest-in-bank-auctioned-property1-001040.html">Next »</a></li></ul>

வங்கி ஏலம் விடும் சொத்துகளில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
ரியல் எஸ்டேட் சந்தையில் முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகள் குறையத் தொடங்கி விட்டன. ஏனெனில் ஏற்கனவே ஏராளமான முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்துள்ளனர். மேலும் பாரம்பரிய ரியல் எஸ்டேட் முதலீட்டில் பல குறைபாடுகள் உள்ளன. பாரம்பரிய வழியில் ஒரு சொத்தில் முதலீடு செய்யும் பொழுது ஏற்படும் பிரச்சனைகளை பற்றி நாம் முதலில் பார்க்கலாம்:

வழக்கு மற்றும் சட்ட மோதல்களின் அபாயம்:

 

ஒரு சொத்தில் முதலீடு செய்யும் முன் நாம் பார்க்க வேண்டிய சட்ட அம்சங்கள் ஏராளமாக உள்ளன. இன்றைய காலகட்டங்களில் ஏராளமான ரியல் எஸ்டேட் முகவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு வில்லங்கம் உள்ள சொத்துகளை தைரியமாக விற்று விடுகின்றனர். அதை வாங்கிய பின் நாம் கடும் மன உழைச்சலுக்கு உள்ளாகிறோம். மேலும், தற்போதைய சந்தை நிலவரத்தில் சட்ட சிக்கல் இல்லாத சொத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது.

 

இடர் நிதி:

இன்றைய நிலையில் ஒரு நபர் சொத்தை வாங்கும் பொழுது பண உதவி இல்லாமல் வாங்குவது என்பது இயலாத காரியம் ஆகும். அவர் கண்டிப்பாக ஒரு வங்கி அல்லது பிற நிறுவங்களிடமிருந்து வீட்டுக் கடன் வாங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார். நமக்கு வீட்டுக் கடன் கிடைப்பது அந்த வங்கிகள் அல்லது நிறுவன்த்தின் கொள்கையைப் பொருத்தது. அவ்வாறு கடன் கிடைக்க வில்லையெனில் பிற வழிகளில் பணத்திற்கு ஏற்பாடு செய்வது மிகக் கடினமாகும்.

காலதாமதமான ஒப்படைப்பு:

அடுக்கு மாடி மற்றும் பிற புதிய குடியிருப்புகள், உடைமை ஆபத்திற்கு ஆளாகின்றன. அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பில்டர்கள் நம்மிடம் இருந்து முன்கூட்டியே பணத்தை பெற்றுக் கொண்டு சொத்தை ஒப்படைக்க கால தாமதம் செய்கின்றனர். இது போன்ற பிரச்சினைகள் மிகவும் பொதுவானது மற்றும் இவற்றை தவிர்ப்பது மிகக் கடினமானது.

மேலே குறிப்பிட்டுள்ள அபாயங்கள் மிகவும் பொதுவானவை. மேலும், பெயர் மாற்றுவது, மறைக்கப்பட்ட சுமைகள் முதலியன பாரம்பரிய வழியில் சொத்து வாங்க நினைக்கும் நபர்களை அதைப் பற்றி யோசிக்கச் செய்கின்றன. வீட்டை கட்டி விற்கும் பில்டர்கள் அந்த சொத்தின் இடத்தை பொறுத்து பிரிமீயம் வசூலிக்கின்றனர். மேலும் அந்த சொத்திற்கு பலர் போட்டியிட்டால் அதனுடைய விலை மிகவும் உயர்ந்து விடும்.

எனவே பாரம்பரிய வழியில் சொத்து வாங்கும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கான ஒரே தீர்வு, ஏலத்தில் சொத்து வாங்குவது மட்டுமே. ஒரு சாதாரண முதலீட்டாளர் பின்வரும் காரணங்களுக்காக ஏலம் மூலம் சொத்து வாங்குவதை தவிர்க்கிறார்:

- புரிதல் இல்லாமை.
- ஏலம் பற்றி தகவல் இல்லாமை.
- ஏல நிதியை ஏற்பாடு செய்வதில் உள்ள பிரச்சனை.
- ஏலத்தில் பங்கேற்கும் பங்குதாரர்கள் இடையே உள்ள தொடர்பாடல் இடைவெளி.

<ul id="pagination-digg"><li class="next"><a href="/classroom/2013/06/why-to-invest-in-bank-auctioned-property1-001040.html">Next »</a></li></ul>
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why to invest in bank auctioned property?

The opportunities in the real estate market are shrinking with the entry of a large number of investors. The traditional way of investing in real estate has many flaws and therefore it is difficult for many investors to participate in such asset class.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X