எதிர்பாராத வருவாயை எவ்வாறு சேமித்து, பாதுகாப்பது?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்மில் பலருக்கும் எப்பொழுது அதிர்ஷ்டம் கைகொடுக்கும் என்பது தெரியாது. கிடைக்கும் அதிர்ஷ்டத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேறுவதே புத்திசாலித்தனம். இன்றைய கம்ப்யூட்டர் காலத்தில் புதையல் போன்ற எதிர்பாராத அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்க முடியாவிட்டாலும், இன்றும் சிலருக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டிக் கொண்டிருக்கிறாள். நம்மில் ஒருவருக்கு எதிர்பாராவிதமாக லாட்டரி, எதிர்பாராத பரம்பரை சொத்து அல்லது சொத்து விற்பனை போன்றவற்றால் எதிர்பாராத வருமானம் அல்லது ஆதாயம் கிடைக்கலாம். அவ்வாறு கிடைத்த அதிர்ஷ்டத்தை பேணிக்காத்து மேலாண்மை செய்வது என்பது நமக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை விட மிகவும் கடினமானது.

 

நமக்கு எதிர்பாராத விதமாக பணம் கிடைத்தவுடன் நம் மனதில் எழும் முதல் கேள்வி, இந்தப் பணத்தை கொண்டு என்ன செய்வது???

ஒரு வேளை உங்களுக்கு ஏற்கனவே கடன் இருந்தால் அந்தக் கடனை நீங்கள் திரும்பச் செலுத்தலாம், எங்காவது பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்யலாம், அல்லது விடுமுறையை கழிக்க ஒரு உல்லாசப் பயணம் சென்று வரலாம். இவற்றில் நீங்கள் எதைச் தேர்ந்தெடுத்தாலும், சில முக்கிய கேள்விகளுக்கான விடையை முதலில் தேடுங்கள். ஏனெனில் எதிர்பாராத பணம் என்பது உங்களுடைய மன நிலையை மாற்றிவிடும். ஆகவே நீங்கள் உங்களுடைய நிதி இலக்குகளை மீண்டும் ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள்.

இப்படிபட்ட எதிர்பாராத வருமானம், மனக் கிளர்ச்சியை உண்டாக்கி புதிய மற்றும் தேவையற்ற பொருட்களை வாங்குதல் போன்ற வேகமான முடிவுகளை எடுக்கத் தூண்டும். ஆகவே சிறிது காலம் உங்களுடைய முடிவுகளை ஆறப்போடுவது மிகவும் நல்லது. உங்களுடைய மனநிலை நிதானமடைந்த உடன் பிற முக்கிய முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம். எனவே உங்களுடைய திடீர் வருமானத்தின் ஒரு பகுதியை குறுகிய கால முதலீடுகளில் போட்டு வையுங்கள். இது உங்களுடைய முடிவுகளை நீண்ட கால நோக்கில் நீங்கள் எடுக்கும் வரை உங்களுடைய பணத்தை பாதுகாக்கும். நீங்கள் நிதானமான மனநிலைக்கு வந்த பின்னர் நீண்ட கால கண்ணோட்டத்தில் மட்டுமே முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். குறுகிய கால மற்றும் நிகழ்கால நன்மைகளை புறந் தள்ளுங்கள். நீங்கள் புத்திசாலித்தனமாக உங்களுடைய கூடுதல் வளங்களை பயன்படுத்துவதற்காக உங்களுடைய நீண்ட கால மற்றும் குறுகிய கால தேவைகளை மதிப்பிடுங்கள்.

நண்பர்கள் அல்லது சக ஊழியர்களிடமிருந்து எதிர்பாராத செல்வத்தை கையாளுதல் சம்பந்தமாக குறிப்புகள் கேட்பதை தவிர்க்கவும். ஏனெனில் ஆபத்தை எதிர் கொள்ளும் திறன் மற்றும் நிதித்தேவைகள் என்பது வேறுபாடுகள் நிறைந்தவை. உங்களுக்கு இது சம்பந்தமாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் தொழில் முறை நிதி ஆலோசகர்கள் அல்லது சட்ட நிபுணர்களிடம் மட்டுமே ஆலோசனை கேட்கவும். அவர்களுடைய ஆலோசனைகள் உங்களுக்கு வழிகாட்டும்.

ஒரு எதிர்பாராத வருவாய் உங்களுடைய நிதி இலக்குகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை நாம் இங்கே காணலாம்.

காப்பீடு மீதான தாக்கம்

காப்பீடு மீதான தாக்கம்

கூடுதலான செல்வம் என்பது நிச்சயமாக உங்களுக்கான ஆயுள் காப்பீடு தொகையை அதிகரிக்கும். உங்களுடைய ஆயுள் காப்பீடு தொகையை கண்டிப்பாக மறு பரிசீலனை செய்து போதுமான அளவிற்கு காப்பீடு இருக்குமாறு மாற்றி அமைக்க வேண்டும். அதே நேரத்தில், நீங்கள் வாங்கிய வீடு மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்கள் போன்ற சொத்துக்களை கணக்கில் கொண்டு காப்பீடு தேவையை மாற்றி அமைக்க வேண்டும்.

கடன் மீதான தாக்கம்

கடன் மீதான தாக்கம்

பணத்தை குறைந்த வருவாய் தரும் திட்டங்களில் முதலீடு செய்து விட்டு, கடன்களுக்கு அதிகமாக வட்டி செலுத்தக் கூடாது. எவ்வுளவு விரைவாக கடன்களை திரும்பச் செலுத்துகின்றீர்களோ, அவ்வுளவு சீக்கிரமாக உங்களுடைய பணம் உங்களுக்கு வருவாயைத் தேடித்தரும்.

முதலீடு மீதான தாக்கம்
 

முதலீடு மீதான தாக்கம்

உங்களுடைய திடீர் வருமானம் தந்த அசட்டு தைரியத்தில், உங்களூக்கு அறிமுகம் இல்லாத புதிய திட்டங்கள் அல்லது போர்ட்போலியோவில் முதலீடு செய்ய எண்ணம் தூண்டும். அவ்வாறு உங்களுடைய பணத்துடன் விளையாடுவது, நீங்கள் எளிதாக சம்பாதித்த பணத்தை இழக்க காரணமாகி விடும். ஆகவே நீங்கள் உங்களுடைய முதலீட்டு அனுகுமுறையில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. உங்களுடைய அவசர கால நிதியை உங்களுடைய 6-9 மாதத் தேவைகளை சமாளிக்க தகுந்ததாக மாற்றி அமைக்க வேண்டும். மீதி நிதியை உங்களுடைய நிதித் இலக்குகளை அடையும் விதமாக பகிர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.

எஸ்டேட் மீதான தாக்கம்

எஸ்டேட் மீதான தாக்கம்

இப்போது உங்களுடைய சொத்தின் அளவு அதிகரித்துள்ளதால், உங்களுடைய எஸ்டேட் திட்டத்தை மறுஆய்வு செய்ய சரியான நேரம் இதுதான். திடீர் இழப்பு ஏற்பட்டால் உங்களுடைய சொத்துக்களை, வாரிசுகள் அமைதியான முறையில் பிரித்துக் கொள்ள உதவும் உயிலை தயாரித்து வைக்கலாம். மேலும் அவ்வாறு உயில் எழுதும் பொழுது உங்களுடைய வாரிசுகளுக்கு உங்களுடைய எஸ்டேட்டை சொந்தமாக நிர்வகிக்கும் திறன் இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ே

வரிகளின் மீதான தாக்கம்

வரிகளின் மீதான தாக்கம்

உங்களுடைய வருவாயை, வருமான வரியை சேமிக்கும் திட்டங்களில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் உங்களுடைய பெற்றோர் அல்லது 18 வயது நிரம்பிய குழந்தையின் பெயரில் முதலீடு செய்யும் சாத்தியத்தை ஆராயுங்கள். ஏனெனில் இத்தகைய முதலீடுகளுக்கு வரி சேமிப்பு உண்டு.

மறு பரிசீலனை செய்ய வேண்டிய முக்கியமான நோக்கங்கள்

மறு பரிசீலனை செய்ய வேண்டிய முக்கியமான நோக்கங்கள்

1. உங்களுடைய அவசர கால நிதியை அதிகப்படுத்துதல்
2. நிலுவையில் உள்ள கடன்களை திரும்பச் செழுத்துதல்
3. உங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு தேவைப்படும் நிதியை அதிகரிப்பது
4. ஓய்வு காலத்திற்கு தேவைப்படும் ஒய்வு நிதியை உருவாக்குதல்
5. வீட்டு வாங்குவதில் முதலீடு செய்தல்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to save and manage windfall money in India?

Windfall income (or windfall profit) is an unexpected gain in income which could be due to winning a lottery, unforeseen inheritance or gain from the sale of property.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X