இக்காலத்து டிசைன் கொள்ளை!!!: விஷிங்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"விஷிங்" என்பது ஏமாற்றுப் பேர்வழிகள் அப்பாவி மக்களை ஏமாற்றி ஃபோன் மூலம், முக்கியமான பர்சனல் மற்றும் ஃபைனான்சியல் தகவல்களைக் கட்டாயப்படுத்திக் கறக்கும் ஒரு மோசடி வேலையாகும். விஷிங் மூலம் சேகரிக்கப்பட்ட முக்கிய தகவல்களைக் கொண்டு ஆடையாளத் திருட்டு மற்றும் ஃபைனான்சியல் மோசடிகள் போன்றவை நிகழ்த்தப்படுகின்றன. ஃபிஷிங் தாக்குதல்களுடன் ஒப்பிடுகையில் விஷிங் உத்திகள் மிகவும் புதிதானவையாகவும், நவீனமானவையாகவும் காணப்படுகின்றன.

விஷிங் தாக்குதல்களிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி?

விஷிங் தாக்குதல்களிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள நீங்கள் மேற்கொள்ள வேண்டிய சில செயல்கள் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன.

ஃபோன் அழைப்பை துண்டியுங்கள்
 

ஃபோன் அழைப்பை துண்டியுங்கள்

வங்கி பாஸ்வேர்டு, சிவிவி எண்கள் போன்ற முக்கியத் தகவல்களைக் கோரும் அழைப்புகளை தயவு தாட்சண்யமின்றி துண்டிப்பதே, விஷிங் தாக்குதல்களிலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு மிகவும் எளிதான வழியாகும்.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

மோசடிகளில் புகுத்தப்படும் புதிய வழிகளைப் பற்றிய விழிப்புணர்வோடு இருந்து அவற்றைப் பற்றி நன்கு அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய முறைகளைப் பற்றி உங்கள் வங்கி பராமரித்து வரக்கூடிய டேட்டாபேஸிலிருந்து புதிய மோசடி முறைகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டுங்கள்.

தானியங்கி அழைப்புகள் மற்றும் காலர் ஐடி

தானியங்கி அழைப்புகள் மற்றும் காலர் ஐடி

தானியங்கி அழைப்புகள் மற்றும் காலர் ஐடிக்கள் மேல் எப்போதும் ஒரு சந்தேகக் கண்ணை வைக்கவும்; ஏனெனில் இதை வைத்து மோசடி செய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகம். உங்களிடம் யாரேனும் பர்சனல் மற்றும் ஃபைனான்சியல் தகவல்கள் போன்ற அதிமுக்கியமான தகவல்களைக் கோரினால், எந்த சந்தர்ப்பத்திலும் ஃபோனில் அவற்றை பகிர்ந்து கொள்ளாமல், அந்நபரை நேரில் சந்தித்து அத்தகவல்களை அளிக்கவும். சம்பந்தமின்றி வரும் அழைப்புகளைப் புறக்கணியுங்கள்.

புகார்
 

புகார்

ஏதேனும் ஒரு ஃபோன் அழைப்பைப் பற்றி உங்களுக்கு சிறிது சந்தேகம் தட்டினாலும், அவ்வழைப்பில் நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களோடு ஃபோன் செய்தவரின் நம்பர் மற்றும் அவரது ஏரியா கோட் ஆகியவற்றைக் குறித்து வைத்து, இதனை வங்கியின் பார்வைக்குக் கொண்டு செல்லத் தவறாதீர்கள்.

இமெயில்

இமெயில்

ஏதோவொரு இமெயிலில் குறிப்பிடப்பட்டுள்ள கஸ்டமர் நம்பர்களை எக்காரணம் கொண்டும் தொடர்பு கொள்ளாதீர்கள். வங்கியின் அதிகாரப்பூர்வமான வெப்சைட்டிலிருந்து கஸ்டமர் கேர் நம்பரை எடுத்து உபயோகிப்பதே சிறந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to protect yourself from vishing?

"Vishing" is a fraudulent activity where fraudster coerces unsuspecting persons to divulge personal and financial information over the phone.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?