கார் விற்பனையில் புரட்சி!!: மெர்சிடிஸ் பென்ஸ்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2013 ஆண்டின் முதல் பாதியில், மெர்சிடிஸ் பென்ஸ் சுமார் 6,94,433 வாகனங்களை (+6.4 சதவீதம்) விற்பனை செய்துள்ளதன் மூலம் சாதனையைப் புரிந்துள்ளது. 1,31,609 அலகுகளை விற்பனை செய்துள்ளதன் மூலம் இந்த நிறுவனத்தின் ஜூன் மாதத்திற்கான விற்பனையில் ஒரு சாதனை வளர்ச்சியை (+8.3 சதவீதம்) எட்டியுள்ளது. இந்த ஜூன் மாத சாதனை விற்பனை என்பது சீனாவில் இந்த நிறுவனத்தின் விற்பனையில் ஏற்பட்டுள்ள வலுவான வளர்ச்சி (+16.0 சதவீதம்) விகிதத்தால் சாத்தியப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியானது ஐரோப்பிய சந்தைகள் மற்றும் அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்டுள்ள நிலையான வெற்றிகளால் இயக்கப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் BRIC நாடுகளிலும் ஒரு வலுவான முதல் பாதி விற்பனையை பதிவு செய்துள்ளது. ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தற்பொழுது மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் தன்னுடைய சந்தையை விரிவுபடுத்தியுள்ளது.

ஐரோப்பிய சந்தை

ஐரோப்பிய சந்தை

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஆண்டின் முதல் பாதியில் 3,27,988 வாகனங்களை (+4.2 சதவீதம்) நிலையில்லாத ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்துள்ளது. இந்த பிராண்ட் ஜூன் மாதத்தில் பல சந்தைகளை கைப்பற்றியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்த நிறுவனம் குறிப்பாக இங்கிலாந்து, பெல்ஜியம், ரஷ்யா, மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் ஒரு வலுவான விற்பனை வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.

124,324 வாகனங்களை விற்றது

124,324 வாகனங்களை விற்றது

ஜெர்மனியில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சுமார் 124,324 (-3.3 சதவீதம்) வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது ஒட்டு மொத்த சந்தை வீழ்ச்சியை (-8.1 சதவீதம்) கணக்கில் கொள்ளும் பொழுது இது ஒரு சிறந்த செயல்பாடாகும். கடந்த ஜூன் மாதத்தில் ஒட்டு மொத்த சந்தைமதிப்பில் கிட்டத்தட்ட 10 சதவீத பங்கை பிடித்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஜெர்மனியில் தான் ஒரு பிரிமீயம் பிராண்ட் வாகன ஜாம்பவான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

+10.4 சதவீத விற்பனை
 

+10.4 சதவீத விற்பனை

கடந்த ஆறு மாதங்களாக அமெரிக்காவில் இந்த நிறுவனத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 141.950 அலகுகள் (+10.4 சதவீதம்) விற்பனை செய்யபட்டுள்ளது. இந்த விற்பனை அளவு என்பது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன வரலாற்ற்றில் முன் எப்பொழுதும் இல்லாத உட்ச பட்ச விற்பனையாகும். மேலும் இந்த பிராண்ட் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் வலுவான விற்பனை வளர்ச்சியை கண்டுள்ளது. குறிப்பாக பிரேசில் மற்றும் அர்ஜென்டீனாவில் இதன் விற்பனை வளர்ந்து வருகிறது.

இந்தியாவில் (+16.4 சதவீதம்) விற்பனை

இந்தியாவில் (+16.4 சதவீதம்) விற்பனை

ஆசியா / பசிபிக் பிராந்தியத்தில், இந்தியா (+16.4 சதவீதம்) மற்றும் ஜப்பானின் (சதவீதம் +26.5) விற்பனை வளர்ச்சியால் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் பாதியில் நிலையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

சீனா

சீனா

இந்த பிராண்ட்டின் சீனா (ஹாங்காங்கையும் சேர்த்து) விற்பனை கூட மிகவும் வலுவாக வளர்ந்து வருகிறது. அங்கு மெர்சிடிஸ் பென்ஸின் ஜூன் மாத விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது. அங்கு இந்த நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 19,549 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சுமார் 98,914 கார்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.

டைம்லர் ஏஜி (Daimler AG)

டைம்லர் ஏஜி (Daimler AG)

ஒரு சில வாரங்களுக்கு முன்பு, டைம்லர் ஏஜி சீன சந்தையின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சீனாவில் ஒரு தனியுரிம செயல்பாட்டு அலகை நிறுவி அந்த நிறுவனத்தின் மத்திய விற்பனையை வலுப்படுத்தி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mercedes-Benz posts record sale of vehicles

In the first half of 2013, Mercedes-Benz posted yet another record with sales of 694,433 vehicles (+6.4 per cent). With 131,609 units sold, sales in June also reached record level (+8.3 per cent), not least through strong growth in China (+16.0 per cent).
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X