வீட்டுக் கடன் மற்றும் அதன் பயன்கள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வங்கிகளுக்கு வரும் வருவாயின் முக்கிய மூலதனமாக இருப்பது வட்டி பணமே. கடன் கொடுத்த பணம் திருப்பி வருமாயின், எந்த அளவுக்கு பணத்தை கடனாக கொடுக்கிறதோ அந்த அளவுக்கு அதிக வட்டி கிடைக்கும். தன் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, வாங்கிய பணத்தை ஒழுங்காக கட்டிய வாடிக்கையாளர்களை வங்கிகள் தீவிரமாக தேடி அவர்களுக்கு கடன் அளிக்க முன் வருகிறார்கள்.

இது அவர்களுடைய பணம் திரும்பி வருவதற்கான இடர்பாடு குறைவாகவே இருக்கும் எண்ணம் தான். இதன் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களுக்கு முன் கூட்டியே ஒப்புதளிக்கப்பட்ட வீட்டுக் கடனை (pre- approve home loans) அளிக்கின்றனர். இப்படி முன்கூட்டியே ஒப்புதளிக்கப்பட்ட வீட்டுக்கடனை பெறுவதால் பல நன்மைகள் அடங்கியுள்ளன:

செயல்படுத்தும் காலம்
 

செயல்படுத்தும் காலம்

வங்கி கடனை செயல்படுத்துவதில் உரிய முயற்சிகளை எடுக்க உதவும். அதனால் செயல்படுத்தும் காலம் மிகவும் விரைவாக நடைபெறும்.

இடையூறுகள்

இடையூறுகள்

நீங்கள் வங்கிக்கு பழைய வாடிக்கையாளர் என்பதாலும் வீட்டுக்கடன் முன்கூட்டியே ஒப்புதளிக்கப்பட்டது என்பதாலும் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் குறைந்த அளவே ஆவணமாக்கம் (documentation) இருக்ககூடும்.

நன்றாக பேரம் பேசலாம்:

நன்றாக பேரம் பேசலாம்:

வீடு விற்பவரை நீங்கள் முன் கூட்டியே ஒப்புதளிக்கப்பட்ட வீட்டுக்கடன் பணத்துடன் சந்தித்தால், முழு பணத்துடன் வணிகம் செய்வதால் உங்களுக்கு குறைந்த விலையில் வீட்டை விற்க வாய்ப்பு உண்டு. இப்படி பட்ட தருணத்தில் விலையை அடித்து பேசி குறைக்க முயற்சிக்கலாம்.

வீட்டை தேர்ந்தெடுத்தல்

வீட்டை தேர்ந்தெடுத்தல்

வீட்டுக்கடன் ஒப்புதலில் சிக்கல்கள் ஏதும் இல்லாததால், நீங்கள் உங்களுக்கு ஏற்ற வீட்டை தேர்ந்தெடுப்பதில் முக்கியத்துவத்தை செலுத்தலாம். கடன் ஒப்புதலில் செலவழிக்கும் நேரத்தை இப்போது வீட்டை தேர்ந்தெடுப்பதில் செலவழிக்கலாம்.

பயன் குறைவுகள்
 

பயன் குறைவுகள்

கடன் பணம் முன் கூட்டியே வங்கியால் தீர்மானிக்கப்படுவதால், உங்கள் தேவையை ஈடு செய்ய முடியாமல் போகலாம்.

செலவு செய்யும் மனோபாவம்

செலவு செய்யும் மனோபாவம்

முன் கூட்டியே ஒப்புதளிக்கப்பட்ட வீட்டுக்கடனை பெற்றுவிட்டால் அதனை உடனே செலவு செய்யும் மனோபாவம் வந்து விடும். அதனால் அவசர அவசரமாக வீடு வாங்குவதில் குறியாக இருப்போம். இதனால் தகுதிக்கு மீறிய வீட்டையோ அல்லது தரம் குறைந்த வீட்டையோ வாங்க வாய்ப்புள்ளது.

வட்டிக் குறைவான கடன்

வட்டிக் குறைவான கடன்

முன் கூட்டியே ஒப்புதளிக்கப்பட்ட வீட்டுக்கடனை பெறுவதால், சிக்கனமாக கிடைக்கும் கடனை தேடுவதில் நாம் நேரத்தை செலவழிப்பதில்லை. சில வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pre approved home loan: What are the benefits?

Banks' main source of earning is the interest they earn from money lent. The more they lend the more the interest earning, subject to no defaults. To enhance their earning, banks are in constant lookout for customers with good credit history whom they can lend with minimum default risk. In this process, they pre- approve home loans for potential borrowers based on their creditworthiness.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X