ஸ்டேட் வங்கியின் எக்ஸ்ப்ரஸ் மனி கார்ட்: அறிமுகம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வங்கித் துறையைச் சாராத நிறுவனமான யுஎஇ எக்ஸ்சேஞ்ச் அன்ட் ஃபைனான்சியல் சர்வீசஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து எஸ்பிஐ பேங்க் எக்ஸ்ப்ரஸ் மனி கார்ட் என்ற ஒரு கார்டை புதிதாக அறிமுகம் செய்ய இருக்கிறது.

 

இந்த மணி கார்டு, ஒரு விசா கார்டைப் போல செயல்படும். இந்த கார்டு மூலம் இந்தியாவில் மிக எளிதாகவும், விரைவாகவும் பணம் அனுப்ப முடியும்.

ஸ்டேட் வங்கி கிளைகளில் வாடிக்கையாளர்கள் தங்களின் கேஒய்சி சான்றிதழ்களை சமர்ப்பித்தவுடன், அவர்களுக்கு 16 இலக்க ஐடன்டிஃபிக்கேசன் எண் மற்றும் தனிநபர் ஐடன்டிஃபிகேசன் எண் உட்பட வேறு சில கார்டுகளையும் வழங்கப்படும். தற்போது இந்த கார்டுகள் கேரளாவில் இலவசமாக வழங்கப்படுகின்றன. இனிமேல் இந்த கார்டுகள் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிகிறது.

மணி கார்டின் வசதிகள்

மணி கார்டின் வசதிகள்

உலகில் உள்ள எந்த ஒரு யுஎஇ எக்சேஞ்ச் அவுட்லெட் மூலமும், இந்த கார்டைப் பயன்படுத்தி, மணி ட்ரான்ஸ்ஃபர் சர்வீஸ் ஸ்கீம் தீட்டத்தின் கீழ், பணத்தை அனுப்ப முடியும்.

இந்த கார்டில் ஒரு நிதியாண்டில் 30 முறை பணம் நிரப்பித் தரப்படும். ஒவ்வொரு முறையும் ரூ.50,000 வரை பணம் நிரப்பித் தரப்படும். எனவே இந்தக் கார்டை வைத்திருப்பவர், இந்தப் பணத்தை அனுப்ப வேண்டும் என்றால், அவருடைய வங்கி சேமிப்புக் கணக்கில் போதுமான பணத்தை வைத்திருக்க வேண்டும். மேலும் பணத்தை அனுப்பியவுடன் அனுப்பப்பட்டவருக்கு மொபைல் பேங்கிங் மூலம் அறிவிக்கப்படும்.

 

 

மணி கார்டின் செயல்பாடு

மணி கார்டின் செயல்பாடு

ஸ்டேட் பேங்க் எக்ஸ்ப்ரஸ் மணி கார்டு இந்தியாவில் உள்ள இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும். எனினும் இந்த கார்டை இந்தியாவில் வாழுகின்ற இந்தியர் ஒருவரின் உறவினரான வெளிநாட்டு வாழ் இந்தியரும் பயன்படுத்தலாம். ஆனால் இந்தியாவில் வாழ்பவர் வெளிநாட்டில் வாழும் தனது உறவினருக்கு மணி கார்டின் ஐடன்டிஃபிகேசன் எண்ணை மட்டுமே கொடுக்க வேண்டும். அதன் மூலம் அவர் யுஎஇ எக்ஸ்சேஞ்ச் அவுட்லெட்டில் இருந்து பணத்தை அனுப்ப முடியும்.

மணி கார்டின் பயன்கள்
 

மணி கார்டின் பயன்கள்

முதன் முதலாக இந்த கார்டு, இந்தியாவில் உள்ள ஏடிஎம்கள் மூலம் பணத்தை எடுக்க உதவுகிறது. இந்த கார்டு மூலம் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் வங்கி நடவடிக்கைகளை பாயிண்ட் ஆஃப் சேல்ஸ் (பிஒஎஸ்) அல்லது இ-காமர்ஸ் தளங்கள் மூலமோ மேற்கொள்ள உதவுகிறது. மேலும் இந்த கார்டை பயன்படுத்துவதற்கு எந்தவித இதரக் கட்டணங்களும் இல்லை.

அபராதத் தொகை

அபராதத் தொகை

இந்த கார்டை தொலைத்துவிட்டால், புதிய கார்டை பெறுவதற்கு அதன் கூரியர் மற்றும் பின் ஆகியவற்றிற்காக ரூ.100 செலுத்த வேண்டும். மேலும் 6 மாதங்களாக இந்த கார்டு பயன்படுத்தபடாமல் இருந்தாலோ, அல்லது அந்த கார்டில் நிரப்பப்பட்ட தொகை ரூ.100க்குக் குறைவாக இருந்தாலோ அந்த பணத்தை எடுத்துக் கொள்வதற்கு வங்கிக்கு அதிகாரம் உண்டு. அந்த தொகை அபராதத் தொகையாகக் கருதப்படும்.

மேலும் கார்டை வைத்திருப்பவர், தான் கார்டு மூலம் செய்த பண பரிவர்த்தனைகளுக்கான வங்கி அறிக்கையைக் கோரினால் அதற்கு கட்டணமாக அவர் ரூ.100 செலுத்த வேண்டும்.

 

 

எக்ஸ்ப்ரஸ் மணி கார்டு ஏன் வேண்டும்?

எக்ஸ்ப்ரஸ் மணி கார்டு ஏன் வேண்டும்?

ஸ்டேட் வங்கியின் கார்ப்பரேட் ஸ்ட்ரேட்டஜியின் இணைய இயக்குனர் ஆர் கே சரஃப், அளித்த பேட்டியில், ஸ்டேட் பேங்க் எக்ஸ்ப்ரஸ் கார்டு, அரசின் ஃபைனான்சியல் இன்க்லூசன் ப்ரோக்ராமிற்கு கண்டிப்பாக உதவி செய்யும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த புதிய கார்டு மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தையும் அதிகரிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்த பிறகு, கடந்த சில வாரங்களாக பணத்தை அனுப்பும் நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

State Bank Xpress Money Card- A new inward remittance card

India's largest public sector bank State Bank of India in collaboration with UAE Exchange and Financial Services, a non-banking finance company, introduced SBI Bank Xpress Money Card.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X