நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் என்றால் என்ன ?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சாதாரண பங்குகளை (Equity Shares) வாங்க விற்க வழிவகை செய்யும் தேசியப் பங்குச்சந்தை போன்று பல்வேறு பொருட்களை வர்த்தகம் செய்ய அமைக்கப்பட்ட ஏற்பாடு தான் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE). பைனான்சியல் டெக்னாலஜிஸ் நிறுவனம் மற்றும் இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பின் (NAFED) கூட்டு முயற்சியான நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (NSEL) மின்னணு பண்டப்பரிமாற்று வர்த்தகத்தை இயக்கும் தளமாக அமைக்கப்பட்டது. பல் பொருள் பரிவர்த்தனை (MCX) மற்றும் தேசிய பொருட்கள் மற்றும் பங்குகள் பரிவர்த்தனை (NCDEX) சந்தைகளைப் போன்று இங்கும் பண்டங்களை வர்த்தகம் செய்ய முடியும்.

தற்போது செயல்பாட்டில் இருக்கும் பண்டப்பரிமாற்று சந்தைகளின் செயல்திறனை மேம்படுத்த அமைக்கப்பட்ட தளமான நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (NSEL) இடைத்தரவுச் செலவுகளை குறைத்து, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபத்து மற்றும் தொந்தரவு இல்லாத பல்வேறு பொருள் வர்த்தக (commodity exchange ) செயல்பாடுகளை வழங்குகிறது.

எப்போது நேரடி வர்த்தகம் தொடங்கியது?

எப்போது நேரடி வர்த்தகம் தொடங்கியது?

முதன்முறையாக அக்டோபர் 15 2008 ஆம் ஆண்டில் இருந்து மின்னணு நொடிவிலை மாற்றகம் (Spot exchange) நேரடி வர்த்தகத்தைத் தொடங்கியது.

முதலில், அகமதாபாதில் விநியோகம் செய்ய இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளி மற்றும் தங்க கட்டி வர்த்தகமும் பின்னர் மும்பையில் விநியோகம் செய்ய பருத்தி வர்த்தகமும் மின்னணு முறையில் தொடங்கியது. தற்போது, இந்த நிறுவனம் 52 பொருட்களின் வர்த்தகத்திற்கு வழிவகை செய்யும் அமைப்பாக உயர்ந்துள்ளது. மேலும் பதினாறு இந்திய மாநிலங்களில் செயல்படுகிறது.

 

 

NSEL செயல்பாட்டை யார் கட்டுப்படுத்துவது?

NSEL செயல்பாட்டை யார் கட்டுப்படுத்துவது?

பண்டக சந்தையை (commodity Market) வழிநடத்துவதற்கு "பண்டங்கள் சந்தை ஆணையம்' செயல்படுகிறது. மேலும் தேவைப்படும் நேரங்களில் அமைச்சக நிர்வாகத்திற்கு பல்வேறு அறிக்கைகளை சமர்ப்பிக்கிறது.

NSEL எவ்வாறு செயல்படுகிறது?

NSEL எவ்வாறு செயல்படுகிறது?

நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் கொள்முதல், சேமிப்பு, கிடங்கு ரசீது நிதி (warehouse receipt financing) மற்றும் பொருட்கள் விற்பனை போன்ற பலவேறு தீர்வுகளுக்கு பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட செயலிகளை ஏற்றுமதியாளர்கள்,விவசாயிகள், இறக்குமதியாளர்கள் மற்றும் பங்கு வியாபாரிகளுக்கு வழங்குகிறது.

எவ்வகைப்  பொருட்கள் தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்சில் வர்த்தகம் செய்யப்படுகின்றன?

எவ்வகைப் பொருட்கள் தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்சில் வர்த்தகம் செய்யப்படுகின்றன?

கெட்டுப்போகாத பொருட்கள் அனைத்தையும் நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்சில் பரிவர்த்தனை செய்ய முடியும். புதிய முயற்சியாக சிறிய அளவில் மின் பொருட்களையும் வர்த்தகம் செய்ய வழிவகை உண்டு. இந்த முறையில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், தாமிரம், ஈயம், நிக்கல் மற்றும் துத்தநாகம் போன்ற பொருட்களை மின்னணு முறையில் வாங்கவும் விற்கவும் முடியும்

நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (NSEL) ஏன் தற்போது செய்திகளில் அடிபடுகிறது?

நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (NSEL) ஏன் தற்போது செய்திகளில் அடிபடுகிறது?

நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் (Ministry of Consumer Affairs) வெளியிட்ட உத்தரவின் படி நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் ஒரு நாள் முன் ஒப்பந்தங்களின் (one-day forward contracts) மீதான வர்த்தகத்தை இடைநிறுத்தம் செய்துள்ளது. பங்கு மாற்றகங்கள் (bourses) அரசாங்க விதிமுறைகளுக்கு இணங்கி செயல்படவில்லை என்று அரசிற்கு தெரியவந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் இந்த அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து, NSEL, FTIL மற்றும் MCEIL நிறுவனங்களுக்கு எந்தவித எதிர்மறை தாக்கமும் ஏற்படாது என தெரிவித்துள்ளன. ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, FITL தலைவர் ஜிக்னேஷ் ஷா, " தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் இந்த பிரச்சனையை சட்ட விதிகளுக்கு உட்பட்டு சரி செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது," என்று கூறினார்.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is National Spot Exchange (NSEL)?

The NSEL came into existence to overhaul the functioning of the commodities market in India. The platform works towards eliminating bottlenecks in the system by lowering down the cost of intermediation and thereby increasing marketing efficiency.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X