குவாண்டிடேட்டிவ் ஈஸிங் (க்யூஇ3 ) என்றால் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ‘க்யூஇ3' என்பது, 2008 ஆம் வருட மத்தியில் ஏற்பட்ட சப்-பிரைம் நெருக்கடி நிலையால் பெரும் பாதிப்புக்கு உள்ளான அமெரிக்கப் பொருளாதாரத்தை, உயிர்ப்பிக்கச் செய்யும் நோக்கில், கடந்த ஆண்டு யு.எஸ் ஃபெடரல் ரிசர்வ் அறிவிக்கப்பட்ட திட்டம் தான் இந்த குவாண்டிடேட்டிவ் ஈஸிங். தற்போது முன்றாம் சுற்று குவாண்டிடேட்டிவ் ஈஸிங் நடைபெற உள்ளது. க்யூஇ3க்கு முன்னால், யு.எஸ் பொருளாதாரத்தின் மத்திய வங்கி 2010ஆம் ஆண்டில் குவாண்டிடேட்டிவ் ஈஸிங்கை அறிவித்துள்ளது. குவாண்டிடேட்டிவ் ஈஸிங் என்றால் என்ன என்பதே தற்போது நம் முன் நிற்கும் கேள்வி.

குவாண்டிடேட்டிவ் ஈஸிங்

குவாண்டிடேட்டிவ் ஈஸிங்

குவாண்டிடேட்டிவ் ஈஸிங் என்பது பாரம்பரியமான மானிட்டரி பாலிஸி தோல்வியடையும் தறுவாயில் பொருளாதாரத்தை முடுக்கி விட அல்லது உயிர்ப்பிக்க மத்திய வங்கிகளால் செயல்படுத்தப்படும் வழக்கத்துக்கு மாறானதொரு திட்டமாகும் ஆகும். க்யூஇ திட்டத்தின் கீழ், ஒரு நாட்டின் மத்திய வங்கி அதன் அமைப்பினுள் லிக்விடிட்டியை புகுத்தும் நோக்கில், குறிப்பிட்ட அளவிலான நிதி சொத்துக்களை வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களிலிருந்து மத்திய வங்கி வாங்கும்.

பொருளாதார ஊக்குவிக்கம் முயற்சி

பொருளாதார ஊக்குவிக்கம் முயற்சி

இந்த மற்றுச் செயல்பாடு, ஒரு நாட்டின் மத்திய வங்கி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு, குறைந்த-கால கடனீட்டுப் பத்திரங்களை வாங்கும், இதனால் வட்டி விகிதங்கள் உரிய நிலையில் நிலைபெறும். க்யூஇ வங்கிகளின் சொத்துக்கள் அதிகரிப்பதோடு, வாங்கப்பட்ட சொத்துக்கள் விலைகளை உயர்த்தி, அவற்றின் ஈட்டத்தையும் குறைக்கும்.

பணவீக்கத்தை உண்டாக்கும் க்யூஇ

பணவீக்கத்தை உண்டாக்கும் க்யூஇ

மேலும் க்யூஇ, பணவீக்கத்தை உண்டாக்கி, ஒரு நாட்டின் கரன்ஸியை அபரிமிதமாக கிடைக்கக்கூடியதாக்கி அதன் மதிப்பை குறைக்கவல்லதாக அறியப்படுகிறது. இதன் விளைவாக, க்யூஇ திட்டம் நாணயத்திற்கு எதிர்மறையாக விளங்கும் அதே சமயத்தில், தங்கம் போன்ற சொத்துக்களுக்கு சாதகமானதாகத் திகழ்கிறது.

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்

எனவே, கடனீட்டுப் பத்திரங்கள் வாங்கும் திட்டத்தின் மூலம் பொருளாதார அமைப்பில் கூடுதல் பணம் சேர்க்கப்படுவதற்கு, முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் கடும் பணவீக்கத்தைச் சந்தித்த ஜெர்மனியின் பண்டெஸ்பாங்க் (Bundesbank) உள்ளிட்ட குறிப்பிட்ட சில மத்திய வங்கிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

யு.எஸ் ஃபெடரல் ரிசர்வின் க்யூய்3

யு.எஸ் ஃபெடரல் ரிசர்வின் க்யூய்3

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் அமைப்பு, அடமான அடிப்படையிலான கடன் மற்றும் கருவூல சாதனங்களை வாங்கியதன் மூலம் க்யூ3யை செயல்படுத்தியுள்ளது.

ஏன் க்யூஇ3 தற்சமயம் அதிக அளவில் பேசப்படுகிறது?

ஏன் க்யூஇ3 தற்சமயம் அதிக அளவில் பேசப்படுகிறது?

தற்சமயம் க்யூஇ3 அதிக அளவில் பேசப்படுவதற்கான காரணம் யாதெனில், யு.எஸ் ஃபெடரல் ரிசர்வ் அமைப்பு அதன் மூன்றாவது க்யூஇ செயல்திட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளலாமா என்ற யோசனையில் உள்ளது. இத்திட்டம் வாபஸ் பெறப்பட்டால், அது உலகளாவிய நிதி அமைப்பில் லிக்விடிட்டியை குறைத்துவிடும், வளர்ந்து வரும் சந்தைகளின் கரன்ஸி மற்றும் பங்குச் சந்தைகள் மீது ஆதிக்கம் செலுத்தி, உலகச் சந்தைகளை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is QE3 or Quantitative Easing 3?

'QE3' is the third-round of quantitative easing that was announced by the US Federal Reserve last year in order to stimulate or revive the US economy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X