ஸெல்ப்-அசெஸ்மென்ட் வரி என்றால் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸெல்ப்-அசெஸ்மென்ட் வரி என்றால் என்ன?
சென்னை: ஸெல்ப்-அசெஸ்மென்ட் வரி என்பது, வரிவிதிப்புக்குரியவர் அட்வான்ஸ் வரி மற்றும் டிடிஎஸ் ஆகியவற்றோடு கூடுதலாக செலுத்த வேண்டிய வரித்தொகை ஆகும். வழக்கமாக, வரிவிதிப்புக்குரியவர்கள் வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்யும்போது, தம் வருமானத்தைப் பொறுத்து தான் செலுத்த வேண்டிய வரியை கணக்கிடுவர். எனினும், சில நேரங்களில் கணக்கீட்டில் நிகழக்கூடிய சில பிழைகளால், வரிவிதிப்புக்குரியவர் டிடிஎஸ் அல்லது அட்வான்ஸ் வரியாக செலுத்திய தொகை, அவருக்கு விதிக்கப்பட்ட மொத்த வரித் தொகையைக் காட்டிலும் குறைவாக இருக்க நேரிடலாம். ஒருவர் தன் டாக்ஸ் லையபிலிட்டியிலிருந்து விடுபடும் பொருட்டு, வருமான வரி அதிகாரிகளிடத்தில் அவர் செலுத்த வேண்டிய பாலன்ஸ் வரியே ஸெல்ப்-அசெஸ்மென்ட் வரி என்று குறிப்பிடப்படுகிறது.

ஸெல்ப்-அசெஸ்மென்ட் வரி செலுத்துவதற்கு உரிய நாள்:

ஒரு நிதியாண்டிற்கான வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்வதற்கு முன், ஸெல்ப்-அசெஸ்மென்ட் வரியை செலுத்த வேண்டியது அவசியம். ஸெல்ப்-அசெஸ்மென்ட் வரியை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் செலுத்தலாம். இவ்விரு மோட்களிலும் ஐடிஎன்எஸ்-280 சலான் நிரப்பப்பட வேண்டும்.

தவறான ஸெல்ப்-அசெஸ்மென்ட்டினால் ஏற்படக்கூடிய விளைவுகள்:

வருமானம் மற்றும் அதற்குரிய வரியைப் பற்றிய தவறான அல்லது பிழையான ஸெல்ப்-அசெஸ்மென்ட், வரி ரிட்டர்ன் தொடர்பான பிரகடனத்தையே தவறானதாக சித்தரித்து விடும். தற்சமயம், வரிவிதிப்புக்குரியவர் சமர்ப்பித்த ஸெல்ப்-அசெஸ்மென்ட் மீது வரிவிதிப்பு அதிகாரிக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், 15 நாட்களுக்குள் வரிவிதிப்புக்குரியவர் அச்சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வண்ணம் அவர் தம் ரிட்டர்னை திருத்தி மீண்டும் சமர்ப்பிக்க வருமான வரி சட்டதிட்டங்கள் அவரை அனுமதிக்கின்றன. ஆனால், வரிவிதிப்புக்குரியவர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேவையான திருத்தங்களை செய்யத் தவறினால், அவரது ரிட்டர்ன் பிழையானதாகக் கருதப்பட்டு நிராகரிக்கப்படும்.

வரிவிதிப்புக்குட்பட்ட ஏராளமானோர் ஸெல்ப்-அசெஸ்மென்ட் வரியை செலுத்தாமல் இருப்பதை கருத்தில் கொண்டு நிதிச் சட்டத்தில் வரைவில் ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வர உள்ளது. இதன் படி, ரிட்டர்னை சமர்ப்பிக்க வேண்டிய காலக்கெடுவுக்குள், நிலுவையில் இருக்கக்கூடிய இவ்வரி மற்றும் அதற்குரிய வட்டித்தொகை ஆகியவை செலுத்தப்படாமல் இருக்கும் பட்சத்தில், வருமான வரி ரிட்டர்ன்கள் பிழையானவையாகக் கொள்ளப்படும்.

நடைமுறைப்படுத்த வேண்டி முன்மொழியப்பட்டுள்ள இச்சட்டத்திருத்தம் வரி செலுத்துவோர் தம் தார்மீகக் கடமையிலிருந்து வழுவாமல் இருக்க உதவுவதோடு, அரசாங்கத்தின் நிதி வசூலையும் அதிகரிப்பதற்கு உதவக்கூடியதாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is self-assessment tax?

Self-assessment tax is the tax amount in excess of advance tax and TDS which is payable by the income tax assessee.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X