சொத்து பத்திரங்கள் தொலைந்து போனதா?? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க பாஸ்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சொத்து உரிமையாளர்கள், சொத்து ஆவணங்களை பழுதுபடாத விதத்தில் மிகுந்த பாதுகாப்புடன் வைத்துக்கொண்டாலும் கூட, சொத்து ஆவணங்கள் தொலைந்து போகும் சம்பவங்கள் பற்றி அடிக்கடி புகார்கள் கொடுக்கப்படுகின்றன. சில சொத்து பரிமாற்ற தீர்வுகளின் போது அல்லது வீட்டைப் புனரமைப்பதற்கு உங்களுக்கு வங்கி கடன் தேவைப்படும் நேரத்தில், நீங்கள் தான் சொத்து உரியாளர் என்பதற்கான கையடக்க ஆதாரமாக சொத்து ஆவணங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், வங்கி அதிகாரிகள் கடன் வழங்க மாட்டார்கள் மற்றும் சொத்துப் பரிமாற்றங்கள் தீர்க்கப்படுவதில் சிக்கல் உருவாகும்.

 

இருப்பினும், சொத்து ஆவணங்களை இழப்பதனால் ஒருவர் முழுமையாக தவிக்க விடப்படுவதில்லை. சொத்து உரிமையாளர்கள் முயற்சி செய்து நகல் ஆவணங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இங்கு நகல் சொத்து ஆவணங்களைப் பெறுவதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

நகல் சொத்து ஆவணங்களை எப்போதும் சொத்து உரிமையாளர் பெறமுடியும். ஆனால், இதற்கு கணிசமான செலவு, முயற்சி மற்றும் நேரம் ஆகியவை தேவை.

எஃப் ஐ ஆர் தாக்கல் செய்தல்

எஃப் ஐ ஆர் தாக்கல் செய்தல்

சொத்து ஆவணம் தொலைந்து விட்டால் முதல் வேலையாக போலீஸில் எஃப்ஐஆர் தாக்கல் செய்ய வேண்டும். இந்தப் புகார் பற்றிய நகலை சொத்து உரிமையாளர் பெற்றுக்கொள்ள வேண்டும். அடமான சொத்து ஆவணங்கள், வங்கி மூலம் இடந்தவறி வைக்கப்பட்டாலும் கூட, புகார் கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.

செய்திதாளில் விளம்பரம் செய்தல்

செய்திதாளில் விளம்பரம் செய்தல்

சொத்து உரிமையாளர் சொத்து ஆவண இழப்புப் பற்றி உடனடியாக ஒரு ஆங்கில மற்றும் பிராந்திய மொழி தினப்பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட சொத்தை வாங்க ஆர்வமுள்ள நபரும் இது பற்றி விளம்பரம் செய்யலாம்.

என்ஓசி மற்றும் நகல் பங்குச் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்தல்
 

என்ஓசி மற்றும் நகல் பங்குச் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்தல்

சொத்து ஆவணங்கள் தொலைந்து போனதற்கான எஃப்ஐஆர் காப்பி ஆதாரத்தைக் கொண்டு, ஹவுசிங் சொசைட்டியிலிருந்து, என்ஓசி மற்றும் டூப்பிளிகேட் ஷேர் சர்டிபிக்கேட் பெறுவதற்கு சொத்து உரிமையாளர் விண்ணப்பிக்க முடியும். சில வேளைகளில் வங்கிகள் என்ஓசி இல்லாமல் கடன் வழங்குவதில்லை. ஆகையால் கண்டிப்பாக நோ அப்ஜக்ஷன் சர்டிபிக்கேட் பெற்றுகொள்வது அவசியம்.

தொலைந்து போனதற்கான உத்தரவாதம் பெறுதல்

தொலைந்து போனதற்கான உத்தரவாதம் பெறுதல்

சொத்து விபரங்கள், எஃப்ஐஆர் நம்பர் மற்றும் பத்திரிகையில் வெளியான விளம்பரம் ஆகியவை அடங்கிய ஒரிஜினல் சொத்து ஆவணங்கள் தொலைந்து போனதற்கான உத்தரவாதம் பெறுவதற்கான அனைத்து விபரங்களும் ஒரு ஸ்டாம்ப் பேப்பரில் இருக்க வேண்டும். இந்த ஆவணத்தில் கூறப்பட்டவை உண்மை என்பதை உறுதிபடுத்த, ஒரு நோட்டரி மூலம் இது கையெழுத்திடப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.

விற்பனைப் பத்திர நகலைப் பெறுதல்

விற்பனைப் பத்திர நகலைப் பெறுதல்

பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, வேண்டிய கட்டணத்தை செலுத்தினால், பதிவாளர் அலுவலகம் விற்பனைப் பத்திரத்தை வழங்கும்.

நியாயமாக ஒரு பழைய சொத்தாக இருந்தால், குறிப்பிடப்பட்ட சொத்தின் மீது எந்தவொரு வில்லங்கமும் இல்லை என்பதை உறுதிபடுத்த ஒருவர் உறுதி அறிக்கை பெற வேண்டும். இந்த உறுதி அறிக்கையும் பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெற முடியும்.

ஆகவே, ஒருவேளை நீங்கள் சொத்து ஆவணங்களை தொலைத்து விட்டால், தாமதிக்காமல் நகல் ஆவணங்களைப் பெறுவதற்கு மேற்குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What should you do if you have lost your property papers?

The loss of property documents does not leaves one completely stranded and property owners can still try and recover duplicate documents.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X