ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களில் வியக்க வைக்கும் சில மாற்றங்கள்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இன்றைய நவீன வாழ்க்கை முறையில் ஹெல்த் இன்சூரன்ஸ் என்பது ஒரு அடிப்படைத் தேவையாகிவிட்டது. முன்பெல்லாம் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதோ அல்லது புதுப்பிப்பதோ அவ்வளவு எளிதான விஷயமில்லை. அதுவும் 58 அல்லது 60 வயதை கடந்துவிட்டால் பாலிசியை புதுப்பிப்பது என்பது நடக்காத காரியமாக இருந்து வந்தது.

நல்லவேளை 2013 அக்டோபர் 1ந்தேதி முதல் சில புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்திருக்கின்றன. இவற்றை தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

1. ஐஆர்டிஏ (IRDA) அமைப்பானது எல்லா இன்சூரன்ஸ் நிறுவனங்களும் ஹெல்த் இன்சூரன்ஸ் நடைமுறைகளில் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை விதிமுறைகளை தற்போது உருவாக்கியுள்ளது. சிக்கலான நோய்கள், முன் அங்கீகாரம், கணக்கில் ஏற்றுக்கொள்ளப்படாத மருத்துவமனை செலவுகள் போன்ற விஷயங்களில் ஒரே மாதிரியான விதிமுறைகளை பயன்படுத்த வேண்டும் என்று ஐஆர்டிஏ அறிவுறுத்துகிறது. எனவே எல்லா இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சேவைகளிலுமே ஒரு பொதுப்படைத்தன்மை இருக்கும். இது பயனாளிகளை ஏமாற்றப்படாமல் இருக்கவும் உதவும்.

2. இதற்குமுன் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவது மற்றும் புதுப்பிப்பது போன்ற நடைமுறைகள் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்து வந்தது. தற்போது திட்ட சீரமைப்பின்படி ஒருவர் 65 வயது வரை ஹெல்த் இன்சூரன்ஸ் சேவையை பெறலாம். அதற்குபின்னரும் ஆயுட்காலம் வரை அளிக்கப்படும் புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் சேவைகளுக்கு வழிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும் இது சிக்கலான நோய் வகைக்கு பொருந்தாது. ஏனெனில் ஒரு முறை நீங்கள் சிக்கலான நோய்க்கான நிவாரணத்தை பெற்றுவிட்டால் அத்தோடு அந்த பாலிசி முடிந்து விடுகிறது.

ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களில் வியக்க வைக்கும் சில மாற்றங்கள்!!!

3. ஹெல்த் இன்சூரன்ஸ் சேவைகளோடு தொடர்புடைய எல்லா நடைமுறைகளுமே தற்போது ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுவிட்டன. புதுப்பிக்கும் நடைமுறையும் முன்புபோல் அல்லாமல் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, போதுமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள்ளாக பயனாளிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அளித்திட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

4. மேலும், தற்போது ‘15 நாள் முன் அவகாச காலம்' ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு பாலிசி உங்களுக்கு தேவைதான் என்பதை உறுதி செய்ய இந்த 15 நாள் முன் அவகாசம் அளிக்கப்படுகிறது. ஒரு பாலிசி உங்களுக்கு வேண்டாம் என்ற எண்ணம் தோன்றினால் இந்த கால இடைவெளியில் அதனை ரத்து செய்து கொள்ளலாம். நீங்கள் அதற்காக செலுத்திய தொகையையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

5. முன்பு பிரிமீயத் தொகையை கட்டவேண்டிய தவணைத் தேதி தவறினால் அந்த பாலிசி காலாவதியாகிவிடும் சூழ்நிலை இருந்தது. அதற்கும் தற்போது ஒரு புதிய வசதி செய்யப்பட்டிருக்கின்றது. இனி கூடுதலாக 30 நாள் அவகாசம் காப்பீட்டுதாரர்களுக்கு கிடைக்கும். இருப்பினும் இந்த 30 நாள் அவகாச இடைவெளியில் உங்களுக்கு காப்பீட்டுச் சேவை கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களில் வியக்க வைக்கும் சில மாற்றங்கள்!!!

6. ஒருவேளை உங்களிடம் இரண்டு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் இருந்து அவற்றில் ஒன்றை மட்டுமே நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முந்தைய சூழலில் அது மிகவும் கடினம். ஆனால் தற்போதைய புதிய விதிமுறைகளின் படி உங்களிடம் உள்ள 2 அல்லது 3 பாலிசிகளில் ஏதோ ஒன்றை பயன்படுத்தி நீங்கள் மருத்துவ காப்பீட்டு நிவாரணத் தொகையை கோரலாம்.

7. எல்லாவற்றுக்கும் மேலாக இனிமேல் காப்பீட்டுத்தொகைக்கான விண்ணப்பங்கள் யாவும் முதலில் ஒரு மூன்றாம் நபர் அமைப்பு ஒன்றின் மூலம் பரிசீலிக்கப்படுகிறது. அதன் பிறகே சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு நிவாரணத் தொகை வழங்கல் அல்லது மறுப்பு ஆகியவை அந்த நிறுவனத்தால் தீர்மானிக்கப்படும். இந்த விதிமுறையானது ஹெல்த் இன்சூரன்ஸ் நடைமுறைகளில் ஒரு வெளிப்படைத் தன்மையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A quick look at the amazing new changes in Mediclaim Policies

Health insurance plans have always been a necessity of the life. A while ago, to buy any plan or renew your existing plan was a herculean task.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X