கறுப்புப் பணத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் கைகோர்க்கும் லிச்செண்ஸ்டெய்ன்!!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடல் கடந்த வரி ஏய்ப்பு மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் முக்கியமான இணை நாடாக விளங்கும் லிச்செண்ஸ்டெய்ன் (Liechtenstein), இவ்வாரத்தில் அதன் ரகசியத் திரையை தூக்கி வீசி விட்டு, வரி விஷயங்களில் பரஸ்பர உதவி மற்றும் தகவல் பரிமாற்றம் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி இதர பல நாடுகளுடன் கைகோர்த்து செயல்படவுள்ளது.

வரி தொடர்பான விஷயங்களில் தெளிவு மற்றும் தகவல் பரிமாற்றம் போன்றவை குறித்து, இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நவம்பர் 21-22 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் உலகலவிய கூட்டத்தின் போது, லிச்செண்ஸ்டெய்ன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று பாரீஸில் அமைந்துள்ள ஆர்கனைஸேஷன் ஃபார் எகனாமிக் கோ-ஆபரேஷன் அண்ட் டெவலப்மெண்ட் (ஓஇசிடி) தெரிவித்துள்ளது.

இந்தியா - லிச்செண்ஸ்டெய்ன்

இந்தியா - லிச்செண்ஸ்டெய்ன்

இந்த முடிவு, வரி ஏய்ப்பு மற்றும் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கறுப்புப் பணத்தை பதுக்கல் ஆகியவற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது.

கறுப்புப் பணம்

கறுப்புப் பணம்

இந்தியாவில் ஏராளமான நபர்கள், சட்டத்துக்குப் புறம்பாக சம்பாதித்த கறுப்புப் பணத்தை, பிற நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரகசியத் திரை

ரகசியத் திரை

மத்திய ஐரோப்பியாவில் அமைந்து, நாற்புறத்திலும் நிலத்தால் சூழப்பட்டுள்ள இந்த லிச்செண்ஸ்டெய்ன் நாட்டிலிருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை கண்ணுக்குப் புலப்படாத ஒரு ரகசியத் திரையை விலக்கியுள்ளது.

உதவும் இணை நாடுகள்

உதவும் இணை நாடுகள்

இதன் மூலம் லிச்செண்ஸ்டெய்ன், இந்தியா போன்ற அதன் இணை நாடுகள், சந்தேகத்துக்குரிய நபர்கள் அல்லது நிறுவனங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு அனுமதிப்பதோடு, அத்தகைய நபர்களின் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களையும் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யும்.

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து

கடந்த மாதம், சுவிட்சர்லாந்து இந்த கூட்டு ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் அதிகப்படியான கருப்பு பணம் பதுக்கப்பட்டு இருப்பது அனைவரும் அறிந்ததே.

பன்முக ஒப்பந்தம்

பன்முக ஒப்பந்தம்

ஓஇசிடியின் இந்த பன்முக ஒப்பந்தம், வரி செலுத்துவோரின் உரிமைகளை பாதுகாக்கும் அதே வேளையில், வேண்டுகோளுக்கிணங்கிய பறிமாற்றம், தங்கு தடையற்ற பறிமாற்றம், அயல்நாட்டில் வரி சோதனைகள், வரி சோதனைகள் மற்றும் வரி வசூலில் உதவி போன்ற அனைத்து விதமான பரஸ்பர ஆதரவையும் வழங்க வழி வகுத்துள்ளது.

தன்னிச்சையான ஒப்பந்தம்

தன்னிச்சையான ஒப்பந்தம்

மேலும், தன்னிச்சையான பறிமாற்றத்தில் விருப்பமுடைய இரு சாராருக்கிடையே ஒரு ஒப்பந்தம் மூலம் இத்தகைய ஆதரவுக்கான வாய்ப்பையும் ஓஇசிடி வழங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Blackmoney: India to get secret tax info from Liechtenstein

Liechtenstein, one of India's important partner nations in fighting overseas tax abuse and black money.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X