சுற்றுலா செல்லும்பொழுது செலவுகளை குறைத்து சேமிப்பது எப்படி?? சூப்பரான ஐடியா இருக்கு..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சொந்த காரணங்களுக்காகவோ அல்லது அலுவல் ரீதியாகவோ நாம் வெளியூர்களுக்கு பயணங்கள் மேற்கொள்வது இந்த வேகமாக யுகத்தில் மிகவும் சாதாணரமான செயலாக உள்ளது. இத்தகைய பணங்களில் நம் பல மனநிலையில் இருப்போம் இந்த சூழ்நிலையில் நாம் பணத்தை கண்முடித்தனமாக செலவு செய்வோம்.

 

வெளியூர்களுக்குப் பயணம் செய்பவர்கள் வழிச் செலவுகள் மற்றும் இதர அத்தியாவசிய செலவுகள் என செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு ஏற்படும் செலவுகளை எப்படி சமாளிக்கலாம், எப்படு குறைக்கலாம் என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், இதோ உங்களுக்கான பதில் ரெடி!

விமான கட்டணங்களை எப்படி குறைக்கலாம்??

விமான கட்டணங்களை எப்படி குறைக்கலாம்??

இணையம் வழியே, விமான சேவை நிறுவனத்தின் இணைய தளமல்லாமல் இது போன்ற சேவைகளை தொகுத்து வழங்கும் நிறுவனங்களில் விமான பயணச்சீட்டுகளை பதிவு செய்தால் நமக்கு குறைவான செலவை ஆகும்.

குறைந்தது 30 நாட்களுக்கு முன்னராவது பதிவு செய்யுங்கள். இது மட்டுமல்லாமல், காலை நேர அல்லது பின்னிரவு நேர விமானங்களுக்கு பதிலாக, பகல் நேர அல்லது நண்பகலுக்குப் பிறகு கிளம்பும் விமானங்களை பதிவு செய்யுங்கள்.

தங்குமிடத்திற்கான செலவுகள்

தங்குமிடத்திற்கான செலவுகள்

நீங்கள் தங்குமிடத்தைப் பற்றிய பார்த்தால், விமானத்திற்கு பயன்படுத்திய விதியை விட நேரெதிர் முறையை கடைபிடிக்க வேண்டும். இணையம் வழியாக முயற்சி செய்வதற்கு பதிலாக, நேரடியாக சென்று பதிவு செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் நிறைய தள்ளுபடிகளை பெற முடியும். அதே நேரம், பட்ஜெட் ஹோட்டல்கள் அல்லது அடுக்கு மாடிகளை தேர்ந்தெடுத்தால் சிறந்தது.

சீசன் வேண்டாம்!
 

சீசன் வேண்டாம்!

ஒரு பிரபலமான சுற்றுலா தலத்திற்கோ அல்லது புனித தலத்திற்கோ நல்ல சீசனில் செல்லாமல், அந்த சீசன் முடியும் தருவாயிலோ அல்லது தொடங்கும் முன்னரோ சென்று வந்தால் மிகப்பெரிய அளவு சேமிப்பை அடையலாம். இந்நாட்களில் விமானங்கள் மற்றும் விடுதிகளின் கட்டணங்கள் மட்டுமல்லாமல், அந்த இடங்களில் விற்கும் பொருட்களின் விலையும் குறைவாகவே இருக்கும். மிகவும் குறைவான அளவே கூட்டமும் இருப்பதால், சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் உதவும்.

8-10% விலை உயர்வு

8-10% விலை உயர்வு

மே-ஜுன் மாதங்களில் குறைந்த பட்சம் 8 முதல் 10 சதவிகிதம் வரையில் விமான கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன என்று STIC நிறுவனத்தின் தலைவர் சுபாஷ் கோயல் குறிப்பிடுகிறார். எனவே, சீசனில்லாத நேரங்களில் பயணம் செய்யுங்கள்.

உணவில் தேவை புத்திசாலித்தனம்

உணவில் தேவை புத்திசாலித்தனம்

நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் பாக்கெட்டின் எடையை கணிசமாக குறைக்கும் என்பது உண்மை. எனவே, தங்கும் விடுதிகளில் சாப்பிடுவதை விட உள்ளூர் உணவகங்களில் சாப்பிட்டால் செலவு குறையும். மேலும், சூப்பர் மார்க்கெட்களில் தண்ணீரை வாங்கி வைக்கலாம் அல்லது எளிமையாக உள்ளூர் பேக்கரிகளில் விற்கும் ரெடிமேட் உணவுகளை வாங்கி உங்களுக்குத் தேவையான உணவுகளை பெறலாம். மேலும், விடுதிகளில் உள்ள மினிபார்கள் செலவை அதிகப்படுத்தும் எனவே அவற்றை எப்பொழுதும் பயன்படுத்த வேண்டாம்.

புத்திசாலித்தனமாக சுற்றிப் பாருங்கள்

புத்திசாலித்தனமாக சுற்றிப் பாருங்கள்

நீங்கள் சுற்றிப் பார்ப்பதற்கான இடத்தைத் தேர்ந்தெடுத்து விட்டால், உடனடியாக இணைய தளத்திற்கு சென்று அந்த சுற்றுலா அமைவிடங்களுக்கு செல்வதற்கான கூப்பன்கள் மற்றும் தள்ளுபடிகளை தேடுங்கள். அவற்றின் மூலம் பல்வேறு பிரபலமான இடங்களை குறைவான செலவில் சுற்றிப் பார்க்க முடியும். அதே போல விடுதிகள் ஓய்வு நாட்களில் இலவசமாக சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லும் வசதிகளை தருகின்றனவா என்பதையும் பார்க்கலாம்.

பயண வழிச் செலவுகள்

பயண வழிச் செலவுகள்

டாக்ஸிகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக உள்ளூர் பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகளை பயன்படுத்தினால் மற்றுமொரு செலவை உங்களால் குறைக்க முடியும். நீங்கள் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும் மையமாக அமைந்திருக்கும் விடுதிகளை தேர்ந்தெடுத்தால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மிதி வண்டிகளை வாடகைக்கு எடுத்துக் கொள்வது மற்றுமொரு சிறந்த வழிமுறையாக இருக்கும்.

அனுபவ அறிவுடன் ஷாப்பிங் செய்யுங்கள்

அனுபவ அறிவுடன் ஷாப்பிங் செய்யுங்கள்

சுற்றுலா அல்லது பயணத்தின் நினைவாக அதிகமான நினைவுப் பொருட்களை வாங்க வேண்டாம். குறிப்பாக சுற்றுலா தளங்களில் இந்த பூமியிலேயே மிகவும் அதிகமான விலைகளில் பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. இதற்கு மாறாக உள்ளூர் சந்தைகளுக்கு சென்று நினைவுப் பொருட்களை வாங்குகங்கள். உண்மையில், உங்களுடைய ஷாப்பிங் முழுமையுமே சுற்றுலா பயணிகள் வராத இடங்களில் இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.

அதிக கட்டணம்..

அதிக கட்டணம்..

அதிகமான பொருட்களை வாங்கினால் சரக்கு கட்டணத்தை விமான நிலையங்களில் செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள.

குறைந்த செலவில் பேசுங்கள்

குறைந்த செலவில் பேசுங்கள்

நீங்கள் வெளிநாடுகளுக்கு ஓய்வெடுக்க செல்லும் நாட்களில், ஒரு சர்வதேச சிம் கார்டை வாங்கி கொள்வது நல்ல பயன் தரும். இந்த கார்டுகள் நாடுகளுக்கு இடையில் சாட் செய்ய உதவும். இதை செய்யாவிடில் நீங்கள் செல்லும் நாட்டின் உள்ளூர் சிம் கார்டை வாங்கிக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு வசதியான பயணம்

குழந்தைகளுக்கு வசதியான பயணம்

குழந்தைகளுக்கு வசதியான பயணம்

நீங்கள் குழந்தைகளுடன் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அவர்களுக்குத் தேவையான டையாபர்கள், பொம்மைகள் மற்றும் உணவுகளை கையோடு எடுத்துச் செல்லுங்கள். வெளிநாடுகளில் அவை மிகவும் அதிக விலை. மேலும், குழந்தைகளுக்கு இலவசமாக தங்க இடமளிக்கும் விடுதிகளை தேர்ந்தெடுங்கள். சுற்றுலா தளங்களில் குழந்தைகள் தங்குவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை அல்லது குறைவாக கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

அத்தியாவசிய பொருட்கள் முக்கியம்

அத்தியாவசிய பொருட்கள் முக்கியம்

உடனடியாக சாப்பிட தயாராக உள்ள உணவுகள், உப்பு, சர்க்கரை, பால் பவுடர் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்ல மறந்து விட வேண்டாம். சோப்பு, டிடர்ஜென்ட் மற்றும் மருந்துகளையும் எடுத்துச் செல்ல மறந்து விடாதீர்கள். இந்த பொருட்களெல்லாம் வெளி இடங்களில் அதிகமான விலைகளில் விற்பதால், தேவையில்லாமல் அதிக செலவுகளை பயணத்தில் செலவழிக்க நேர்ந்து விடும்.

ஆலோசனை

ஆலோசனை

இதை பின்பற்றினால் பயணத்தில் ஏற்படும் அதிகபட்ச செலவை கண்டிப்பாக குறைக்க முடியும். மேலும் உங்கள் திறமைக்கு ஏற்றாற் போல் பட்ஜெடை தீட்டி செலவிடுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 ways to save money while travelling

10 smart ways to save your money while travelling abroad or in a picnic. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X