மகிழ்ச்சியான வாழ்கைக்கு வீட்டு பட்ஜெட் திட்டம் அவசியம் பாஸ்..!

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மாத சம்பளத்தை கொண்டு வாழ்கை நடத்துபவர்கள் கண்டிப்பாக பட்ஜெட் போட்டு தான் வாழ்கை நடத்த விட வேண்டும், இல்லை என்றால் மாத கடைசியில் திண்டாட்டம் தான். இதில் பலர் வரவு செலவு பட்ஜெட் போடுவதில்லை, சிலரோ ஒரே பட்ஜெட்டில் நிற்கின்றனர். பட்ஜெட் போடுவது ஒன்றும் கடினமான செயல் அல்ல. நம் பாட்டி, அம்மா என்று அக்காலக்கட்டத்தில் படிப்பறிவு இல்லாதவர்களும், பட்டறிவுடன் நம் தாய்மார்களே நன்றாக பட்ஜெட் போட்டுள்ளனர் என்பதால் நமக்கும் இதை இயல்பாகவே செய்ய முடியும்.

 

நீங்கள் பணத்தில் புரண்டாலும், உங்கள் செலவுகளை உங்கள் கட்டுக்குள் வைத்தால், நீங்கள் பட்ஜெட் போட தேவையில்லை. ஆனால் வரவுக்கு மேல் செலவு வருகின்றது என்றால் நிச்சயம் நீங்கள் பட்ஜெட் போடும் நிலையில் உள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

பட்ஜெடின் முக்கியதுவம்

பட்ஜெடின் முக்கியதுவம்

ஒரு மகிழ்ச்சியான குடும்பம் இருக்குமென்றால் அங்கு பட்ஜெட் நல்ல முறையில் போடப்பட்டு ஒழுங்கான முறையில் குடும்பம் நடத்த படுகின்றது என்று அர்த்தம். அப்படி போடும் பட்ஜெட் புத்தி கூர்மையுடன் போடப்பட வேண்டும். ஏதோ ஏனோ தானோவென்று போடும் விளையாட்டு விஷயமில்லை இது.

ஆடம்பர செலவுகள்

ஆடம்பர செலவுகள்

சில நேரங்களில் பட்ஜெட் கையை கடிக்கும் என்றால் நன்றாக பாருங்கள் உங்கள் தேவையை மீறி டிவி, வீடியோ போன்று எதற்காவது ஆசை பட்டு வீண் ஆடம்பரத்திற்காக வாங்கி இருப்பீர்கள்.

திட்டமிடுதல்

திட்டமிடுதல்

ஒரு பொருளை வாங்க முடிவு செய்தால் உங்கள் அன்றாட தேவைகள் பாதிக்காத படி வாங்க வேண்டும். அதற்காக முன்கூட்டியே திட்டம் தீட்ட வேண்டும்.

இழப்பு அதிகம்
 

இழப்பு அதிகம்

ஆடம்பரம் உங்கள் பட்ஜெட்டை மீற செய்யும். அன்றாட தேவை என்று எண்ணி ஆடம்பர செலவுக்கு பணம் செலவு செய்து வருவோம். ஆனால் அது நமக்கு புரியும் போது நாம் இழந்தது அதிகமாக இருக்கும். ஆகவே எது அவசியம் எது தேவையற்ற செலவு என்பதை முன்கூட்டியே திட்டம் தீட்டி செயல்பட்டால் நீங்களும் பட்ஜெட் பத்பனாபன்தான்.

வாழ்க்கை துணைவியின் உதவி

வாழ்க்கை துணைவியின் உதவி

சில நேரத்தில் முடிவு எடுக்க முடியாமல் உங்கள் வாழ்க்கை துணையின் உதவியை கேட்பீர்கள். ஆனால் அது சில நேரத்தில் மேலும் உங்களுக்கு கஷ்டத்தை சேர்க்கும். சில நேரத்தில் கூடுதல் பலன் தரும். ஆகவே அடுத்தவர்களிடம் கேட்டாலும் நீங்கள் நன்கு ஆராய்ந்து பின் முடிவை எடுக்க வேண்டும்.

துவக்கத்தில் கசக்கும், பின்பு இனிக்கும்..

துவக்கத்தில் கசக்கும், பின்பு இனிக்கும்..

ஆரம்பத்தில் பட்ஜெட்டு போட்டு குடும்பம் நடத்துவதில் சிரமம் இருக்கதான் செய்யும். ஆனால் போக போக இவ்வளவுதானா என்று புரியும். அதன் பின் உங்கல் நிம்மதி உங்கள் கையில்.

பட்ஜெட் எக்ஸ்பட்

பட்ஜெட் எக்ஸ்பட்

உங்கள் பட்ஜெட்டை போட்ட பின் அதை ஒரு இரண்டு மூன்று மாதங்களுக்கு போட்டு முடித்து செயல் படுத்தி விட்டீர்கள் என்றால் உங்கள் பட்ஜெட்டை நிர்வகிக்கும் திறன் உங்களுக்கு வந்து விட்டது என்று அர்த்தம். எனவே கவலை இல்லாமல் உங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Setting realistic financial budgets

Most people avoid creating a financial budget and fewer still stick to one. But it doesn't have to be painful.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X