உங்களின் பிஎஃப் தொகையைத் தெரிந்துகொள்ள ஈசியான வழி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு தன் 5 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பு விவரங்களைத் தெரிந்துகொள்ள ஒரு பிரத்தியேக இணையதளத்தைத் துவக்கியுள்ளது. இதன் மூலம் வருடந்தோறும் வழங்கப்படும் ரசீதுக்காக இனி காத்திருக்க வேண்டியதில்லை.

 

இந்த இணையதளத்தை சோதித்து நன்றாக வேலை செய்கிறதா அல்லது வழக்கம்போல ஏதாவது குறைகள் உள்ளனவா என பார்க்க முயற்சித்ததில் அது திருப்தியாகவே வேலை செய்கின்றது. நான்கு பேர் செய்த முயற்சியில் மூவருக்கு ஐந்து நிமிடங்களுக்குள் எஸ்எம்எஸ் மூலம் விடை கிடைத்தது.

உங்களின் பிஎஃப் தொகையைத் தெரிந்துகொள்ள ஈசியான வழி!!

உங்கள் பிஎஃப் தொகையைத தெரிந்துகொள்ள ஐந்து எளிய வழிகள் இதோ:

1. உங்கள் பிஎஃப் எண்ணை தயாராக வைத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் சம்பள விவரப் பட்டியலில் இருக்கும்.

2. தொகையைத் தெரிந்துகொள்ள கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யுங்கள்
http://www.epfindia.gov.in/

3. உங்கள் பி எப் அலுவலகம் அமைந்துள்ள மாநிலத்தை தேர்வு செய்யவும்

4. அதில் உங்கள் பகுதி அலுவலகத்தை தேர்வு செய்யவும். இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. உங்கள் பி எப் எண் எண்கள் மற்றும் எழுத்துக்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும். அதில் முதல் இரண்டு எழுத்துக்கள் அதாவது DL/12345/6789 என்பது உங்கள் எண் என்றால் DL என்பது உங்கள் பகுதி அலுவலகத்தைக் குறிக்கும்.

5. உங்கள் பெயர் (உங்கள் சம்பள சீட்டில் உள்ளதுபோல்), பி எப் எண் மற்றும் மொபைல் போன் எண் ஆகிய விவரங்களை ஆன்லைன் விண்ணபத்தில் நிரப்புங்கள். முதல் கட்டத்தில் ஏழு எண்களை நிரப்பவேண்டியிருக்கும். முதல் இரண்டு கட்டங்களில் '0' என்று நிரப்பி மீதமுள்ளவற்றில் உங்கள் எண்களை (மேலே குறிப்பிட்டதுபோல்) நிரப்புங்கள். அடுத்த கட்டத்தில் 3 இலக்கம் கொண்ட அமைப்பு என்னை நிரப்பவும் (நீங்கள் வேலை செய்யும் நிறுவன எண்). கடைசியாக, உங்கள் கணக்கு எண்ணை நிரப்பி சப்மிட் செய்யவும்.

 

உங்கள் விவரங்கள் சரியாக பதிவாகி இருந்தால், நீங்கள் சப்மிட் செய்ட 5 நிமிடங்களுக்குள் உங்களுக்கு உங்கள் கணக்கு விவரங்கள் எஸ் எம் எஸ் மூலம் வரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 easy steps to check PF balance online

EPFO today launched a facility to enable its over 5 crore subscribers view their updated accounts online on real time basis without waiting for their annual PF account slips.
Story first published: Saturday, April 5, 2014, 10:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X