நீங்கள் இதை கண்டிப்பாக சொல்ல கூடாது பாஸ்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நம்மில் பலரும் வங்கி பரிமாற்றங்களை இப்போதெல்லாம் இணையதளத்தின் மூலமாக தான் புரிகிறோம். வேறு வழியே இல்லாத பட்சத்தில் மட்டுமே, மிகவும் அரிதாகவே வங்கிக்கு நேரில் செல்கிறோம். இணையதளம் மூலமாக வங்கி பரிமாற்றங்கள் (நெட் பேங்கிங்) செய்யாதவார்கள் ஏ.டி.எம். மற்றும் வங்கியின் அழைப்பு மையத்தை பயன்படுத்துவார்கள்.

 

இணையதளம் மற்றும் ஏ.டி.எம். மூலமாக வங்கி பரிமாற்றங்களை செய்யும் போது, எப்படி நீங்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறீர்களோ, அதே போல் வங்கியின் அழைப்பு மையத்தின் மூலமாக வங்கி பரிமாற்றங்களை செய்யும் போதும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது பலருக்கு தெரிவதில்லை.

தொலைப்பேசி மூலமாக வங்கி பரிமாற்றங்களில் ஈடுபடும் போது, எப்போதும் கீழ்கூறிய தகவல்களை தெரிவிக்காதீர்கள்..

மனிதர்கள் மீதுள்ள நம்பிக்கை

மனிதர்கள் மீதுள்ள நம்பிக்கை

தொலைப்பேசியின் மறுமுனையில் இருப்பது மற்றொரு மனிதனின் குரல் தான்; அது ஒன்றும் எரிச்சலூட்டும் ஒரு இயந்தரத்தின் சத்தம் அல்ல. அதனால் எந்த ஒரு சூழ்நிலையிலும், உங்கள் வங்கி கணக்கை பற்றிய சில தகவல்களை அவர்களிடம் பகிர கூடாது.

பின் எண்

பின் எண்

உதாரணத்திற்கு, உங்கள் டெபிட் கார்டு நான்கு இலக்கு PIN எண் எக்காபணத்திற்காகவும் தெரிவிக்க கூடாது.

டின் எண்

டின் எண்

இப்போதெல்லாம் பல வங்கிகள், குறிப்பிட்ட தொலைப்பேசி அடையாளம் அல்லது நான்கு இலக்கு PIN எண்களை டின் எண் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார்கள். வங்கியின் முகவரிடம் எக்காரணத்தை கொண்டும் இந்த எண்ணை கூற கூடாது.

ஒன்-டைம் பாஸ்வார்ட்
 

ஒன்-டைம் பாஸ்வார்ட்

பாதுகாப்பை ஒரு படி அதிகரிக்கும் நோக்கத்தில், ஒன்-டைம் பாஸ்வார்ட் என்ற உறுதிப்பாடு முயற்சியை சென்ற வருடம் அறிமுகப்படுத்தியது அபெக்ஸ் வங்கி. அதன் படி, இணையதளத்தில் நீங்கள் கடவுச்சொல்லை உண்டாக்க வேண்டும். இந்த கடவுச்சொல் சிறு நிமிடங்களுக்கு மட்டுமே செயல்படும். மேலும் இதனை ஒற்றை பரிமாற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த கடவுச்சொல்லையும் கூட வங்கியின் அழைப்பு மைய பணியாளரிடம் கூற கூடாது.

CVV எண்

CVV எண்

உங்கள் கிரெடிட் கார்டை பற்றி விவரம் அறிய, நீங்கள் வங்கியின் அழைப்பு மையத்தை அழைக்கும் போது, உங்கள் கிரெடிட் கார்டின் சில விவரங்களை நீங்கள் அவரிடம் பகிர வேண்டி வரும்; உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், உங்கள் கார்டின் 16 இலக்கு எண். ஆனால் அதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். உங்கள் கார்டில் உள்ள மூன்று இலக்கு CVV எண்ணை கண்டிப்பாக பகிர கூடாது. CVV எண் அல்லது கார்டு வேல்யூ வெரிஃபிகேஷன் நம்பர், உங்கள் கிரெடிட் கார்டின் பின் புறமாக கையெழுத்து முகப்பிற்கு அருகில் காணப்படும். நீங்கள் பேசும் நபரிடம் அதனை பகிர வேண்டாம்.

யூனிக் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர்

யூனிக் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர்

இணையதளம் மூலமாக பணமாற்றலில் ஈடுபடும் போது, பணம் பெறுபவர் உறுதி செய்வதற்கு, சில வங்கிகள் யூனிக் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் (URN) ஒன்றை அளிக்கிறது. இதையும் கூட கண்டிப்பாக வங்கியின் அழைப்பு மைய பணியாளரிடம் கூற கூடாது.

பாதுகாப்பான சூழல்

பாதுகாப்பான சூழல்

முடிந்த வரையில் பொது இடங்களில் இருக்கும் போது, தொலைப்பேசி வங்கி பரிமாற்றத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். தொலைப்பேசியில் பேசும் போது உங்கள் தனிப்பட்ட தகவல்களையும் வங்கி கணக்கை பற்றிய தகவல்களையும் பகிர வேண்டி வரும். இதனை அருகில் இருப்பவர்கள் கவனிக்கலாம் அல்லவா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 numbers you should never share while using your bank's call centre

For most of us, banking has pretty much gone online, and we rarely visit a bank branch, unless we have no other option left. In fact, many who don’t do net banking land up using the ATM as well as the bank’s call centre.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X