பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டிய நிதியியல் கல்வி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: 'சிறுகச் சேர்த்து பெருக வாழ்' என்பது பழமொழி. எனினும், சிறுகச் சேர்க்கும் போது கூட, பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்று தெரிந்து செய்ய வேண்டியதும் முக்கியம்.

 

பரீட்சை மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்ட இன்றைய பள்ளிக் கல்வியில் இது போன்ற செயல்பாட்டு ரீதியிலான படிப்பினைகள் மிகவும் குறைவே. எனவே, குழந்தைகள் மற்றும் பணம் தொடர்பாக உங்களுடைய பெற்றோர்களின் கையேடு என்ன சொல்கிறது என்று பாருங்கள். இதன் மூலம் உங்களுடைய குழந்தைகள் பணத்தை எப்படி பொறுப்புடன் செலவு செய்யலாம் என்று உணரச் செய்யுங்கள்.

பணம் என்றால் என்ன???

பணம் என்றால் என்ன???

குழந்தைகள் தாங்களாகவே தங்களுடைய வாழ்க்கைக்காக பணம் சம்பாதிக்கத் தொடங்கும் முன்னதாக அவர்கள் பணம் என்னவோ மரத்தில் காய்ப்பது போன்ற எண்ணத்தில் செலவு செய்து கொண்டிருப்பார்கள். எனவே, பணத்தை கையாளும் பொறுப்புகளில் குழந்தைகளை சிறு வயதிலேயே ஈடுபடுத்தி, நிதிக்கல்வியை அவர்களுக்கு சரியான முறையில் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளின் முதிர்ச்சி

குழந்தைகளின் முதிர்ச்சி

கூட்டல் அல்லது கழித்தல் என கணக்குகளைக் கற்றுக் கொள்ளும் முன்னரே குழந்தைகள் பணத்தைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்கள். 4-வயதான குழந்தைக்கு கூட தன்னுடைய தந்தை பணத்தை ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து எடுக்கிறார் என்று தெரியும். எனினும், பெற்றோர்கள் உழைத்தால் தான் பணத்தை சம்பாதிக்க முடியும் என்று அவர்கள் புரிந்து கொள்ள, சற்றே முதிர்ச்சியான மனம் வேண்டும் மற்றும் அதன் பின்னர் தான் கற்றுக்கொள்ளும் செயல்பாட்டின் நுணுக்ககங்கள் தெரியத் துவங்கும். எடுத்துக்காட்டாக, தன்னுடைய தந்தை வேலை செய்து வாழ்க்கை நடத்துகிறார் என்று தெரிந்து கொண்ட குழந்தை அவரைப் பார்த்து, 'இன்று வேலை எப்படி இருந்தது? என்று கேட்பார். 'நன்றாக இருந்தது', என்று தந்தை பதிலளிப்பார். உடனே குழந்தை 'நீங்கள் அதற்கு பணம் பெற்றீர்களா?' என்று கேட்க்கும் குழந்தைகள் உண்டு.

சேமிப்பு
 

சேமிப்பு

மனநிறைவு என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பணத்தைக் கொண்டு பொம்மைகள், மிட்டாய் போன்றவற்றை வாங்க முடியும் என்று குழந்தைகள் கற்றுக் கொள்ளும் போது தங்கள் கையில் கிடைக்கும் ஒவ்வொரு காசையும் சேமித்து வைத்துக் கொள்ள அவர்கள் நினைப்பார்கள். இந்த ஊக்கம் தான் குழந்தையை சரியான நிதி மேலாளராக வழிநடத்தி, இளைஞனாக கொண்டு வரும்.

இன்றைய விதை, நாளைய கனி

இன்றைய விதை, நாளைய கனி

குழந்தைக்கு நிதி தொடர்பான விழிப்புணர்வை இளம் வயதிலேயே கொடுக்கத் தொடங்குவது முக்கியமானதாகும். ஏனெனில், டீன்-ஏஜ் சிறுவர்/சிறுமிகள் இத்தகைய ஆலோசனைகளுக்கு அவ்வளவாக செவி கொடுப்பதில்லை. மேலும், பணத்தை செலவிடுவதில் உள்ள வழிகளிலே அவர்கள் பிஸியாக இருப்பார்கள்.

ஊக்கத் தொகையின் அருமை

ஊக்கத் தொகையின் அருமை

குழந்தைகளாக இருக்கும் போது சிறிய அளவிலான பணத்தை அவர்களிடம் கொடுத்து தினசரி செலவுகளை செய்யச் சொல்லுவது நல்லது. மேலும் செலவிற்கான கணக்கை அவர்களிடம் பெரியவர்கள் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். இப்போதுதான் நம்மை ஒரு கண்காணிக்கிறார் என குழந்தைகள் உஷாராக இருப்பார்கள். குழந்தைகள் வளரும் காலத்தில் பெரிய அளவிலான செலவுகளை சுயமாக செய்ய இந்த அனுபவம் உதவும்.

டீன்-ஏஜ் மற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகள்

டீன்-ஏஜ் மற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகள்

கணக்குகள், கிரெடிட் அட்டைகள் மற்றும் கடன்களை பரிசோதித்தல் ஆகியவை கல்லூரி செல்பவர்களுக்கான ஆரம்ப கட்ட நிதி செயற்கல்வியாக இருக்கும். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வங்கி மற்றும் கடன் தொடர்பான விஷயங்களைப் பற்றி சொல்லித் தருவதன் மூலம், அவர்களுக்கு பணத்தை குறித்து ஒரு சிறந்த அறிவை அவர்கள் மனதில் புகுத்துகிறோம்.

முதலீட்டைப் பற்றியும் இளமையில் கற்க வேண்டும்

முதலீட்டைப் பற்றியும் இளமையில் கற்க வேண்டும்

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சந்தைகள் மற்றும் உண்மையான பணத்தைப் பயன்படுத்தும் முறைகள் பற்றி அந்த வயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனால் இவர்கள் சிறுவையது முதலே பணத்தின் அருமையை உணர்ந்து வாழ்கையை சிற்ந்த முறையில் நடத்துவர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Financial education for kids

Check out our parent's guide to kids and money. Help put your children on the road to handling money responsibly.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X