லண்டன் ஏலத்தில் திப்பு சுல்தானின் மர்மமான மோதிரம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன்: 18-ம் நூற்றாண்டில் மைசூரை ஆண்டு வந்த, வீரமிக்க திப்பு சுல்தானின் தனித்தன்மை வாய்ந்த மோதிரம் இங்கிலாந்தில் 145,000 பவுண்டுகளுக்கு ஏலத்தில் எடுத்துள்ளனர். ஏதிர்பார்க்கப்பட்டதை விட இது 10 மடங்கு அதிகமான விலைக்கு ஏலம் போனது என கிறிஸ்டி என்ற ஏல நிறுவனம் தெரவித்துள்ளது.

 

இந்த மோதிரம் 41.2 கிராம் எடையுள்ளது, இதை பெயர் வெளியிட விரும்பாத ஒருவர், மத்திய இலண்டனிலிருந்து வாங்கியுள்ளதாக கிறிஸ்டி ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்வேறு பாரம்பரிய பாதுகாப்பு அமைப்புகளின் விமர்சனங்களுக்கிடையில் இந்த ஏலம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடதக்கது.

இராமரின் பெயர்

இராமரின் பெயர்

'இந்து கடவுளான இராமரின் பெயரை தேவநாகரி வடிவுருவில் பொறிக்கப்பட்டிருக்கும் இந்த மோதிரம் 145,000 பவுண்டுகளுக்கு எடுக்கப்பட்டுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட விலையை விட 10 மடங்கு அதிகமானது' என்று பிபிசி நியூஸ் தெரிவித்துள்ளது.

மறைவுக்குப் பின்

மறைவுக்குப் பின்

1799ஆம் ஆண்டு நடந்த ஸ்ரீரங்கப்பட்டினம் போரில் திப்பு சுல்தான் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போரிட்டு இறந்த பின்னர், அவரது உயிரற்ற உடலிலிருந்து இந்த மோதிரம் கழட்டி எடுக்கப்பட்டுள்ளது.

மர்மம்

மர்மம்

'மாபெரும் முகலாய வீரரான திப்பு சுல்தானின் விரலில் இந்துக் கடவுளான இராமரின் பெயர் பொறிக்கப்பட்ட மோதிரம் இருப்பது ஆச்சரியமாக உள்ளது', என்று ஏல நிறுவனத்தின் குறிப்பு சொல்கிறது.

இந்திய சொத்தை மீட்க வேண்டும்
 

இந்திய சொத்தை மீட்க வேண்டும்

இந்தியாவிலுள்ள நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடிஸைச் சேர்ந்த எஸ் செட்டார் என்ற பேராசிரியர், 'இந்த மோதிரத்தை தனியார் ஏலத்திற்கு எடுத்தால், அது பொது மக்களின் பார்வையிலிருந்து மறைந்து விடும்' என்று எச்சரிக்கை விடுத்திருந்தார், மேலும் அவர் "இந்த மோதிரத்தை மீட்க சட்ட ரீதியாகவும் மற்றும் இராஜதந்திர ரீதியாகவும் இந்திய அரசு முயற்சி செய்ய வேண்டும்" என்று செட்டார் வலியுறுத்தினார்.

திப்பு சுல்தான்

திப்பு சுல்தான்

மைசூர் புலி என்று அழைக்கப்பட்ட திப்பு சுல்தான், தன்னுடைய தந்தை ஹைதல் அலிக்குப் பின்னர் 17 ஆண்டுகள் தன்னுடைய ராஜ்ஜியத்தில் ஆட்சி செய்த வீரராவார்.

கிறிஸ்டி நிறுவனம்

கிறிஸ்டி நிறுவனம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மோதிரத்தை கிறிஸ்டி நிறுவனம் விற்பனை செய்ய முயற்சி செய்து ஏலப்பட்டியலில் சேர்த்திருந்தது. ஆனால், அப்போது தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டது கிறிஸ்டி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tipu Sultan's ring sells for 145,000 pounds in UK

A unique golden ring belonging to Mysore's 18th Century legendary ruler Tipu Sultan has been sold for a whopping 145,000 pounds at an auction here, 10 times more than its estimated price. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X