உங்கள் பணம், உங்கள் கைகளில்... கால்பந்து கற்றுத் தரும் நிதியியல் கல்வி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வழியாக முடிந்து இப்போது கால்பந்து ஜுரம் உலகம் முழுவதும் பரவி அனலாகக் கொதித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் மெக்ஸிகோவுடன் கடுமையாக மோதியும் ஒரு கோல்கூடப் போட முடியாமல் உள்ளூர் ரசிகர்களை பிரேசில் அதிர்ச்சிக்குள்ளாக்க, மற்றொரு புறமோ நடப்பு சாம்பியனான ஸ்பெயின் முதல் சுற்றிலேயே மண்ணைக் கவ்விக் கொண்டு ஊர் திரும்பி விட்டது. இப்படி பிரேசில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் "ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு போட்டியும், ஒவ்வொரு நிமிடமும் நமக்கு த்ரில்ல்ல்ல்ல்லோ த்ரில்தான்"!

இப்படிப்பட்ட கால்பந்து விளையாட்டு நமக்கும் சில பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது என்றால் வியப்பாக உள்ளதல்லவா? அதிலும், நாம் முறையாகச் சேர்த்து வைத்த பணத்தை இன்னும் பத்திரமாகக் கையாளுவதற்கு, அதனிடமிருந்து 5 முக்கியமான பாடங்களை நாம் கற்றுக் கொள்ளலாம்!

பரவலாக்கம்

பரவலாக்கம்

ஒரே கூடைக்குள் எல்லா முட்டைகளையும் போட்டு வைப்பது நல்லதல்ல. கால்பந்து விளையாட்டிலும் அதுதான் நிலைமை. ஒரு அணியின் வீரர்கள் நாலாபுறமும் பரவி நின்றால்தான், எளிதாக பந்தைக் கடத்தி கோல் போட முடியும். அதுபோலத்தான் நாம் நம் பணத்தை பல்வேறு தளங்களில் முதலீடு செய்து வைப்பதுதான் புத்திசாலித்தனம்!

ரீபேலன்ஸிங்

ரீபேலன்ஸிங்

கால்பந்து விளையாட்டில் தற்காப்பு ஆட்டம் (Defensive) மற்றும் தடதடவென்று பந்தை உதைத்து ஆடும் ஆட்டம் (Offensive) என்ற இரு நிலைகள் உள்ளன. தக்க நேரம் பார்த்து தேவைக்கு ஏற்ப இவற்றை உபயோகித்தால்தான் வெற்றி. அதுபோலவே, நம் சேமிப்புக்களையும் மாற்றி மாற்றி வெவ்வேறு துறைகளில் முதலீடு செய்வது நலம்!

அவசரத் தேவைகள்
 

அவசரத் தேவைகள்

முரட்டுத்தனமான கால்பந்தாட்டத்தில் எப்போது, என்ன விபத்து நடக்கும் என்றே தெரியாது. எவ்ளோ பெரிய பிளேயராக இருந்தாலும், பந்தை உதைத்துக் கொண்டு போகும் போது சிலர் அடிபட்டு காயங்களுடன் சாய்ந்து விடுவார்கள். காயம் பட்டவருக்குப் பதிலாக வேறொரு வீரர் களம் இறங்குவார். நம் வாழ்க்கையும் அதுபோலத்தான்! திடீரென்று ஏதாவது நோய் வந்து விடும் அல்லது ஆஃபீஸில் வேலையை விட்டு துரத்தி விடுவார்கள். இவற்றையெல்லாம் எதிர்பார்த்து, ஒரு குறிப்பிட்ட சேமிப்பை எப்போதும் நாம் வைத்துக் கொள்வதுதான் சிறந்தது.

இப்போதே...

இப்போதே...

கடைசி விசிலை கால்பந்து நடுவர் ஊதும் வரை, 'இன்னும் கேம் போய்ட்டுதாம்ப்பா இருக்கு' என்று நாம் சொல்வதுண்டு. அதுபோலவே, 'அய்யோ, 45 வயசுக்கு மேல ஆயிடுச்சே! இன்னும் ஒரு பைசா கூட சேர்க்கவில்லையே' என்று வருத்தப்படாதீர்கள். அப்படி ஒன்றும் லேட் ஆகிவிடவில்லை. இப்போதுகூட நீங்கள் உங்கள் பணத்தை பாதுகாப்பாக சேமிக்க நிறைய வழிகள் உள்ளன. அதனை முதலில் கண்டறியுங்கள்.

ஆலோசகர்

ஆலோசகர்

ஒரு மேனேஜர் இல்லாத கால்பந்து அணியை நாம் பார்க்க முடியாது. அந்த அணியை சிறப்பாக வழி நடத்திக் கொண்டு செல்வதிலும், இக்கட்டான நேரங்களில் சிறந்த அறிவுரை சொல்வதற்கும் என்று அவருடைய பங்கு கால்பந்து விளையாட்டில் முக்கியமானது. அதுபோல, நம் பணத்தை கவனமாகக் கையாளுவதற்கு, நல்ல இடத்தில் முதலீடு செய்வதற்கு நமக்கும் ஒரு நல்ல ஆலோசகர் தேவைதானே!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 lessons football can teach you about personal finance

Whether you agree or not with him, the spread of football fever thanks to the Brazil World Cup is difficult to miss. There’s excitement and thrills that are associated with the sport. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X