பயம் இல்லாமல் சுவிஸ் வங்கியில் பணத்தை கொட்டிக்கொண்டே இருக்கும் இந்தியர்கள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூரிச்: உலகளாவிய பொருளாதாரம் வேகம் குறைந்து போய் நிலையில், சுவிஸ் வங்கி முறையின் இரகசிய சுவர்கள் உடையத் தொடங்கியிருந்தாலும் கூட, சுவிஸ் வங்கிகளிலுள்ள இந்தியர்களின் பணத்தின் அளவு சுமார் 2 பில்லியன் சுவிஸ் பிராங்குகளாக (ரூ.14000 கோடி அளவிற்கு) உயர்ந்துள்ளது.

 

2013-ம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டை விட, 40 சதவீதத்திற்கும் மேலான பணத்தை, அதாவது சுமார் 1.42 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் அளவிற்கு இந்தியர்கள் தங்களுடைய பணத்தை சுவிஸ் வங்கிகளில் வைத்துள்ளனர். சுவிஸ் நேஷனல் பேங்க் என்ற பெயரில் அந்நாட்டில் இயங்கி வரும் மத்திய வங்கி ஆணையம் இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

சுவிஸ் வங்கிகளில் உள்ள பிற வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பண இருப்பு குறைந்து கொண்டே செல்கிறது மற்றும் இது மிகவும் அதிகமாக 1.32 டிரில்லியன் சுவிஸ் பிராங்குகளாக (1.56 டிரில்லியன் டாலர்கள் அல்லது ரூ.90 இலட்சம் கோடிகளுக்கும் மேலாக) 2013-ம் ஆண்டின் முடிவில் இருந்தது.

இந்தியர்களின் பணம்

இந்தியர்களின் பணம்

2012-ம் ஆண்டு யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு, சுவிஸ் வங்கிகளில் இருந்த இந்திய பணத்தின் அளவு மூன்றில்-ஒரு பங்காக குறைந்தது. அப்போது தான் கருப்பு பணத்தை ஒழித்தே ஆக வேண்டும் என்று இந்தியாவில் பல இயக்கங்கள் கிளம்பிய தருணம் அது.

1.95 பில்லியன் பிராங்குகள்
 

1.95 பில்லியன் பிராங்குகள்

சுவிஸ் வங்கிகளிலுள்ள இந்திய வாடிக்கையார்களின் பண மதிப்பு 1.95 பில்லியன் பிராங்குகள், அவை இந்தியாவின் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் நேரடியாகவும், மற்றும் 77.3 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் சொத்துக்களை நிர்வகிக்கும் ஏஜன்ட்கள்' அல்லது 'பினாமிகளின்' பெயரிலும் 2013-ம் ஆண்டின் முடிவில் உள்ளது.

திமிர் பிடித்த சுவிஸ்

திமிர் பிடித்த சுவிஸ்

இந்தியா மற்றும் பிற நாடுகளால் வெளிநாட்டு வாடிக்கையாளர்களைப் பற்றிய விபரங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கடுமையான அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அந்நாட்டின் சட்ட வல்லுநர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புலனாய்வு குழு

புலனாய்வு குழு

இந்தியர்களால், உலக நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தைப் பற்றிய விபரங்களை சேகரிப்பதற்காக ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை இந்தியா உருவாக்கியுள்ளது. இந்த கறுப்பு பணத்தில் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் வைக்கப்பட்டுள்ள பணமும் அடங்கும்.

பிராங்கு

பிராங்கு

ஒரு சுவிஸ் பிராங்கு, இந்திய ரூபாயின் மதிப்பின் படி 67.33 ரூபாய் ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Black money SIT's task just got tougher: Indians' Swiss stash rises to Rs 14,000 cr

Indians' money in Swiss banks has risen to over two billion Swiss francs (nearly Rs 14,000 crore), despite a global clampdown against the famed secrecy wall of Switzerland banking system.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X