வங்கி சேவையில் அதிக லாபம் பெற வேண்டுமா?? இத படிங்க பாஸ்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பணம் சம்பாதிக்கிறோம், செலவழிக்கிறோம். முடிந்ததை சேமிக்கிறோம். இந்த சேமிப்பிலும் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால் இலாபம் பன்மடங்கு அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

 

நீங்கள் பயன்படுத்தும் வங்கி சேவைகளைக் கொண்டே மேலும் சேமிப்பை அதிகரிக்க முடியும். எப்படி என தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? இந்த கட்டுரையில் அந்த வழிமுறைகளைத் தெரிந்து கொள்வீர்கள். தொடர்ந்து படியுங்கள்.

வங்கி கணக்கு

வங்கி கணக்கு

உங்களுடைய பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் இடங்களில் ஒன்றாக வங்கிகள் உள்ளன. 2008-ம் ஆண்டின் நிதிச் சிக்கல்களுக்குப் பின்னர், வங்கிகளுக்கான காப்பீட்டுத் கணக்குகளின் அளவை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது ஒரு வைப்பாளருக்கு 250,000 டாலர்களாக உள்ளது. இதனால் நம் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து அதிகப்படியான லாபத்தை பெற முடியும்.

வங்கிகளில் செலவு அதிகம்

வங்கிகளில் செலவு அதிகம்

பொதுவாகவே பரஸ்பர நிதிகள் (Mutual Fund) மற்றும் தரகு நிறுவனங்களை விட குறைந்த அளவு வட்டியைத் தரக்கூடிய நிறுவனங்களாகவே வங்கிகள் உள்ளன. அதே சமயம், வங்கிகள் வசூலிக்கும் கட்டணங்கள் அதிகமாக உள்ளன. குறைந்தபட்ச தொகையை கணக்கில் வைத்திருக்காத போது அவை வசூலிக்கும் கட்டணம் அதிகமாகவே உள்ளன.

வங்கி வரவும், பணவீக்க செலவும்
 

வங்கி வரவும், பணவீக்க செலவும்

நீங்கள் வங்கிகளில் வட்டியாகப் பெறும் பணத்தை, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருந்து வரும் பணவீக்கம் அனைத்து விதமான பொருள்கள் மற்றும் சேவைகள் வழியாக செலவழியச் செய்து விடுகிறது. குறைவான அளவு பணவீக்கம் இருந்தால் கூட இவ்வாறு நடப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

வட்டி விகிதங்கள்

வட்டி விகிதங்கள்

ஒவ்வொரு வங்கியும் வட்டியைக் கணக்கிட வேறு வேறு முறைகளை கையாளுகின்றன. பல்வேறு கணக்குகளிலிருந்தும் எவ்வளவு பணத்தை நீங்கள் பெறுகிறீர்கள் என்பதை அறிய விரும்பினால், 'வருடத்திற்கு பெறும் சதவீத அளவை' கேளுங்கள். வழக்கமாகவே வட்டி விகிதம் மற்றும் வருடாந்திர சதவீத அளவு இரண்டையுமே வங்கிகள் கொடுக்கும், ஆனால் வருடாந்திர சதவீத அளவே அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

சிறந்த வட்டி விகிதங்கள்

சிறந்த வட்டி விகிதங்கள்

சர்ட்டிபிகேட் ஆஃப் டெபாசிட்ஸ் எனப்படும் சேமிப்பு வழிமுறை உங்களுக்கு பணம் வழங்குவதை உறுதி செய்வதுடன், 250,000 டாலர்களுக்கு காப்பீடும் செய்யப்பட்டிருக்கின்றன.

சர்ட்டிபிகேட் ஆஃப் டெபாசிட்ஸ்

சர்ட்டிபிகேட் ஆஃப் டெபாசிட்ஸ்

இந்த வழிமுறையில் உங்களுடைய பணத்தை குறைந்த பட்சம் 3 மாதங்களிலிருந்து, 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக எடுக்கக் கூடாது. உங்களுடைய சர்ட்டிபிகேட் காலம் முடிவதற்கு முன்னரே வட்டி விகிதங்கள் குறைந்திருந்தால், அது வங்கிக்கு அதிர்ஷ்டம். பின்னர் வங்கியினர் உறுதியளித்த வட்டியை மட்டுமே கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுக்கும் நேரத்தில் வட்டி விகிதம் அதிகரித்து விட்டால், சர்ட்டிபிகேட்டில் குறிப்பிட்டுள்ள குறைந்த வட்டியே உங்களுக்கு கிடைக்கும்.

இண்டர்நெட்

இண்டர்நெட்

ஆன்லைன் வங்கி மற்றும் பணச் சந்தை கணக்குகளும் கூட அற்புதமான வாய்ப்புகளாக உள்ளன. வழக்கமான வங்கி கணக்களை விட அதிகமான வரவை இவை கொடுக்கின்றன மற்றும் குறிப்பிட்ட கால அளவிற்கு உங்களுடைய பணத்தை லாக்-அப் செய்ய வேண்டிய தேவையும் இல்லை.

ஏ.டி.எம் கட்டணங்கள்

ஏ.டி.எம் கட்டணங்கள்

ஏ.டி.எம் இயந்திரங்களை நமது வசதிக்கேற்றபடி பயன்படுத்த முடிந்தாலும், இதற்காக நாம் கொடுக்கும் விலை அதிகரித்துக் கொண்டே உள்ளது. வேறொரு வங்கியில் நீங்கள் பணம் எடுக்கும் பொது ரூ.20/- ஐ கட்டணமாக செலுத்துகிறீர்கள். நமது வரவுகளில் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விட இந்த கட்டணங்களே போதும்.

பெஸ்ட் டீல்

பெஸ்ட் டீல்

ஒரு காரை வாங்க வேண்டும் என்றால் நான்கைந்து டீலர்களை பார்த்து, பணத்தைக் கொடுத்தால் தான் நடக்கும். அதேபோல தான், கடைகள் பலவற்றிலும் உள்ள விலைகளை ஒப்பிட்டு பார்த்து பொருட்களை வாங்குவது போலவே, வங்கிகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஒரு வங்கியில் பங்குதாரராக இருந்தால் இலவசமான செக் சேவையை பெறலாம் அல்லது உங்களுடைய பே-செக்கை நேரடியாக டெபாசிட் செய்யும் வசதியை பெறலாம்.

வங்கி சேவைகளுக்கு இணையதளம்

வங்கி சேவைகளுக்கு இணையதளம்

இணையத்தைப் பயன்படுத்தி கட்டணங்கள், வரவுகள் மற்றும் டெபாசிட் செய்வதற்கான குறைந்தபட்ச தேவைகள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க்க முடியும். பல இணைய தளங்கள் நாடு முழுவதும் இருக்கும் வங்கிகளில் கிடைக்கும் அதிகபட்ச வரவுகள் மற்றும் குறைவான செலவு வைக்கும் வங்கி சேவைகள், சேமிப்புகள், கடன்கள் மற்றும் டெபாசிட் விகிதங்களை நாம் அறிந்திட முடியும்.

இணையவழி பில் பேமண்ட்

இணையவழி பில் பேமண்ட்

மின்னணு முறையில் உங்களுடைய பில்களை செலுத்துவது தொந்தரவுகளை குறைக்கும். இணைய வழி திட்டங்களை உங்களுடைய தனிநபர் நிதி மோலாண்மையுடன் இணைத்துக் கொள்ளும் போது, உங்களுடைய பேங்கிங் மற்றும் நிதி திட்டங்களை நன்றாக செய்ய முடியும். ஆனால் இதில் சற்றே கவனமாக இருப்பதும் அவசியம். சில விற்பனையாளர்கள் மட்டுமே விலை அதிகமாகி உள்ளதை தங்களுடைய பில்களில் வாடிக்கையாளர்களுக்கு சுட்டிக்காட்டுவார்கள்.

வங்கியில்லா வங்கி சேவை

வங்கியில்லா வங்கி சேவை

வங்கிகளில் கிடைப்பதைப் போன்ற சேவைகளை எண்ணற்ற நிதி நிறுவனங்கள் அளித்து வருகின்றன. கிரெடிட் யூனியன் கணக்குகள்; பரஸ்பர நித நிறுவனத்தின் பணச் சந்தைகளின் நிதிகள்; மற்றும் புரோக்கரேஜ் கேஷ் மேனேஜ்மெண்ட் கணக்குகள் ஆகியவற்றை இவற்றிற்கு உதாரணமாக சொல்லலாம். இத்தைகைய திட்டங்களை கண்டறிந்து அதிகப்படியான லாபத்தை பெறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Smart banking and saving basics

It's all about saving the money you earn by banking smart, and using your banking for financial growth.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X