கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வரி சுமையை குறைப்பது எப்படி??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தக் காலத்தில், கணவனும் மனைவியும் சேர்ந்து வேலைக்குப் போனால்தான் குடும்பச் செலவுகளை ஓரளவு கட்டுப்படுத்தி வாழ்கையை சுமுகமாக நடத்திச் செல்ல முடியும். நம் நாட்டில் லட்சக்கணக்கான தம்பதிகள் வேலைக்குப் போய் சம்பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

 

அவர்கள் தங்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்பது மட்டுமல்ல, அந்த வருமானத்தில் பிடிக்கப்படும் வரிகளையும் இருவரும் சேர்ந்து புத்திசாலித்தனமாக சேமிக்கவும் முடியும்.

வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளை உங்கள் இருவரில் குறைந்த வருமானம் பெறுபவரின் கணக்கில் சேர்த்து விட்டால் இன்னும் அதிகமாக வரிப் பணத்தை சேமிக்கலாம். அதுபோல நிறைய வழிகள் உள்ளது, தொடர்ந்து படிக்கவும்...

வரி பிராக்கெட்டுகள்

வரி பிராக்கெட்டுகள்

உதாரணத்திற்கு, உங்கள் வருமானம் ரூ.6 லட்சம் என்றும், வைப்பு நிதிகளிலிருந்து ஒரு ரூ.25,000 வருகிறது என்றும் வைத்துக் கொள்வோம். இந்த ரூ.6.25 லட்சத்தில் ரூ.5 லட்சம் 10% வரி பிராக்கெட்டிலும், மீதமுள்ள ரூ.1.25 லட்சம் 20% வரி பிராக்கெட்டிலும் வரும். இப்போது, உங்கள் மனைவியின் வருமானம் ரூ.4.5 லட்சம் என்று கொள்வோம். இது ரூ.5 லட்சத்துக்குக் குறைவு என்பதால் இந்த வருமானம் 10% வரி பிராக்கெட்டில் வரும். இப்போது, உங்கள் பெயரில் உள்ள வைப்பு நிதிகளை உங்கள் மனைவி பெயருக்கு மாற்றி விட்டால் அந்த வட்டியில் கிடைக்கும் வருமானத்தை அவருடைய 10% வரி பிராக்கெட்டிலேயே அடக்கி விடாலாம். இதன் மூலம் ஓரளவு பணத்தை சேமிக்க முடியும்.

ஹோம் லோன்

ஹோம் லோன்

தற்போது, ரூ.1.5 லட்சம் வரை வீட்டுக் கடன் வட்டிக்கு வரி விலக்கு உண்டு. வருமான வரி 80C பிரிவின் கீழ் ரூ.1 லட்சம் வரை பிரின்சிபல் தொகையில் வரி விலக்கு உண்டு. வீடு கட்டுவதற்கான கடன் பெறுவதன் மூலம் இருவருமே நிறைய வரி செலுத்துவதைத் தவிர்க்கலாம். இருவரும் தனித்தனியாக ரூ.2.5 லட்சத்திற்குப் பெரும் வரிச் சலுகைகளை விட, இருவரும் சேர்ந்து ரூ.5 லட்சத்திற்கு வரிச் சலுகைகளை அதிகம் பெறலாம்.

வீட்டு வாடகை
 

வீட்டு வாடகை

தம்பதிகள் வாடகை வீட்டில் தங்கியிருந்தால், இருவரும் வாடகைத் தொகையைப் பிரித்துக் கொள்வதின் மூலம் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளை அனுபவிக்க முடியும்.

பயணச் சலுகை

பயணச் சலுகை

விடுமுறைக் கால பயணக் கட்டணங்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தற்போது, 4 ஆண்டுகளுக்கு இரு முறை குடும்பத்துடன் சுற்றுலா சென்று இந்த வரிச் சலுகைகளை அனுபவிக்க முடியும். முதல் மற்றும் 3ஆம் ஆண்டுகளில் உங்கள் LTAஐயும், 2ஆம் மற்றும் 4ஆம் ஆண்டுகளில் உங்களுடைய மனைவியின் LTAஐயும் பயன்படுத்தினால், ஒவ்வொரு ஆண்டும் இந்த வரிச் சலுகைகளை அனுபவிக்கலாம். எந்த ஆண்டுக்கு க்ளெய்ம் செய்கிறீர்களோ, அதே ஆண்டிலேயே அதைப் பயன்படுத்திவிட வேண்டும் என்பதும் முக்கியமான ஒன்று.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A few smart ways in which working couples can save tax together

There are millions of couples in the country who opt to work and save together. Here are a few tips that can help couples to save on tax through various measures and boost their income in hand.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X