காப்பீடு எடுக்கும் முன் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 9 அடிப்படை சொற்கள்.!

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சில நேரங்களில், பல இடத்தில் நாம் தெரியாத சொற்களால் குழம்பி போய் இருப்போம். குறிப்பாக செல்லவேண்டும் என்றால் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் என்பது போன்ற பல இடங்கள் உள்ளது.

இப்படி தெரியாத சொற்களால் பல வித சிக்கல்களிலும் மாட்டிக் கொள்வோம். நீங்கள் ஒரு காப்பீடு பாலிசி எடுக்கப்போகும் போதோ அல்லது அதற்கான திட்டம் தீட்டும் போதோ நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில சொற்கள் உள்ளது. அதை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

இன்ஷூர்ட்

இன்ஷூர்ட்

இன்ஷூர்ட் என்பவர் தன் வாழ்க்கையோ அல்லது சொத்துக்களையோ காப்பீடு செய்பவர்.

இன்ஷூரர்

இன்ஷூரர்

இன்ஷூரர் என்பது நீங்கள் யாரிடம் இருந்து பாலிசியை பெற்றீர்களோ, மற்றும் குறிப்பிட்ட நிழ்கவின் போது யார் உங்களுக்கு காப்பீடு தொகையை வழங்குகிறதோ, அந்த நிறுவனமாகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், எல்.ஐ.சி., பிர்லா சன்லைஃப், ஐ.சி.ஐ.சி.ஐ ப்ருடென்ஷியல், எச்.டி.எஃப்.சி. ஸ்டாண்டர்ட் லைஃப், எஸ்.பி.ஐ. லைஃப் ஆகியவர்கள் எல்லாம் இன்ஷூரர்கள் ஆவார்கள்.

நாமினி

நாமினி

காப்பீடு செய்தவர் இறந்து போனால், பாலிசி தொகையை அவர் சார்பில் பெறுபவரே நாமினியாவார். பாலிசியை வாங்கும் போது காப்பீடு பெறுபவரால் நியமிக்கப்படுபவரே நாமினியாவார். இருப்பினும் பாலிசி காலத்தின் போது நாமினியின் பெயரை மாற்றிக் கொள்ளலாம்.

பாலிசி ஹோல்டர்

பாலிசி ஹோல்டர்

பாலிசி ஹோல்டர் என்பவர் பாலிசியை வாங்கும் நபர் அல்லது பாலிசியை தன் பெயரில் கொண்டிருப்பவர். அவர் தான் அதற்கான பிரீமியத்தை கட்டுபவர். ஒருவர் தனக்காகவும் அல்லது தன் குடும்ப உறுப்பினர்களாகவும் பாலிசியை வாங்கலாம்.

ப்ரீமியம்

ப்ரீமியம்

ப்ரீமியம் என்பது குறிப்பிட்ட இடைவெளிகளில் அல்லது ஒரே தவணையாக காப்பீடு நிறுவனத்திற்கு காட்டப்படும் தொகையாகும்.

சம் அஷூர்ட் (காப்பீடு தொகை)

சம் அஷூர்ட் (காப்பீடு தொகை)

காப்பீடு எடுத்தவர் இறக்கும் போதோ அல்லது காப்பீடு முதிர்வு காலம் எட்டிய பின் நாமினி பெறப்போகும் குறைந்தபட்ச தொகையாகும்.

ஃப்ரீ லுக் பீரியட்

ஃப்ரீ லுக் பீரியட்

பாலிசி வாங்கிய பிறகு வரும் ஆரம்ப கட்ட காலம் (பெரும்பாலும் 15 நாட்கள்) இதுவாகும். நீண்ட கால ஒப்படைப்பிற்கு முன்னால் பாலிசியை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் காலம் இதுவாகும். ஏதேனும் சந்தேகம் இருந்தால், சரியான காரணத்தோடு மாற்றிக் கொள்ளலாம்.

மெச்சூரிட்டி (முதிர்ச்சி)

மெச்சூரிட்டி (முதிர்ச்சி)

ஒவ்வொரு பாலிசியும் குறிப்பிட்ட காலம் வரை தான் செல்லுபடியாகும். அந்த காலம் முடிவடையும் போது, அந்த பாலிசி முதிர்ச்சி (மெச்சூரிட்டி) அடைந்து விட்டதாக கருதப்படும். முதிர்ச்சி அடைந்த பிறகு, காப்பீடு செய்யப்பட்ட தொகை முழுவதும் பெறப்படும்.

லாப்ஸ் (காலக்கழிவு)

லாப்ஸ் (காலக்கழிவு)

சலுகை காலத்திற்குள் ஒருவர் ப்ரீமியம் கட்ட தவறினால், அந்த பாலிசி லாப்ஸ் ஆனதாக கருதப்படும். இருப்பினும் சில வரையறைகளை நிறைவேற்றினால் அதை மீண்டும் திருத்தம் செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

9 Basic Insurance Terms You Should be Aware

Here are few terms which you should be aware if you are planning for a policy or planning to opt one.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X