பயண காப்பீட்டின் முக்கியதுவம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவில் பல காப்பீட்டு திட்டங்கள் உள்ளது குறிப்பாக உயிர் காப்பீடு, வாகன காப்பீடுகள் மிகவும் பிரபலமானவை. இந்நிலையில் பயண காப்பீட்டு பற்றி பலருக்கும் சரியான புரிதல் இருப்பதில். இதை தெளிவுப்படுத்த ஒரு சில உதாரணங்களோடு பயண காப்பீட்டை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

ஷர்மிளா என்பவர் பெங்களூரூவில் வசிக்கும் ஒரு ஐ.டி. நிறுவன ஊழியராவார். இருப்பினும் அவருடைய வயதான பெற்றோர்கள் கொல்கட்டாவில் வசித்து வந்தனர். அதனால் இந்த இரண்டு நகரங்களுக்கு இடையே அவர் அடிக்கடி பயணிக்க வேண்டியதாயிருந்தது; அதுவும் குறைந்த கால அவகாசத்தில். இதனால் ஒவ்வொரு வருடமும் ஷர்மிளாவின் பயணச் செலவுகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

பயண காப்பீட்டின் முக்கியதுவம்!!

 

இந்த செலவில் பெரும் பகுதி விமான பயணச்சீட்டுக்களுக்கு சென்று விடுகிறது. மேலும் இந்த பயணச்சீட்டுக்களை இணையதளம் மூலம் அவர் வாங்குவதால், விற்பனையாளரின் இணையதளத்தில் வழங்கப்படும் கூடுதல் காப்பீடு கட்டணத்தை அவர் தேர்ந்தெடுப்பதில்லை. இருப்பினும் ஒவ்வொரு முறை பயணிக்கும் போதும் எதிர்பாராத இடர்பாட்டை எடுக்கிறோமே என அவர் கவலை கொண்டார்.

விஷயம் என்னவென்றால், விற்பனையாளர்கள் வழங்கும் இவ்வகை காப்பீடுக்கு உங்கள் பயணத்தொகை செலவில் இருந்து 10% வசூலிக்கின்றனர். அது அதற்கான மதிப்பை கொண்டுள்ளதா? பல நேரங்களில் உள்நாட்டு பயணத்திற்கு நீங்கள் காப்பீட்டை தவிர்க்கலாம்.

சில நேரங்களில், உங்கள் பயண உடைமைகள் தொலைந்து போனாலோ அல்லது கடைசி நிமிடத்தில் உங்கள் பயண திட்டம் ரத்து செய்யப்பட்டாலோ, பாலிசி எடுப்பது உதவிடும்; ஆனாலும் கூட இது கட்டாயம் கிடையாது. இருப்பினும் காப்பீடு இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் இடர்பாட்டை சில நேரங்களில் எடுக்க கூடாது. அவ்வகையான சூழ்நிலைகளை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்?

பயண காப்பீட்டின் முக்கியதுவம்!!

எப்போது பயண காப்பீட்டை தவிர்க்க கூடாது?

ஷர்மிளாவின் விஷயத்தில், பெங்களூரு-கொல்கட்டா இடையே பயணிப்பது பெரிய ஆபத்தை ஏற்படுத்த போவதில்லை. ஆனால் விலை உயர்ந்த ஒரு விடுமுறைக்கு (உள்நாட்டிலேயே அல்லது வெளிநாட்டில்) ஷர்மிளா திட்டமிட்டிருந்தால், அப்போது பயண காப்பீட்டை பெறுவதில் அர்த்தம் இருக்கும். ஒரு வேளை வெளிநாட்டு பயணம் என்றால், போதிய பயண காப்பீட்டை பெறுவது விசா தேவைகளின் ஒன்றாகும்.

இருப்பினும், பயண காப்பீடு வாங்குவது கட்டாயம் இல்லையென்ற போதிலும், சரியான பாலிசி மூலம் உங்கள் பயண செலவிற்கு ஒரு பின்னணி வைத்துக் கொள்வது நல்லதே. நீங்கள் இணைக்கும் விமானங்கள் மூலம் பயணம் செய்யும் சூழலில், முதல் விமானம் தாமதமானால் இரண்டாம் விமானத்தை சரியான நேரத்தில் பிடிக்க முடியாமல் போகலாம். இதில் உங்கள் தவறு எதுவும் இல்லை. அப்போது விமான நிலையத்தில் மாட்டிக் கொள்வது நல்லதல்ல தானே. அதனால் இவ்வகை தருணங்களில் காப்பீடு பயனுள்ளதாகவே இருக்கும்.

பயண காப்பீட்டின் முக்கியதுவம்!!

 

கடைசி நிமிடங்களில் பயணத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டாலும் கூட பயண காப்பீடு பெரிதும் உதவிடும். உதாரணமாக, தன் பெற்றோர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் ஷர்மிளா தன் ஐரோப்பிய பயணத்தை தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது என வைத்துக் கொள்வோம். பயண தேதியை உறுதி செய்ய முடியாமல் போகும் போது அதனுடன் சம்பந்தப்பட்டிருக்கும் விலை உயர்ந்த ஹோட்டல் வாடகை மற்றும் பயண செலவுகள் ஆகியவைகளை ஈடு செய்ய பயண காப்பீடு கண்டிப்பான ஒன்றாக மாறுகிறது.

அதே போல், சூறாவளி புயல் காலத்தில் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வது பல இடர்பாடுகளை ஏற்படுத்தலாம். அதனால் பயண காப்பீடு வாங்கினால், பயண ரத்து அல்லது குறுக்கீடு போன்ற நிதி சார்ந்த ஆபத்துக்களை சமாளிக்க உதவிடும்.

பயணத்தில் காப்பீடு செலவு பயணச் செலவுடனே அடங்கும். வெளிநாட்டில் ஷர்மிளாவிற்கு உடம்பு சரியில்லாமல் போய் மருத்துவ கவனிப்பு தேவைப்பட்டால் என்ன செய்வது? மருத்துவ அவசரங்கள் என்பது பெரிய பிரச்சனையே. அவர் பயணமாகும் இடத்தில் மருத்துவ செலவுகள் மிகவும் அதிகமானதாக இருக்கலாம். அதனால் தனக்கு ஆகும் இவ்வகை எதிர்பாராத செலவுகளை காப்பீடு பார்த்துக் கொள்வதை அவர் உறுதி செய்ய வேண்டும். அதே போல் தன்னுடைய மருத்துவ நிலையை காப்பீடு அளிப்பவரிடம் பயணம் மேற்கொள்பவர் தெரிவித்து விட வேண்டும்.

சரியான பயண காப்பீட்டை தேர்ந்தெடுப்பது:

விமான பயணச்சீட்டுக்களை வாங்கும் போது விற்பனையாளர் அளிக்கும் பயண காப்பீடு தொகை தேர்வை ஷர்மிளா எப்போதுமே தேர்ந்தெடுப்பதில்லை என ஆரம்பத்திலேயே நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். இன்னும் சிலரோ காப்பீடு விவரங்களை படிக்காமலேயே அந்த தொகையை கட்டி விட முன் வருவார்கள். இதன் காரணமாக எதற்கெல்லாம் காப்பீடு உள்ளது என்பதும் எதற்கெல்லாம் காப்பீடு இல்லை என்பதும் அவர்களுக்கு தெரிவதில்லை.

அதனால் விற்பனையாளரின் இணையதளத்தில் குருட்டுத்தனமாக காப்பீட்டை வாங்குவதற்கு பதிலாக, காப்பீட்டை வாங்குவதற்கு பயணம் மேற்கொள்பவர்கள் சில விற்பனையாளர்களிடம் நேரில் சென்று விசாரிக்க வேண்டும். காப்பீட்டாளரின் இணையதளத்திற்கு சென்று தொகைகளை (சேர்ப்பு மற்றும் விலக்குகள் உட்பட) ஒப்பீடு செய்ய வேண்டும். அப்போது தான் நியாயமான செலவில் அனைத்து வித பாதுகாப்பையும் அளித்திடும் ஒரு நல்ல பயண காப்பீட்டை நம்மால் வாங்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Should you buy travel insurance?

Sharmila is an IT professional living in Bengaluru. Her aging parents, however, live in Kolkata. Forced to shuttle between the two cities frequently, and usually on short notice, Sharmila runs up high travel expenses each year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more