ஒய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்கும் முன் இதையெல்லாம் கண்டிப்பா கவனிங்க..!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: உங்களுடைய முதலீட்டில் திட்டங்களில் ஓய்வுக்கான சேமிப்பு முக்கிய பங்கை வகிக்கிறது. ஒய்வூதிய முதலீட்டு திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கும் போது மிகமுக்கியமாக பார்க்க வேண்டியது தற்போதைய வயது, எந்த வயதில் ஓய்வு பெற விரும்புகிறீர்கள் ஆகியனவாகும்.

நீங்கள் உங்கள் பணியில் முன்கூட்டியே ஓய்வு பெற விரும்பினால், பின்வரும் சில நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளலாம்.

ஓய்வு பெறும் வயது

ஓய்வு பெறும் வயது அந்தந்த நபரைப் பொறுத்து வேறுபடும் என்பதால், உங்களுக்கு ஓய்வு பெறும் பொறுத்தமான வயது எது என்பதை முடிவு செய்யவும். சிலருக்கு நாற்பது வயது என்பது ஓய்வு பெறும் வயதாக இருக்கும். வேறு சிலருக்கு அறுபது வயதே முன்கூட்டி ஓய்வு பெறும் வயதாக இருக்கும். ஆகையால் எந்த வயதில் நீங்கள் ஓய்வு பெற விரும்புகிறீர்கள் என்பதை திட்டமிட்டு அதற்கேற்ப முடிவு எடுங்கள்.

ஒய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்கும் முன் இதையெல்லாம் கண்டிப்பா கவனிங்க..!

ஓய்வுக்கால வருமானம்

உங்கள் ஓய்வுக்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு திட்டமிடப்பட்ட ஓய்வுக்கால வருமானம் உதவி செய்யும். உங்களுடைய ஓய்வுக்காலத்தில் என்ன செலவுகளை செய்ய விரும்புகிறீர்கள் என்பதை பொறுத்து ஓய்வுக்கால வருமானத்தை அமைக்க்கவேண்டும். தங்கள் ஓய்வுக்காலத்தை பொழுதுபோக்கும் நிகழ்வுகளுடன் கொண்டாடவோ அல்லது விடுமுறை பயணங்கள் மேற்கொள்ள விரும்புவர்களுக்கு ஓய்வுக்கால வருமானம் சற்றே கூடுதலாக இருக்கவேண்டும். ஓய்வுக்காலத்தை வீணாக கழிக்காமல், பகுதி நேர வேலையில் ஈடுபட விரும்புவர்களுக்கு பெரிய தொகை தேவைப்படாது. ஓய்வுக்காலத்தில் மேற்கொண்டு வருமானமீட்டும் எந்த வேலையையும் பார்க்க நீங்க விரும்பவில்லையெனில், வேலை பார்க்க திட்டமிட்டுள்ளவர்களை விடவும் சற்று கூடுதலான தொகையை வருமானமாக பெறுமாறு திட்டமிடல் வேண்டும்.

தற்போதையை நிதி நிலைமை அறிதல்

தற்போதைய நிதி நிலைமையை அறிதலில் தொடங்கி எதிர்கால வருமானத்தை சரியாக திட்டமிடுதலில் உங்களுடைய நிதி மூலதன திட்டமிடல் பணி முடிகின்றது. ஆக, ஓய்வுக்காலத்தின் போது ஆண்டு செலவீனம் எவ்வளவு, அதற்கேற்ப எவ்வாறு உங்கள் சேமிப்பை திட்டமிட்டு அமைக்கவேண்டும் போன்ற கேள்விகளுக்கு பதில் தேடுவதின் மூலம் உங்களுடைய தற்போதையை நிதி நிலை என்ன, வருங்காலத்தில் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.

ஒய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்கும் முன் இதையெல்லாம் கண்டிப்பா கவனிங்க..!

திட்டமிட்டு முதலீடு செய்

இப்போதே நன்கு திட்டமிட்டு முதலீடு செய்தால், உங்களுடைய ஓய்வுக்காலத்தில் உதவி செய்யும். முதலீட்டை திட்டமிடும் அதே வேளையில், தேவையற்ற செலவுகளை குறைப்பது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். திட்டமிட்டு செலவு செய்வது முதலீடு செய்ய தேவையான பணத்தை சேமிக்க உதவும்.

நிதி ஆலோசகர்

உங்களால் திட்டமிடவோ, அல்லது முடிவு செய்த திட்டத்தை செயல்படுத்தவோ இயலாமல் போனால், நிதி ஆலோசகரை அணுகுவது புத்திசாலித்தனமான செயலாகும். உங்களுடைய நிதி நிலைமை, எதிர்கால இலக்குகள் போன்றவற்றை ஆய்வு செய்து அதற்கேற்றவகையில் சிறந்த மாற்றுத் திட்டங்களை நிதி ஆலோசகரால் பரிந்துரைக்க இயலும். நிதி ஆலோசகருக்கு தரவேண்டிய ஆலோசனைக் கட்டணத்தை பற்றி நினைத்து நிதி ஆலோசகரை அணுகும் முடிவைப் தாமதப்படுத்தினால், பிற்காலத்தில் அதிக பணத்தை செலவிட வேண்டியது இருக்கும். வருமுன் காப்பதே சிறந்தது. எனினும் நிதி ஆலோசகரால் இலக்குகளை நிர்ணயித்து உதவ மட்டுமே முடியும், அதை செயல்படுத்துவது உங்கள் கைகளில் தான் உள்ளது.

ஒய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்கும் முன் இதையெல்லாம் கண்டிப்பா கவனிங்க..!

கண்காணித்தல்

நிதி நிலைமைகளை கணித்து திட்டமிட்டால் மட்டும் போதாது, மாறாக தொடர்ச்சியாக நடக்கும் மாற்றங்களை கண்டுகொண்டு அதற்கேற்ப வகையில், உங்களுடைய திட்டங்களிலும் செயல்பாடுகளிலும் தேவைப்படின் மாற்றங்களை செய்யவும் தயாராக இருக்கவேண்டும். சந்தையின் நீக்குபோக்குகளை மதிப்பிடுதல், நாட்டின் தற்போதையை நிதி நிலைமைகளை அறிந்து வைத்தல் போன்றவையும் உங்களுடைய ஓய்வுகால வாழ்க்கையை திட்டமிட பேருதவி செய்யும்.

ஒய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்கும் முன் இதையெல்லாம் கண்டிப்பா கவனிங்க..!

தொடாதே, ஆபத்து !!!

எக்காரணம் கொண்டும் ஓய்வுக்கால சேமிப்பில் கைவைக்க வேண்டாம். ஓய்வுக்கால சேமிப்பில் தொடுவது ஆபத்தை நோக்கி இழுத்துச்செல்லும். ஓய்வுக்கால சேமிப்பில் விழும் ஒவ்வொரு வெட்டும், நீங்கள் எதிர்ப்பார்க்கும் ஓய்வுக்கால வருமான அளவை பெரிய அளவில் குறைக்கும். ஓய்வைப்பற்றி திட்டமிடுதல் எளிது, ஆனால் போட்ட திட்டத்தை கச்சிதமாக முடித்தால் தான் திட்டமிட்டதற்கும் உங்கள் ஓய்வுக்கால வாழ்க்கைக்கும் அழகு சேர்க்கும்.

மேற்கண்ட எளிய நடவடிக்கைகளை கையாண்டு, ஓய்வுக்காலத்தை மகிழ்ச்சியோடு கழிக்க வாழ்த்துக்கள்!!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Planning for Early Retirement? Here are Few Things to Consider

Savings for retirement forms a vital part of your investment and all the decisions depend on your age and at what age you are planning to retire. If you are one of them who are planning for early retirement, than here are few measures you can consider.
Story first published: Saturday, January 17, 2015, 16:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X