அவசர காலத்திற்கு உதவும் வகையில் சேமிப்பை உருவாக்குவது எப்படி??

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஒரு அவசர நிலை அல்லது சில்லறை தேவைகளுக்கான சேமிப்பு ஒன்றை வைத்திருப்பது ஒவ்வொரு முறையும் ஒருவருக்கு வைத்திய செலவு அல்லது வேலையிழப்பு போன்ற எதிர்பாராத தருணங்களில் உதவக்கூடியதாக இருப்பதால் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு தனி மனிதருக்கும் தேவையான அவசரகால நிதி எவ்வளவாக இருக்கவேண்டும்?

நீங்கள் பரம்பரை பணக்காரர் அல்லது அதிக சொத்து உடைமைகளை வைத்திருகாமல் மாதச் சம்பளக்காரராக இருந்தால். உங்களுக்கு சுமார் நான்கு முதல் ஆறுமாத சம்பளத்தையும் வருமானத்திற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் உள்ள சுயதொழில் புரிவோர் குறைந்தது ஒரு வருடத்திற்கான மாதாந்திர செலவுகளுக்கினையான தொகையை சேமிப்பாக ஒதுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

அவசர காலத்திற்கு உதவும் வகையில் சேமிப்பை உருவாக்குவது எப்படி??

அவசரகால நிதி கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கவேண்டுமா அல்லது ஒரே தவணையில் உருவாக்க வேண்டுமா ?

தேவைப்படும் ஒரு பெரிய தொகைக்கு முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். அதேபோல் அவசரகால நிதியையும் முன்கூட்டியே திட்டமிடுவதுடன் கொஞ்சம் கொஞ்சமாக அதை செய்வதும் அவசியமாகிறது. ஏனெனில் இதில் அதிக அழுத்தம் கொடுப்பது உங்கள் அன்றாட நிதித் தேவைகளை பாதிக்கலாம்.

உங்கள் அவசரகால நிதியை உருவாக்க உங்கள் மாதாந்திர வருவாயில் ஒரு பகுதியை உதாரணமாக 10 முதல் 15 சதவிகிதத்தை ஒதுக்கலாம். மேலும் வருவாய்க்கு அதிகமான போனஸ், டிவிடெண்ட், வரி திருப்பம் போன்றவற்றை இந்த சேமிப்பிற்கு மாற்றலாம்.

அவசர காலத்திற்கு உதவும் வகையில் சேமிப்பை உருவாக்குவது எப்படி??

அவசர காலத்தில் உடனடியாகத் திரும்பப்பெறும் வகையில் பணத்தை வைக்க உள்ள வெவ்வேறு முதலீட்டு வழிகள் என்னென்ன?

சேமித்து வைப்பதன் நோக்கம் உடனடியாகத் திரும்பப் பெறுவது என்பதால், எளிதில் கையாளக்கூடிய சற்று வருமானத்தையும் தரக்கூடிய வழிமுறைகள் குறைவாகவே உள்ளன. உங்கள் சேமிப்பின் அளவு உங்களின் அவசரகாலத் தேவையைப் பொறுத்தது என்பதால் அதற்கேற்ற வெவ்வேறு முதலீட்டு வழிகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

உதாரணமாக, அவசரகாலத்தில் பயன்தரக்கூடிய உங்கள் அவசரகால நிதியின் அளவு குறைவாக இருப்பின், அதனை 4 முதல் 7 சதவிகித வட்டி தரும் சேமிப்புக் கணக்கில் போட்டு வைக்கலாம். அதுவே ரூபாய் ஒரு லட்சத்திற்கு அதிகமாகவும் ஐந்து லட்சத்திற்கு குறைவாகவும் இருந்தால் ஸ்வீப் அக்கவுன்ட் எனப்படும் சேமிப்பு, நடப்பு மற்றும் வைப்பு போன்ற கலப்பு வசதிகளைத் தரும் வங்கிக்கணக்கில் போட்டு வைக்கலாம். 6 முதல் 7 சதவிகித வட்டி தருவதுடன் இதனை உடனடியாக பெற்றுக்கொள்ளவும் முடியும். அவசரத் தேவைக்கான சேமிப்பிற்கான மற்றுமொரு வசதி கடன் நிதிகள் எனப்படும் டெப்ட் பண்டுகள் ஆகும்.

அவசர காலத்திற்கு உதவும் வகையில் சேமிப்பை உருவாக்குவது எப்படி??

ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு 24 மணி நேரத்தில் பெறக்கூடிய குறைந்த ஆபத்துடைய நாணைய சந்தை முதலீடுகளை தேர்வு செய்யலாம்.

எனவே ஒரு முழு மற்றும் தொடர்ந்த முயற்சியுடன் உங்கள் நிதிக் குறிக்கோள்களை பாதிக்காமல் அவசரகாலத்திற்குத் தேவையான நிதியை சிரமமின்றி உருவாக்க முடியும் என்பதை இப்போது தெரிந்து கொண்டீர்களா? அப்புறம் என்ன யோசனை உடனடியாக தொடக்கி புத்திசாலியா இருங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Guide to help you build contingency or emergency fund

Contingency fund recommended to be maintained without any falter time and again helps an individual to tide over uncalled for events such as medical exigencies, job loss or other such situations.
Story first published: Saturday, February 7, 2015, 16:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X