'ஆயுள் காப்பீடு', 'சுகாதாரக் காப்பீடு' இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இன்றைய வாழ்க்கை முறையில் தனி நபருக்கான சுகாதாரக் காப்பீடு மற்றும் உயர் காப்பீடு எனப்படும் ஆயுட்காலக் காப்பீடு இரண்டும் மிக அவசியமாகிறது.

 

எனவே காப்பீட்டுத் திட்டத்தைத் துவங்கும் முன் காப்பீட்டாளர்கள், காப்பீடு அல்லது இன்சூரன்ஸ் திட்டங்களைப் பற்றிய சில எளிய அடிப்படை புரிதலையும் கொண்டிருத்தல் வேண்டும்.

சந்தையில் பல்வேறு வகையான காப்பீட்டுத் திட்டம் இருப்பதால் குழப்பம் நேருகிறது. ஆயுள் காப்பீட்டிற்கும், சுகாதாரக் காப்பீட்டிற்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை இங்குக் காணலாம்.

ஆயுள் காப்பீட்டுத் திட்டம்

ஆயுள் காப்பீட்டுத் திட்டம்

ஆயுள் காப்பீடு வாங்குவதின் அடிப்படை நோக்கம் வாழ்நாளை மையமாகக் கொண்டது. அதாவது, காப்பீட்டாளர் இறப்பிற்குப் பின், அவரது குடும்பம் அல்லது தன்னைச் சார்ந்துள்ளவர்களைக் காக்கும் பொருட்டு இதைத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

பலன் அனைத்தும் நாமினிக்கு சேரும்..

பலன் அனைத்தும் நாமினிக்கு சேரும்..

இதை ஆயுட்காலக் காப்பீடு என்றும் அழைப்பர். இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணம் மற்றும் போனஸ் ஆகிய அனைத்தும் காப்பீட்டாளர் இறந்த பின் அவர் குறிப்பிட்டுள்ள நாமினிக்கு நன்மைகள் சேர்க்கிறது.

நிதி பற்றாக்குறை
 

நிதி பற்றாக்குறை

காப்பீட்டாளர் இறப்பிற்குப் பிறகு அவரது குடும்பத்தினர்கள் நிதி பற்றாக்குறை இன்றி வாழ்க்கையை நடத்த இத்தகைய திட்டங்கள் பெரிதும் உதவும். இதனால் காப்பீட்டாளருக்கு எந்த அனுகூலமும் அடைய முடியாது. எனினும் கூடுதல் நன்மைகளான நோய், விபத்தினால் மரணம் அல்லது இயலாமை போன்ற காலங்களில் பயன்பெறலாம்.

சுகாதாரக் காப்பீடு

சுகாதாரக் காப்பீடு

சுகாதாரக் காப்பீடு மருத்துவமனை செலவுகள் அல்லது மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகளை மையமாகக் கொண்டது.

பணத் தட்டுப்பாட்டு

பணத் தட்டுப்பாட்டு

இத்திட்டங்கள் உயிரிழப்பிற்கு எந்த அனுகூலமும் பயப்பதில்லை. சுகாதாரக் காப்பீடு எடுத்துக் கொள்ளாதவர் நோய்வாய்ப்படும் நெருக்கடியான நேரத்தில் பணத் தட்டுப்பாட்டைச் சந்திக்கலாம்.

கவனிக்க வேண்டியவை

கவனிக்க வேண்டியவை

மருத்துவத் தேவையை ஈடு செய்யும் இது போன்ற திட்டம் எடுத்துக் கொள்வது நல்லது. காப்பீடு நமக்கும் எவ்வளவு பணம் அனுமதி அளிக்கப்படும், பிணைக்கப்பட்டுள்ள மருத்துவமனை, பணமில்லா வசதி போன்றவற்றைப் பொருத்துத் தேர்வு செய்தல் வேண்டும்.

தவணை தொகை

தவணை தொகை

கால அவகாசம், வயது போன்றவற்றைப் பொருத்து காப்பீட்டின் சந்தா அமையும். இளம் வயதினருக்குத் தொகை சற்று குறைவாகவே இருக்கும்.

முடிவுரை

முடிவுரை

நிதிப் மற்றும் குடும்பப் பொறுப்புடைய ஒருவருக்கு ஆயுள் காப்பீடும் சுகாதாரக் காப்பீடும் காட்டாயம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is the Difference Between Health Insurance and Life Insurance?

As there are various types of insurance in the market, one can get easily confused. Now, let us understand the basic difference between life and health insurance.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X