இதற்கு எல்லாம் பான் கார்டு கண்டிப்பா வேணும் பாஸ்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் பல்வேறு பணப் பரிவர்த்தனைகளுக்குப் பான் நம்பர் எனப்படும் நிரந்தக் கணக்கு எண் கட்டாயமாகத் தேவைப்படுகிறது.

 

இந்த எண் குறிப்பிடப்படும்போது வருமான வரித் துறைக்கு அதன் தொடர்பான அனைத்து விவரங்களையும் தொடர்புப்படுத்திக்கொள்ள உதவும் என்பதால் இது அவசியமானதாகிறது.

வருமான வரி செலுத்துபவர் பற்றிய விவரங்களை ஆராயவும் அவரது பல்வேறு முதலீடுகள், கடன்கள் மற்றும் பிற வர்த்தக நடவடிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் இந்த இணைப்புகள் உதவும். இந்நிலையில் பான் எண் அவசியமாகத் தேவைப்படும் சில முக்கிய இடங்களையும், அதன் வழிமுறைகளையும் பார்ப்போம்...

பணப் பரிவர்த்தனை

பணப் பரிவர்த்தனை

ஒரு லட்சம் அல்லது அதற்கு அதிகமான மதிப்புடைய வியாபாரத்திற்கு நிரந்தரக் கணக்கு எண் அல்லது பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது டீலர்களுக்குத் தரப்படும் தொகை மற்றும் தங்க நாணயம் வாங்குதல் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

ஹோட்டல் அல்லது உணவு விடுதி

ஹோட்டல் அல்லது உணவு விடுதி

ஒரே நேரத்தில் இருபத்தைந்தாயிரம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ஒரு ஹோட்டலுக்கோ அல்லது உணவு விடுதிக்கோ தரப்படும்போது பான் எண் குறிப்பிடப்பட வேண்டும்.

விமானப் பயணம்

விமானப் பயணம்

வெளிநாடு செல்ல ஒரே சமயத்தில் பயணக் கட்டணமாகச் செய்யப்படும் செலவு இருபத்தைந்தாயிரம் அல்லது அதற்கு மேல் இருந்தால் விமான நிறுவனங்கள் பான் எண்ணை அவசிமாகப் பெறப்படுகிறது.

ஆயுள் காப்பீடு
 

ஆயுள் காப்பீடு

ஒரு வருடத்திற்குள் ஐம்பதாயிரம் அல்லது அதற்கதிகமான தொகைக்கு ஆயுள் காப்பீட்டுப் பிரிமியத் தொகை செலுத்தும் போது பான் எண் அவசியம்.

வைப்பு நிதி திட்டம்

வைப்பு நிதி திட்டம்

வங்கிக் கணக்கு அல்லது அஞ்சலகத்தில் செலுத்தப்படும் ஐம்பதாயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமான வைப்புத் தொகை.

தொலைப்பேசி இணைப்பு

தொலைப்பேசி இணைப்பு

தனிநபர் அல்லது அலுவலகத்திற்குத் தொலைப்பேசி அல்லது செல்ஃபோன் இணைப்புப் பெறத் தரப்படும் விண்ணப்பத்தில் கூடப் பான் எண்ணை முக்கியமாக ஆவணமாகக் கருதப்படுகிறது.

காசோலை

காசோலை

ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள வங்கி ஆணை அல்லது காசோலைகளை வங்கிகளில் பெற விண்ணப்பிக்கும் போது பான் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது அவசியம்

பங்கு அல்லது கடன் பத்திரங்கள்

பங்கு அல்லது கடன் பத்திரங்கள்

ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் பங்கு அல்லது கடன் பத்திரங்கள் வாங்க அல்லது விற்கப்படும்போது செய்யப்படும் ஒப்பந்தத்தில் பான் எண் குறிப்பிடப்பட வேண்டும்.

வங்கிக் கணக்கு

வங்கிக் கணக்கு

வங்கிக் கணக்கை துவக்கும் நபர் இளையவராக அதாவது மைனர் இருந்தால், அவருடைய தந்தை, தாய் அல்லது காப்பாளர் பான் எண் குறிப்பிடப்பட வேண்டும்.

பண அட்டை

பண அட்டை

வங்கிகள் உங்கள் சேமிப்பு கணக்கின் மீது நீங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாங்க விரும்பினால், இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது பாண் எண் கட்டாயமாகக் கோரப்படுகிறது.

மியூச்சுவல் ஃபண்டு

மியூச்சுவல் ஃபண்டு

மியூச்சுவல் ஃபண்டு யூனிட்டுகள் அல்லது பங்குகள் வாங்கும்போது அதன் மதிப்பு ஐம்பதாயிரம் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால்

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

ஐம்பதாயிரத்திற்கு அல்லது அதற்கும் அதிகமான தொகைக்கு ஒரு நிறுவனம், அமைப்பு அல்லது ரிசர்வ் வங்கி வெளியிடும் கடன்பத்திரங்கள் அல்லது பங்குப்பத்திரங்கள் வாங்கும்போது பாண் எண்ணை கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும்

வாகனம்

வாகனம்

கடந்த சில மாதங்களாக எந்த ஒரு வாகனம் அல்லது மோட்டார் வாகனங்களை வாங்கும்போதும் பாண் எண் பெறப்படுகிறது. இதன் மூலம் அரசு அதிக மதிப்புடைய உங்களின் ஒவ்வொரு பரிவர்த்தனையும் கவணிக்கத் துவங்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

படிவ எண் 60ஐ

படிவ எண் 60ஐ

பான் எண் இல்லாமல் மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்புபவர் படிவ எண் 60ஐ சமர்ப்பிக்க வேண்டும். விவசாயத்தின் மூலம் வருமானம் பெறும் நபர் படிவ எண் 61ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

13 Financial Transactions Where Quoting PAN is Mandatory

A Permanent Account Number (PAN) Card is compulsory in India for a number of transactions.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X