வருமான வரி படிவத்தில் குழப்பமா? இத படிங்க போதும்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வருமான வரித்துறை வருமான வரி தாக்கலை எளிமையாக்கவும், மேம்படுத்தவும் பழைய படிவங்களை நீக்கி விட்டு இந்த ஆண்டிற்கான புதிய படிவங்களை வெளியிட்டுள்ளது.

இதனால் நீங்கள் 2014-15 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கலை மிகவும் எளிமையான முறையில் செய்ய முடியும்.

இப்புதிய படிவங்களில் சில புதிய இணைப்புகள் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. படிவங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் சில சந்தர்ப்பங்களில் எளிமையாகவும், மற்ற சந்தர்ப்பங்களில் சிக்கலாகவும் உள்ளன.

வருமான வரி படிவத்தில் குழப்பமா? இத படிங்க போதும்..

2014-15 நிதியாண்டிக்கான வருமான வரி தாக்கல் செய்யும் போது, தனிநபர்களின் வெவ்வேறு படிவங்களை நிரப்ப வேண்டும் என்பதைக் கவனிக்க.

படிவம் ஐ.டி.ஆர். I

இது சஹாஜ் படிவம் என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் இது தனிநபருக்கானது. இரண்டாவதாக மனதில் கொள்ள வேண்டியது, சம்பளம் மட்டுமே கொண்ட நபர்கள் இதனைப் பயன்படுத்த முடியும்.

எனவே நீங்கள் வணிகம் மூலமாக வருமானம் பெறுபவர் என்றால் உங்களால் இந்தப் படிவத்தை பயன்படுத்த இயலாது. எனினும் படிவம் ஐ.டி.ஆர். 1 ல் வட்டி வருமானம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவசாய வருமானம் ரூபாய் 5000 க்கு மேல் இருக்கக் கூடாது.

வருமான வரி படிவத்தில் குழப்பமா? இத படிங்க போதும்..

படிவம் ஐ.டி.ஆர் 2

படிவம் ஐ.டி.ஆர் 2, படிவம் ஐ.டி.ஆர் 1 ல் இருந்து சற்று மாறுபட்டது. மூலதன ஆதாய வருமானம் கொண்டவர்கள் இதனை நிரப்ப வேண்டும்.

எனவே நீங்கள் வருமானம் மற்றும் மூலதன ஆதாய வருமானம் பெறுபவர் என்றால் நீங்கள் இந்தப் படிவத்தை நிரப்ப வேண்டும். இந்தப் படிவம் தனி நபர் மற்றும், ரூபாய் 5000-க்கு கீழ் விவசாய வருமானம் பெறுபவர்களுக்கானது. இந்தப் படிவமும் தனிநபரால் மட்டுமே பயன்படுத்த முடியும்.

படிவம் ஐ.டி.ஆர் 4எஸ்

முந்தைய இரண்டு படிவங்கள் சம்பளம் மற்றும் மூலதன ஆதாயங்கள் கொண்ட தனிநபர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற வேளையில், இந்தப் படிவம் வர்த்தக வருமானம் கொண்ட நபர்களால் நிரப்பப்பட வேண்டும். இதன் பொருள் விவசாய வருமானம், மூலதன வருமானம் முதலியவற்றைக் குறிப்பிட முடியாது.

வருமான வரி படிவத்தில் குழப்பமா? இத படிங்க போதும்..

மேலும் வருமான வரி படிவங்களை தாக்கல் செய்யும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்.

முன் இருந்த படிவங்களில் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டவை குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இதில் அவ்வாறு இல்லை. எனினும் வங்கி விபரங்கள் குறித்த சில தொடர்புகள் இணைக்கப்பட வேண்டும்

உதாரணமாக, நீங்கள் பயன்படுத்தும் வங்கி கணக்கின் ஐ.எஃப்.எஸ்.சி. எண்ணைக் குறிப்பிட வேண்டும். உங்கள் வங்கிக் கணக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் எந்தப் பரிமாற்றமும் செய்யப்படாமல் செயலற்றுக் கிடந்தால் அதனைத் தவிர்க்கவும்.

வருமான வரி படிவத்தில் குழப்பமா? இத படிங்க போதும்..

புதிய படிவங்களில் ஐ.எஃப்.எஸ்.சி. எண் உள்ளது. உங்கள் கணக்கில் வரவு பெறுவதற்காக இந்த எண் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருமான வரி படிவம் நிரப்பும் போது நீங்கள் உங்கள் ஆதார் எண்ணையும் குறிப்பிட வேண்டும். வருமான வரி தாக்கல் செய்யும் தேதி ஆகஸ்ட் 31, 2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Which Forms To Use While Filing Your Income Tax Returns For FY 2014-15?

The Income Tax Department has notified a new set of forms this year doing away with the old ones. You can now use the much simpler ones for filing income tax returns for FY 2014-15 or assessment year 2015-16.
Story first published: Monday, August 10, 2015, 12:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X