உங்க பணத்தை இப்படியும் சேமிக்கலாம்.. கலக்கலான ஐடியா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: விலைவாசி ஒவ்வொரு நாளும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது நம் கண் முன்னே தெரிகிறது. இதனால் சாமானிய மனிதனுக்குத் தக்க முன்னேற்பாடுகள் செய்து கொள்ளவில்லை என்றால் வாழ்க்கை நடத்துவது ரொம்ப கஷ்டம்.

நாம் அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய சில சிறிய விஷயங்களில் எதிர்காலப் பணத் தட்டுப்பாடுகளைத் தீர்க்கும் சேமிப்பை உருவாக்க முடியும். இதைச் செய்ய நீங்கள் அதிபுத்திசாலியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

சின்ன விஷயத்திலும் கணிசமான கவனத்தையும், பொறுப்பையும் வைத்தாலே போதும். இதை எப்படி, எங்கே செய்ய வேண்டும் என்பதை இப்போ பார்க்கலாம் வாங்க.

திட்டமிடல்

திட்டமிடல்

பணத்தைச் சேமிக்க முழு முதல் வழி உங்கள் தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர செலவுகளைத் திட்டமிடுவது. எதற்காக எவ்வளவு செலவழிக்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் முன்கூடியே முடிவுசெய்யலாம்.

இது செலவழிப்பதில் நீங்கள் கவனமுடன் இருக்க உதவும் என்பதோடு உங்கள் தினசரி செலவு வரையறைகளைத் தாண்டாமல் பார்த்துக்கொள்ளவும் உதவும்.

 

பாழாய்ப்போன கிரெடிட் கார்டு

பாழாய்ப்போன கிரெடிட் கார்டு

நீங்க கிரெடிட் கார்டுல செலவழிக்கிறதுல கிங்கா? அப்ப தயவுசெஞ்சு அதை வீட்டிலேயே வச்சுட்டுப் போங்க.

கிரெடிட் கார்டு பாக்கெட்டில் இருந்தால் கடையில பாக்குறதயெல்லாம் வாங்கத்தோணும். கை சும்மா இருக்காது. எல்லாத்தையும் வாங்கனும்னு மனசு துடிக்கும்.

 

 

மின்சாரக் கட்டணம்

மின்சாரக் கட்டணம்

உங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ, கரென்ட் பில்ல கட்டித்தான் ஆகவேண்டியிருக்கு. பில்லை குறைத்துக் கட்ட முடியாது. ஆனால் மின்சாரம் செலவு பண்றத பார்த்துப் பண்ணலாம். புத்திசாலியாய் இருந்து மின்சாரத்தைச் சேமித்துக் கட்டணத்தில் ஒரு பெரும் பகுதியைக் குறைக்கலாம்.

அறைகளில் நீங்கள் இல்லையென்றால் ஏசி-யை நிறுத்தலாம். வாஷிங் மெஷினில் டிரையரை உபயோகிப்பதைத் தவிர்த்து வெயிலில் துணிகளை உலர்த்தலாம். நீங்க பாத்து பாத்துச் செஞ்சா கரென்ட் பில்லு ஷாக் அடிக்காது.

 

 

இரு முறை மட்டுமே சமையல் செய்யுங்கள்

இரு முறை மட்டுமே சமையல் செய்யுங்கள்

ஒரு நாள் முழுவதும் சமைக்கிறேன்னு சமையலறையில் இருக்காதீங்க. மூன்று நான்கு முறை சமையல் செய்வதை விட்டுவிட்டு இருமுறை மட்டும் சமையல் செய்யுங்கள். அதாவது காலை உணவையும் மதிய உணவையும் சேர்த்தே செய்யுங்கள்.

ஒரு நாளில் இருமுறை சமைப்பதன் மூலம் உணவுப் பொருட்கள் செலவையும், ஏன் காஸ் செலவையும் கூடக் குறைக்கலாம்.

 

உங்கள் மதிய உணவை வாங்காதீர்கள்

உங்கள் மதிய உணவை வாங்காதீர்கள்

நீங்கள் வேலைக்குச் செல்பவரானால் நீங்கள் உங்கள் மதிய உணவை எடுத்துச் செல்வதே சிறந்ததாக இருக்கும். அதை வெளியில் வாங்கி உண்பதை அறவே தவிர்க்கவேண்டும்.

இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று வெளியில் வாங்கும் உணவு வீட்டில் செய்வதைக் காட்டிலும் அதிகச் செலவு பிடிக்கும். இரண்டு அது சுகாதாரமாக இருக்குமா என்பதே கேள்விக்குறி தான்.

 

கேன் தண்ணீரை வாங்காதீங்க.. அக்வாகார்டு உபயோகியுங்கள்

கேன் தண்ணீரை வாங்காதீங்க.. அக்வாகார்டு உபயோகியுங்கள்

இதுவும் ஒரு சுலபமான மற்றும் பலன் தரக்கூடிய ஒரு வழி. சுத்தமான தண்ணீரை பருக விரும்பினால் அக்வாகார்டு போன்ற ஒன்றை உபயோகியுங்கள். இது கேன்களில் வரும் தண்ணீரை விடச் சுகாதாரமானது அதே நேரம் சிக்கனமானதும் கூட. ஒரு வருடத்தில் நிறையச் செலவை இதில் மிச்சம் பிடிக்கலாம்.

 

 

கேபிள் இணைப்பிற்குப் பதிலாக டீடிஎச் (DTH)

கேபிள் இணைப்பிற்குப் பதிலாக டீடிஎச் (DTH)

இந்தியாவில் அனைத்து நகரங்களிலும் கேபிள் செட் டாப் பாக்ஸ் இணைப்பைப் பயன்படுத்துகின்றனர். இதற்குப் பதிலாக நீங்கள் டீடிஎச் இணைப்பினைப் பெறுவது நல்லது.

நீங்கள் இதன் மூலம் நிறையப் பணம் மிச்சம் பிடிக்கலாம் ஏனென்றால் உங்களுக்குத் தேவையான சேனல்களுக்கு மட்டுமே நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

 

ஆன்லைனில் எதையும் வாங்காதீங்க

ஆன்லைனில் எதையும் வாங்காதீங்க

நீங்க ஆன்லைன் ஷாப்பிங் பிரியரா? அப்ப எதாவது டிஜிட்டல் பொருட்களை (Ebook, software, songs, movie, etc) வாங்கி அதற்காகச் செலவு செய்யாதீங்க. அதாவது சாஃப்ட்வேர் மற்றும் பதிவிறக்கங்கள் இதில் அடங்கும். ஏனென்றால், இவற்றில் பெரும்பாலானவை நீங்க கொஞ்சம் முயற்சி செய்து தேடினால் இலவசமாகவே கிடைக்கும்.

டாக்டரை விடப் பாட்டி வைத்தியம் மேல்

டாக்டரை விடப் பாட்டி வைத்தியம் மேல்

உங்களுக்கு அழகு மற்றும் உடல் நலன் சார்ந்த அக்கறை இருந்தால் டாக்டரிடம் செல்வதைத் தவிருங்கள்.

சிறிய விஷயங்களுக்கெல்லாம் டாக்டரிடம் செல்வது பெரும் தொகைக்கு வேட்டு வைக்கும். அதற்குப் பதிலாக வீட்டிலுள்ள உங்கள் பாட்டி அல்லது மூத்தவர்களிடம் ஆலோசனைகளைப் பெறுங்கள். இது உங்களுக்கு நல்ல பலன் தரும்.

 

காய்கறி வாங்காதீங்க, வீட்டிலேயே விளையுங்க

காய்கறி வாங்காதீங்க, வீட்டிலேயே விளையுங்க

வரும் காலங்களில் காய்கறிகள் விலை உயரப்போகிறதென்று மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் புதிய பச்சைக் காய்கறிகளை உணவாகக் கொடுக்க வேண்டுமென்றால் அதற்கு நிறையச் செலவு பிடிக்கும். இதற்கு ஒரே தீர்வு வீட்டில் தோட்டம் அமைத்து நாமே பயிரிடுவது. புதிய காய்கறியுமாச்சு.. காசும் மிச்சமாச்சு.

மொபைல் பிளான்

மொபைல் பிளான்

இன்றைய தேதிக்கு தின்னச் சோறு இருக்கோ இல்லையோ, மொபைல் கனெக்ஷன் இருக்கனும். அன்றாடத் தேவையாகிவிட்ட இது இல்லாமல் ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே முடியாது. காசு செலவாகுமென்று மொபைல் உபயோகத்தைத் தவிர்க்கவும் முடியாது. ஆனால், புத்திசாலித்தனமாக இருந்தால், அதிகம் பேசவும் குறைவாகச் செலுத்தவும் கூடிய சில பிளான்கள் கிடைக்கலாம். உங்கள் தேவைக்கேற்ற சரியான பிளானை தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள்.

கார் பைக்கிற்குப் பதிலாகப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்

கார் பைக்கிற்குப் பதிலாகப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்

நீங்கள் பயணம் செய்யக் காரையோ அல்லது பைக்கையோ பயன்படுத்தாமல் பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்யலாம். இது மிகவும் செலவு குறைவு என்பதுடன் நீங்கள் மாணவர் என்றால் இது மிகவும் உகந்ததாக இருக்கும். ஒரு முக்கியமான விஷயம், கழுத்தை நெரிக்கிற காற்று மாசடைந்த டிராபிக்ல நீங்க கஷ்டப்பட்டு வண்டியை ஓட்ட வேணாம்.. எப்புடி....

உண்டி ஒன்னு வச்சுக்குங்க

உண்டி ஒன்னு வச்சுக்குங்க

குழந்தைங்கதான்னு இல்லைங்க. பெரியவங்க கூட உண்டி ஒன்னு வச்சுக்கலாம். அப்பப்ப கிடைக்கிற சில்லரைக் காசை அதில் போட்டு வைக்கலாம். கடைக்கு அல்லது வெளியில் சென்று வரும்போதெல்லாம் கண்டிப்பாக உங்களிடம் சில்லறை மீதம் இருக்கும். அதை அப்படியே செலவு செய்யாமல் இந்த உண்டியலில் போட்டு வைத்தால் அவசரகாலத்தில் உதவும்.

நண்பர்களிடம் உதவியைக் கோருங்கள்

நண்பர்களிடம் உதவியைக் கோருங்கள்

எல்லாருக்கும் நண்பர்கள் இருக்காங்க. அவங்களை உபயோகிச்சுகிறது நமது சாமர்த்தியம். உங்களுக்கு அவசரமாக ஏதாவது பணம் அல்லது உதவித் தேவைப்பட்டால் அவர்களிடம் கேட்க முடியும். ஒருவேளை, உங்கள் நண்பர் ஒரு தூரத்து ஊரில் இருந்து அங்கே உங்களுக்கு ஒரு வேலையிருந்தால், நீங்கள் பயணம் செய்து அங்குச் சென்று வேலையை முடிப்பதைவிட அவரை முடித்துத் தருமாறு கேட்கலாம். நேரமும் பணமும் மிச்சம்.

வாங்குவதையெல்லாம் பண்டிகைக் காலங்களில் வாங்குங்கள்

வாங்குவதையெல்லாம் பண்டிகைக் காலங்களில் வாங்குங்கள்

பணத்தைச் சேமிக்க இதுவும் நல்ல ஒரு வழி. உங்கள் மனைவி தேவையான அனைத்தையும் ஒரு பண்டிகைக் காலத்தில் வாங்கிக் கொள்ளலாம். தீபாவளி போன்ற பல பண்டிகைக் காலங்களில் நல்ல தள்ளுபடி விலையில் பொருட்கள் கிடைக்கும்.

சிகரெட், புகையிலை பான் போன்ற கெட்ட பழக்கங்களை நிறுத்துங்கள்

சிகரெட், புகையிலை பான் போன்ற கெட்ட பழக்கங்களை நிறுத்துங்கள்

ஏன், மதுப் பழக்கத்தையும் கூட நிறுத்தலாம். ஒரு பான் அல்லது சிகரெட் கண்ணிற்குத் தெரியாமல் ஒரு நாளைக்கு 100 முதல் 200 ரூபாய் வரை செலவு வைத்துவிடும். ஒரு நாளைக்கு இரண்டு பாகெட் சிகரெட் புடிக்கிறவங்க எல்லம் இந்த நாட்ல இருக்காங்க.

மது இன்னும் விலை அதிகம் என்பதுடன் உடலுக்குத் தீங்கானதும் கூட. அதனால், இது போன்ற கெட்ட பழக்கங்களை நிறுத்துவதன் மூலம் அடுத்த 20 வருடங்களில் ஒரு வீட்டை வாங்குமளவிற்குக் காசை மிச்சப் படுத்தலாம். இதை எல்லத்தையும் தாண்டி இதெல்லாம் உடம்புக்குக் கேடு என்பது தான் முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டிய விசயம்.

 

ரயில் அல்லது விமான டிக்கட்டை ஆன்லைனில் வாங்குங்கள்

ரயில் அல்லது விமான டிக்கட்டை ஆன்லைனில் வாங்குங்கள்

நீங்க இதை ஆன்லைனிலேயே பண்ணலாம். பலர் இதைப் பயன்படுத்தறாங்க. உங்களுக்கு அவசரமாக அடுத்த நாளே வெளியூர் செல்ல வேண்டுமென்றால் நீங்கள் அதனை உடனடியாக ஆன்லைனில் பதிவு செய்யலாம். நடுவில் தரகர் இல்லையென்பதால் இது நிறையப் பணத்தைச் சேமித்துத் தரும். இதை நீங்கள் விமான டிக்கெட்டிற்கும் செய்யலாம்.

கட்டணங்களை ஆன்லைனில் செலுத்துங்கள்

கட்டணங்களை ஆன்லைனில் செலுத்துங்கள்

உங்கள் கட்டணங்களைக் கெடுத் தேதிக்குள் கட்ட வேண்டியது அவசியம். இல்லையென்றால் ஒரு பெரிய அபராதத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்.

இது உங்கள் இஎம்ஐ அல்லது மாதாந்திர தவணைக்கும் பொருந்தும். ஒரு முறை தவறினால் ஒரு பெரிய அபராதமும் மறுபடியும் அதே தவறை செய்தால் அபராதம் இரு மடங்காகவும் வாய்ப்புள்ளது.

 

மல்டிப்ள்க்ஸே தான் வேணுமா? படத்தை வீட்ல பாக்கக்கூடாதா?

மல்டிப்ள்க்ஸே தான் வேணுமா? படத்தை வீட்ல பாக்கக்கூடாதா?

இன்னைக்குத் தியேட்டருக்குப் போய்ப் படம் பாக்கனும்னா சாதாரணமாக 500-600 ரூபாய் ஒருத்தருக்குச் செலவாகும். இது பத்தாதுன்னு பாப்கார்ன், கூல்டிரிங்க்ஸ், பார்க்கிங்னு ஒரு பெரிய பில்லை போடுவாங்க.

ஒரு குடும்பத்துக்கு வாராவாரம் படம் பாக்க 2000 ரூபாய் செலவு செய்யறதுகு பதிலா அதே பாப்கார்னோட வீட்டிலேயே படம் பார்க்கலாம். ஒரு ஹோம் தியேட்டர்ல படம் பாக்குறது வாரா வாரம் தியேட்டர்ல பாக்குறதவிட எவ்வளவோ மேல்.

 

 

மணிபே கியாரண்டியுடன் வரும் பொருட்களை மட்டும் வாங்குங்கள்

மணிபே கியாரண்டியுடன் வரும் பொருட்களை மட்டும் வாங்குங்கள்

நீங்கள் ஒரு பொருளை வாங்கி அதில் உங்களுக்குத் திருப்தியில்லை என்றால் அதனைக் கொடுத்துவிட்டுப் பணத்தைத் திரும்பப் பெறுங்கள். இந்த வசதியில்லாத ஒரு பொருளை வாங்குவதில் எந்த ஒரு பயனும் இல்லை.

சிறிய நகரில் வாழுங்கள்

சிறிய நகரில் வாழுங்கள்

கடைசியாக, நிறையப் பணத்தை மிச்சம் படுத்த ஒரு நல்ல வழி ஒரு சிறிய நகரத்தில் வசிப்பது. உங்கள் வேலை இதற்குத் தோதாக இருந்தால் நீங்கள் ஒரு சிறிய நகரத்திற்கு உங்கள் வீட்டை மாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் அங்கே செலவுகள் மிகவும் குறைவு. ஒவ்வொரு பொருளின் விலையும் குறைவானதாக இருப்பதுடன் நீங்கள் எல்லவற்றிலும் சேமிக்கவும் இயலும். அது அன்றாடப் பொருளாக இருந்தாலும் சரி அல்லது சொத்தாக இருந்தாலும் சரி.

சரி முடிவா என்னதான் சொல்றீங்க?

சரி முடிவா என்னதான் சொல்றீங்க?

நீங்கள் யோசித்துப் பார்த்தால் இவற்றை மிக எளிமையாக உங்கள் அன்றாட வாழ்வில் நடைமுறை படுத்த முடியும். அப்புற்மென்ன...கலக்குங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

21 Quick & Simple Tips to Save Money

As you know, day by day cost of every commodity is sky rocketing. It has become difficult for a common man to survive unless he or she takes certain measures.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X