தெரிஞ்சுக்கங்க.. சொத்து அடமான கடனுக்கு வரிச்சலுகை இல்லை!

சென்னை: அடமான கடன்கள் பெரும்பாலும் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை அடமானம் வைப்பதன் மூலம் பெறப்படுகிறது.

அதாவது கடன் தருபவரிடம் அல்லது நிறுவனத்திடம் உங்கள் சொத்துக்களுக்கான ஆவணங்களைக் கொடுத்து அதன் மூலம் நீங்கள் கடனைப் பெற முடியும். ஒருவேளை உங்களால் பணத்தைத் திருப்பி அளிக்க இயலவில்லை என்றால் அவர்கள் உங்கள் சொத்துக்களை உரிமை கோர முடியும்.

தெரிஞ்சுக்கங்க.. சொத்து அடமான கடனுக்கு வரிச்சலுகை இல்லை!

பெரும்பாலானோருக்கு இந்த வகைக் கடன்களுக்கு வரிச்சலுகை இல்லை என்கிற விவரம் தெரிந்திருப்பதில்லை. ஒரு வீட்டுக்கடனை வாங்கினால் அதன் மீதான வட்டி மற்றும் கடன் தொகை மீது வரிச்சலுகை உண்டு. எனினும் இது போன்ற சலுகைகள் எதுவும் அடமான கடன்கள் மீது கிடையாது.

உண்மையில், ஒரு சொத்தை வாங்கும்போது அதற்கான முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணங்களைக் கூட வரிச்சலுகைக்கு வருமான வரிச் சட்ட 80சி பிரிவின் கீழ் பயன்படுத்த முடியும்.

தெரிஞ்சுக்கங்க.. சொத்து அடமான கடனுக்கு வரிச்சலுகை இல்லை!

ஆனால், அடமான கடங்களுக்கு இந்தவகைச் சலுகைகள் கிடையாது. ஆனால் வீட்டுக் கடன்களைத் தேர்வு செய்யாமல் தனி நபர்கள் பெரும்பாலும் இவ்வாறான கடன்களை அவசரப் பயன்பாட்டிற்காக வாங்குகிறார்கள். சில சமயம் மருத்துவச் சிகிச்சை, குழந்தைகள் கல்வி மற்றும் திருமணம் உள்ளிட்ட சில அவசர காரணங்களுக்காக எடுப்பதுண்டு.

எனவே, நீங்கள் அடமான கடன் தேவைப்படும்போது வீட்டுக்கடன் வாங்குவதற்கான சூழ்நிலை இருந்தால், வீட்டுக் கடனையே வாங்குங்கள். ஏனென்றால் இவற்றிற்கு வரிச்சலுகை உண்டு.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+