வரியைச் சேமிக்க இன்சூரன்ஸ் எப்படி உதவுகிறது?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் தனி நபர்கள் பொதுவாகத் தங்கள் நிதி நிலையைத் திட்டமிடும்போது இன்சூரன்ஸை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. இன்னும் சிலர் இன்சூரன்ஸ் தேவையே இல்லை என முடிவுகட்டி விடுகின்றனர்.

இன்னும் சிலர் தங்கள் வேலை செய்யும் நிறுவனம் தரும் இன்சூரன்ஸ் மட்டும் போதும் என்று நிம்மதியாக இருந்துவிடுகிறார்கள்.

உங்கள் எதிர்கால நிதித் தேவைகள் குறித்த திட்டமிடுதலில் காப்பீடு ஒரு முக்கிய இடம் பெறுகிறது. திறமைமிக்க நபர்கள் தங்களுடைய கவலைகளைப் போக்கி பணத்தைச் சேமித்துத் தரும் காப்பீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் வரியைச் சேமிக்கின்றனர்.

வரியைச் சேமிக்க இன்சூரன்ஸ் எப்படி உதவுகிறது?

உங்களுக்கு வரிச் சேமிப்பை பெற்றுத் தரும் வகையில் உள்ள சில காப்பீட்டுத் திட்டங்கள் பற்றிய விவரங்களை இப்போது நாம் பார்க்கலாம். பாலிசி தாரர் இல்லாமல் போகும் பட்சத்தில் காப்பீட்டுப் அல்லது இன்சூரன்ஸ் பாலிசி அவரது குடும்பத்திற்குத் தேவையான அனைத்துச் செலவுகளையும் சமாளிக்க உதவும். அது குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர் பெயரில் இருக்க வேண்டும். இதனால் அவர் இல்லாத நிலையிலும் குடும்ப வருமானத்தை ஈடுகட்ட இயலும்.

ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் யுலிப், எண்டோமென்ட் திட்டங்கள், பணம் திரும்பக் கிடைக்கும் மணிபேக் திட்டங்கள் மற்றும் குறிப்பிட்டக் காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல வகைகளில் கிடைக்கின்றன. இன்சூரன்ஸ் வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

வரச் சலுகைகள்

இந்தப் பாலிசிகளின் மீது செலுத்தப் படும் பிரிமியத் தொகை வருமான வரிப் பிரிவு 80சி யின் கீழ் விலக்கு உண்டு.

தனி நபர்கள் அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வரிச் சலுகை பெறமுடியும்.

இதில் முதிர்வு காலமோ அல்லது பாலிசிதாரரின் இறப்போ எதுவாயினும் போனஸ் தொகை வரிச்சலுகைக்குட்பட்டது..

பென்சன் திட்டங்கள்

பென்சன் திட்டங்கள் இரு நிலைகளைக் கொண்டவை. ஒன்று சேமிப்பு நிலை மற்றொன்று திரும்பப் பெறும் நிலை. திட்டத்தில் சேர்ந்துள்ள நபரின் வருமான காலத்தில் பிரிமியத் தொகை மூலம் அவர் செலுத்தும் தொகை சேமிப்பு நிலையைக் குறிக்கும். இதில் கவனிக்க வேண்டியது இந்தப் பிரிமியத் தொகைகளுக்கு வரிவிலக்கு உண்டு.

வரிச் சலுகைகள்

பிரிவு 80சி-யின் கீழ் வரும் 80சிசிசி-யின் கீழ் வரிச் சலுகை உண்டு.

80சிசிசி பிரிவின் கீழ் அளிக்கப்படும் வரிச் சலுகையின் அதிகபட்ச உச்சவரம்பு ரூபாய் 1.5 லட்சம்.

இதில் சேர்க்கும் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும் மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு தொகை வருமானமாகக் கருதப்படும்.

பயனாளியின் இறப்பிற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்கு வரி கிடையாது.

மருத்துவ இழப்பீடு

ஒருவேளை பாலிசிதாரர் விபத்தைச் சந்தித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அதற்கான செலவை மருத்துவக் காப்பீடு அதனை ஈடுகட்ட உதவும்.

தனி நபர்களைப் பொறுத்தவரையில், பிரிமியத் தொகைக்கு உச்ச வரம்பு 15000 ரூபாய் வரை வரிக் கணக்கீட்டில் கழித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது., இந்த 2015 ஆம் ஆண்டுப் பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு மருத்துவ இழப்பீடு வரிவிலக்கு உச்சவரம்பு 20000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டப் பிரிவு 80டி இன் கீழ் வரிச்சலுகை அளிக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How Buying Insurance Will Help You Save Tax In India?

In India, individuals usually tend to ignore the insurance part when financial planning. Some of the individuals do not think it is necessary to have an insurance policy. While, others are happy with whatever the company is offering in the name of insurance.
Story first published: Sunday, December 13, 2015, 11:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X